தேதி: July 19, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வாழைக்காய் - பாதி
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 6
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பாத்திரத்தில் தோலுடன் வாழைக்காயைப் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, அதிகம் குழைந்து விடாமல் அளவாக வேக வைத்தெடுத்து ஆறவிடவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். வாழைக்காய் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மெல்லிய துருவலாக துருவி, அத்துடன் தேங்காய் துருவல், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கையால் லேசாகக் கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து, சோம்பை பொடித்துச் சேர்க்கவும்.

அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வாழைக்காய் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

புளிக்குழம்பு மற்றும் வத்தக்குழம்பு வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.

வாழைக்காய் நன்கு முற்றியதாக இருந்தால், இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்.
Comments
செல்வி அக்கா
ஈஸி, டேஸ்டி பொரியல்... எனக்கு ரொம்ப பிடிக்கும்
செல்வி
செல்வி,
வாழைக்காய் துருவி சேர்ப்பது சூப்பர் ஐடியா
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா