இது என்ன ஊர்... மங்களூர் !! (2)

ரொம்ப பெரிய லீவ் விட்டுட்டனோ? எனக்கு லீவ் கிடைக்கல, அதான் இங்க லீவ் விட்டுட்டேன். என்னப்பா செய்ய நம்ம லீவை இப்போ நாம முடிவு பண்றதில்லை, கடவுளா பார்த்து கொடுத்தாத்தான் உண்டு. சரி அதை விடுங்க... இரண்டாவது நாள் மங்களூரை விட்டு வெளியே செல்ல திட்டம் போட்டோம். ஒன்னுமில்லைங்க, மங்களூர் கேரளா பார்டர், அதனால் நாங்க அதையும் போய் நம்ம பொற்பாதத்தால் தொட்டுட்டு வரலாம்னு போனோம். காலையிலேயே நாங்க தங்கி இருந்த மங்களூர் இண்டர்னேஷனல் ஹோட்டலில் எங்களுக்கு சம பிரெச்சனை, அதனால் வெக்கேட் பண்ணிட்டு காலை டிஃபன் சாப்பிடாமலே கிளம்பினோம். சின்ன சாலை, அதிக போக்குவரத்துன்னு பயணம் கொஞ்சம் சிரமம். பாதி வழியில் எங்க ட்ரைவர் என் முகத்தில் வெடிச்ச கடுகு, கொள்ளு, எள்ளூ எல்லாம் பார்த்துட்டு சாப்பிட காசர்கோடு "JK Residency" என்று ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தினார். அத்தனை சுவையான வீட்டு உணவு போன்ற சுவையை நான் அங்க எதிர் பார்க்கவே இல்லைங்க. சம சூப்பர் ஃபுல் மீல்ஸ். திரும்ப ஒரு வாய்ப்பு கிடைச்சா நான் அங்க தான் போய் மீல்ஸ் சாப்பிடுவேன். பெர்ஃபக்ட் கேரளா உணவு.

வயிற்றுக்கு உணவு போன பின் தான் பயணமும் இனிமையாச்சுங்க. காஸர்கோடில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உள்ளே போகனும். நான் போனது "Bekal Fort (பேக்கல் ஃபோர்ட்)”. 40 ஏக்கர் நிலப்பரப்பில் அரபிக் கடற்கரை ஓரம் பிரம்மாண்டமாய் நிக்குதுங்க. உள்ளே நுழையும் போது ஏதோ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது... கார் பார்க்கிங்ல இருந்து பார்த்தா என்னவோ சூசைட் பண்ணிக்க நின்னாப்பலயே வெள்ளை கவுனோட அந்த ஹீரோயின் உச்சியில் நின்னுகிட்டிருந்துது. அச்சோ பாவம்!! யாரு பெத்த புள்ளையோ!! நுழைவாயிலில் சின்ன ஆஞ்சனேயர் ஆலயம். கோட்டையோடு கொஞ்சமும் ஒத்து போகாததாலோ என்னவோ நான் அதையும் சினிமா செட்டிங்னே நினைச்சுப்புட்டேன். ஆனா அது நிஜமான கோவிலுங்க.

இந்த கோட்டை சிவப்ப நாயக் என்ற மன்னரால் 1650 ஆம் ஆண்டு கடப்பட்டதாம். பின் ஹைதர் அலி காலத்தில் மைசூர் மன்னர்கள் பிடிக்கு வந்தது. நம்ம திப்பு (அதென்ன ‘நம்ம’??, எம்புட்டு எழுதி இருக்கோம் அவரை பற்றி, ஒரு நட்பு தான்) சுல்தானுக்கு இது முக்கியமான கோட்டையா இருந்திருக்குங்க. அவரை வீழ்த்திய பின் ஆங்கிலேயர் கைவசம் போயிற்று. ஆக 1799ல் மெட்ராஸ் பிரெசிடென்சியில் இருந்த காசர்கோடும், கோட்டையும் 1956ல் மாநிலங்கள் பிரிச்சப்போ கேரளாவா போச்சு. சுற்றி பனை மரங்கள் சூழ வித்தியாசமான வழிப்பாதையோடு (வளைந்து வளைந்து போகும், பாதுகாப்புக்காக அப்படி அமைக்கப்பட்டதாம்) கம்பீரமான கோட்டைங்க. இது முழுக்க முழுக்க பாதுகாப்புக்காக மட்டுமே வைத்திருந்திருக்கிறார்கள். எதிரிகளின் நடமாட்டத்தை கவனிக்க பெரிய பெரிய கண்காணிப்பு கோபுரங்கள் (முதல் படத்தை பாருங்க, நாங்களும் மேல இருந்து கேமரா வழியா கண்காணிச்சோம்ல), சுரங்கப்பாதை, ஆயுதங்கள் வைக்க இடம் என மிகப்பிரம்மாண்டமான கோட்டை. கடல் அலை எப்போதும் சுற்றுச்சுவரில் மோதிக்கொண்டே இருக்கிறது. பார்க்க மிக அழகு. இப்போ நினைவுக்கு வருதா? இது எந்த இடம் என்று? எனக்கு என்னவர் சொல்லித்தான் தெரியும், ஆனா நீங்களாம் என்னை விட ஃபாஸ்ட் பிக்கப் ஆச்சே ;) ஆமா நம்ம அரவிந்தசாமி & மனிஷா நடித்த பாம்பே படத்தில் உயிரே பாட்டில் வரும் அதே கோட்டை தான். நானும் இந்த புள்ள மனிஷா ஓடி வந்த இடம் எது, அரவிந்தசாமி பாடின இடம் எதுன்னு தேடினேன், எல்லா கண்காணிப்பு கோபுரமும் அவர் நின்னு கண்ணீர் விட்டு பாடின இடமாட்டுமே தெரியுதுங்க. இவரை கேட்டா எங்கையோ நின்னு பாடினார் விடேன்னு முடிச்சுட்டார்.

என்ன தான் நாயக் கட்டியிருந்தாலும் அதன் பின்னும் பலர் கையில் சிக்கினப்போ மாற்றங்களை இந்த கோட்டை சந்திச்சிருக்கு. கோட்டையின் நடுவில் திப்பு கட்டின பெரிய கண்காணிப்பு கோபுரமும் அப்படித்தான். அதன் பின் ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையின் நடுவே கட்டப்பட்ட ரெஸ்ட் ஹவுஸ் இன்னும் இருக்கு. அனேகமா அங்கே இப்போது சினிமா மக்களை தான் நான் கண்டேன்னு நினைக்கிறேன். நடக்க ரொம்ப தெம்பு வேணுங்க, என்னை மாதிரி காலை உணவை கட்டடிச்சுட்டு போனா நாக்கு தள்ளிடும் ;) பராமரிப்பு பணிகள் நடக்குதுங்க, அழகா தோட்டம் அமைக்கிறாங்க நடுவில். பார்க்க வித்தியாசமா இருந்துது... ராணுவப்படைகளின் கூடாரம் இன்று தென்றல் வீசும் இதமான பூந்தோட்டம். பெங்களூரில் கூட அல்சூர் லேக் அருகில் உள்ள டேன்க் எல்லாம் அனில் ஓடி விளையாடும். பார்க்க அழகாய் இருக்கும். இப்படியே உலகம் அமைதியா அழகா இருந்தா நல்லா இருக்குமே. ம்ம்... 40 ஏக்கர் இடத்தை சுற்றிக்காட்டி வனி டயர்ட் ஆகிட்டேன், ஹப்பா... ஒரே வெய்யில். சில்லுன்னு எதாவது குடிக்கலாம்னா இப்போ இருக்க பெங்களூர் அதை அனுமதிக்க மாட்டங்குது. ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வாரேன்... அப்பறம் பேசுவோம் ;) வரட்டா? பை.

Average: 5 (3 votes)

Comments

படத்தையும், நீங்கள் இடத்தை பற்றி சொன்ன‌ விதமும் என்னவருடன் உடனே போகனும் போல‌ இருக்குக்கா இந்த‌ ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியல‌....

ஆர்வமுடன்,
கீதா

நன்றி வனி ,எனக்கு ஒவ்வொரு ஊரா திரும்பவும் ஞாபகப்படுத்தறீங்க.Karnataka வில் ஏகப்பட்ட tourist places இருக்கு ஷிமோகா,கோவா,ஹம்பி ....etc எல்லாவற்றையும் இனி ஒவ்வொன்றாக எதிர்பார்க்கலாமா?

இன்னொரு தடவை இந்தியா வந்தால் பார்க்க மனசுல ஏற்கனவே ஒரு லிஸ்ட் இருக்கு. சோ... மங்களூர் வனி போஸ்ட்லயே பார்த்துக்கறேன். நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகான இடங்கள் என்று உங்கள் பதிவு & படங்களின் மூலம் தெரிந்து கொண்டோம்..
ரெம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

அருமை வனி . இடங்களூம் ,படங்களும். அழகான உங்க எழுத்தால எங்கள கூப்பிட்டு போய்ட்டிங்க.

Be simple be sample

சீக்கிரம் வாங்க பார்க்க :) முதல் பதிவுக்கு மிக்க நன்றி கீதா. உங்க ஆசை விரைவில் நடக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லா ஊரும் போகத்தான் ஆசை ;) ஆனா சந்தர்ப்பம் அமையனும். பார்ப்போம் எல்லாம் அவன் செயல் :) நன்றி அனு... எல்லா பதிவும் படித்து தவராமல் கருத்தும் பதிவிடுறீங்க, மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏற்கனவே சொல்லிட்டேன் ;) இப்படிலாம் இங்கையே பார்த்துக்கறேன்னு சொன்னா வனி போடவே மாட்டேன். 3:) நன்றி இமா தொடர்ந்து எல்லா போஸ்ட்டும் படிச்சு பதிவிடுறதுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றிங்க. அவசியம் சான்ஸ் கிடைச்சா எங்க ஊர் பக்கம் வந்து பாருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்யூ ரேவ்ஸ் ;) இங்க வந்தா நேரிலேயே கூட்டிட்டு போவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிறைய‌ வரலாற்று தகவல்களுடன் பதிவு அருமை வனி :) ஓசிலயே ஊர் சுத்தி பார்த்திட்டோம். படங்கள் அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

படங்கள் ஒண்ணொண்னும் சும்மா நச்சுனு இருக்கு.
//எங்கையோ நின்னு பாடினார் விடேன்னு முடிச்சுட்டார்// இதைப் படிச்சதும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. முக்கியமானதை தேடியிருக்கீங்க‌ வனி.

என்ன தான் ஓசியில் பார்த்தாலும் நேரிலும் வர வேணும் ;) சரி தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி :) நமக்கு தெரியாத சினிமா டீடெய்ல் கொடுத்தவர் அவர்... அப்போ அதுக்கான தண்டனையை அனுபவிக்க வேணாமா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா