வெஜ் ரொட்டி ரோல்

தேதி: July 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - ஒரு பெரிய கப்
சப்பாத்தி - 4
முட்டை - 4
மிளகு - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
சாம்பார் தூள் / மிளகாய், தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
வேக வைத்த பட்டாணி - அரை கப்


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை அரைத்து, காய்கறிக் கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போக வதங்கியதும், தூள் வகைகளைச் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மசாலா வாசனை போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசை கல்லைச் சூடாக்கி சிறிது முட்டை கலவையை ஊற்றி பரப்பிவிடவும்.
அதன் மேல் ஒரு சப்பாத்தியைப் போட்டு லேசாக கரண்டியால் அழுத்திவிடவும். (சப்பாத்தி முட்டையோடு ஒட்டிக்கொள்ளும்).
முட்டை வெந்ததும் எடுத்து ஃபாயில் ஷீட்டில் வைத்து, அதன் நடுவில் தயார் செய்த மசாலாவை வைத்து சுருட்டி மூடிவிடவும்.
டேஸ்டி வெஜ் ரொட்டி ரோல் ரெடி.

சப்பாத்தியை சுருட்டும் போது உடையாமல் இருப்பதற்காக முக்கால் பங்கு மல்டிக்ரெய்ன் ஆட்டாவும், கால் பங்கு மைதாவும் பயன்படுத்தி சப்பாத்தியை தயார் செய்துள்ளேன். வெறும் கோதுமை மாவு என்றால் மைதா மாவு சேர்க்கத் தேவையில்லை.

காய்கறிகளை பெரிய துண்டுகளாகச் சேர்க்க விரும்பினால், அவற்றைத் தனியாக தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உள்ளே வைக்கும் மசாலா உங்கள் விருப்பமே. இதே போல எலும்பில்லாத சிக்கன் (டிக்கா, ஃப்ரை, மசாலா என எது வேண்டுமானாலும்), பனீர் என அனைத்திலும் செய்யலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளே துருவிய சீஸ் கூட சேர்க்கலாம். அல்லது சீஸ் ஷீட் ஒன்றை முட்டையின் மேல் வைத்து, அதன் மேல் மசாலாவை வைத்துச் சுருட்டலாம். ஒன்று அல்லது இரண்டிற்கு மேல் சாப்பிட முடியாது, அவ்வளவு நிறைவாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெஜ் ரொட்டி ரோல் சூப்பர், செய்முறை எளிதாக உள்ளது.

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு, கண்டிப்பா என் பொண்ணுக்கு செஞ்சு கொடுப்பேன். உங்க சமையல் எல்லாமே ரொம்ப நல்லாவும், வித்தியாசமாவும் இருக்கு, எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா எப்பவும் வந்து பதிவிட தான் முடியல, இப்ப சொல்லிட்டேன்.சந்தோஷமா இருக்கு.வாழ்த்துக்கள் வனி!

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ரோல் சூப்பரா இருக்கு வனிதா. சப்பாத்தி எக் கூட உள்ள மசாலா வச்சு பார்க்கவே நல்லா இருக்கு, நிச்சயம் சாப்பிடவும் நல்லா இருக்கும்னு தெரியுது

கலக்கல் வனி . ஈசியான குறிப்பு . ஒரு நாள் செய்துபார்க்கிறோம்.ஆனா இந்த பாயில்பேப்பர் வச்சிதான் ஆகணுமா.

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

பாரதி... முதல் பதிவுக்கு மிக்க நன்றி :)

சுபா... மிக்க நன்றி :) உங்க பதிவை படிச்சதில் எனக்கும் மகிழ்ச்சியா இருக்கு. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

உமா... மிக்க நன்றி :) இங்கே Kaati Zone’ல இப்படி தான் முட்டை வைத்து செய்வாங்க, அதான் அது போல வீட்டில் வேறு வேறு காம்பினேஷன் ட்ரை பண்றது.

ரேவ்ஸ்... ஹிஹிஹீ... அதெல்லாம் உலோலாய்க்கு ;) வெத்து சீனு. அதையெல்லாம் சுற்றியே ஆகனும்னு யோசிக்கப்புடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெஜ் ரோல் சூப்பராக இருக்குங்க பார்த்தவுடனே எடுத்து சாப்பிடணும் போல் இருக்கு என்ன செய்வது நோன்பு வைத்திருக்கிறேன் பத்திரமா வெச்சுக்கோங்க ஈவினிங் எடுத்துக்கிறேன்

கட்டாயம் அப்படியே எடுத்து வைக்கிறேன், நோம்பு முடிச்சு வந்து எடுத்துக்கங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா சூப்பர்.... கண்டிப்பா ட்ரை பண்றேன்

Super vani akka, parkum pothe sapdanum pola eruku. Oru veg role parcellllll......

ரம்யா ஜெயராமன்

வனி,
சூப்பர் ஹெல்தி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பிரியா, ரம்யா, கவிதா... மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா