நவரத்தின குருமா

தேதி: December 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்கறிகளின் கலவை - 2 கப் (சதுரங்களாக நறுக்கியது)
(கேரட், பீன்ஸ், கிழங்கு, காலிஃப்ளவர், பட்டாணி)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி விழுது - அரை கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பொரித்த பனீர் - 50 கிராம்
பால் - அரை கப்
கடைந்த பாலேடு அல்லது கீரிம் - 2 மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

காய்கறிகளை அளவான தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பின் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் வேகவைத்த காய்கறிகளை போட்டு சமமாக கிளறவும்.
பின் பால், தயிர், பாலேடு, உப்பு, கரம் மசாலாத்தூள், தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கெட்டியானவுடன் பொரித்த பனீர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குரிப்பை நான் செய்து பார்த்தேன். மிகவும் அருமை. நன்றி.
ஆனால் பனீர்,முந்திரி,போடவில்லை.

The distance between the earth and the sky is not the measure of altitude its the measure of ATTITUDE!!!!!!!!!!