தேதி: July 23, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிப்பயறு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 8 (அ) 10
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.

வெறும் கடாயில் பாசிப்பயறை வறுத்து, தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு, குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் வேக வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போகக் கொதிக்கவிடவும்.

பிறகு புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான, சத்தான பாசிப்பயறு குழம்பு தயார். ஜீரா ரைஸ், சப்பாத்தி மற்றும் வெள்ளை சாதத்திற்கு நல்ல ஜோடி இது.

Comments
மீனா அக்கா, ரொம்ப சத்துள்ள
மீனா அக்கா,
ரொம்ப சத்துள்ள சுவையான குறிப்பு, கண்டிப்பா ட்ரை பண்றேன்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Super a iruku mam
Super a iruku mam
மீனாள்
நல்ல ஈசி ஹெல்தி ரெசிபி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Meenal Krishnan
புளி ஊற்றி செய்தது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு,செய்துட வேண்டியதுதான்.
மீனா
மீனா,
நானும் இது போலே செய்வதுண்டு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி
எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.
Expectation lead to Disappointment
நன்றி
வாழ்த்திய சுபி,நஸிரா,வனிதா,அனு மற்றும் கவிதா மிக்க நன்றி.
Expectation lead to Disappointment