மாங்காய் இஞ்சி பொங்கல்

தேதி: July 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மாங்காய் - ஒன்று (சிறியதாக)
இஞ்சி - பெருவிரல் அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (அ) நெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
மாங்காய் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய அரிசி மற்றும் பருப்புடன் மாங்காய், இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி (3 1/2 கப் தண்ணீர் ஊற்றினால் போதும்) பாதி மிளகு சேர்த்து குக்கரில் போட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மீதமுள்ள மிளகு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து பொரித்து வைக்கவும்.
வேக வைத்தவற்றில் பொரித்த கலவையைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சூடான, சுவையான மாங்காய் இஞ்சி பொங்கல் தயார். சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.

இந்தப் பொங்கலை சர்க்கரை நோயாளிகளும் உண்ணும் வகையில் செய்துள்ளேன். அதனால் நெய், முந்திரி, திராட்சை சேர்க்கவில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் (வேண்டுமெனில் சிறிது நெய் சேர்க்கலாம்) நெய் சேர்த்தால் இன்னும் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் :) புதுசா இருக்குங்க. ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ தேங்க்ஸ் டீம்... :)

முதல் ஆளா வந்ததுக்கு மிக்க‌ நன்றி. ரேவாக்கு பூரி போல‌ எனக்கு இந்த‌ வெண்பொங்கல் சரியா வராது... :( ஆனாலும் எப்படி விடுவது? நேற்று சுட‌ சுட‌ செய்து அப்பவே பிரிண்ட் போட்ட‌ ஃபோட்டோஸ் :) செய்துபாருங்க‌ நல்லா இருந்தது.

மாங்காய் சேர்த்து வித்தியாசமா செஞ்சிருக்கீங்க... நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்..

கலை

தேங்க்ஸ் வருகைக்கும், செய்து பார்க்கிறேன்னு சொன்னதுக்கும். கண்டிப்பா செய்துபாருங்க‌ நல்லா இருந்தது.

மாங்காய் இஞ்சி பொங்கல் வித்தியசாமாக‌ உள்ளது சூப்பர், நல்ல‌ புளிப்பாக‌ இருக்கும் அல்லவா மாங்காய் சேர்ப்பதால் புளிப்பு சுவையாக‌ இருக்குமா.

அது நாம் சேர்க்கும் மாங்காயின் புளிப்பை பொருத்ததுப்பா, நான் குழந்தைகளும் என்னவரும் (புளிப்பு பிடிக்காது) சாப்பிடவென்பதால் கொஞ்சம் புளிப்பு குறைவான‌ மாங்காய்தான் எடுத்தேன். இஞ்சியின் சுவையும் மாங்காயின் புளிப்பும் பருப்பின் சுவையும் சேர்ந்து பொங்கலில் கலந்து இருந்ததுப்பா. வித்யாசமாதான் இருந்தது. செய்து பாருங்கள். நன்றி பாலபாரதி.

வித்தியாசமான பொங்கல்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா