தோழிகளின் உதவியை எதிர்பார்க்கிறேன்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்..கடந்த ஜூலை 3 எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.. மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, 22 நாள் அகிடுச்சு.. டாக்டர் LACTOBOND என்ற TABLET கொடுத்தார் எந்த பலனும் இல்லை... என் மகள்ளுக்கு தற்போது NESTLE LACTOGEN POWDER தான் கொடுத்து வருகிறோம்.

நான் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். அனைத்து தோழிகளின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்....

thanku saran siran.... pump vanguren... try panren...
Faridha thanks sollama irukka mudiyathu pa.. yenna ethaavathu solution kidaikaathanu parthuttu irunthen.... today try panren...

பரவாயில்ல திவ்யா. ஊசி வச்சு ட்ரை பன்னும் போது மார்பகம் காம்புகள் க்ராக் ஆகும் அதனால அதற்கு ஆயிண்ட்மென்ட் போடுங்க சரி ஆகிடும். குழந்தைக்கு பால் கொடுக்கும் 15 நிமிடம் முன் இதை செய்ய வேண்டும் அப்போது தான் குழந்தை பிடித்து பால் குடிக்க முடியும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பால் குடுக்கும் முன் மட்டும் ஊசி ட்ரை பண்னுங்க. சும்மா இருக்கும் போது மருந்தை அப்ளை பன்னுங்க பால் குடுக்கும் முன் அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து பின் பால் குடுங்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Faridha மருந்தை நாமலே வாங்கிகொள்ளலாமா? shop-la இந்த விபரத்த சொல்லியே வாங்கலாமா?

Lansinoh க்ரீம் யூஸ் பன்னுங்க பா.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சும்மா ஒரு 5 or 6 TIMES பம்ப் பண்ணுங்க .....NIPPLE கொஞ்சம் வெளிய வரும் ....எங்க அக்கா க்கு ஒரு 2 DAYS FEDDING க்கு முன்னாடி ஒரு 5 MINTS PUMP பண்ணுவும் ...2 DAYS ல NIPPLE நார்மல் ஆய்டுச்சு ....

அப்படி Pump செய்யும் போது milk extract ஆகாதா? அதை நாம் பாட்டிலில் தானே கொடுக்க முடியும்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

LITE தான் வரும் 2 DAYS USE பண்ணுனா NIPPLE NORMAL ஆய்டும் ......

ஓ ஓகே சரண். நன்றி தெளிவு படுத்தியதற்கு.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

திவ்யா, உங்களுக்கு தாய்ப்பால் இன்னும் ஊறவில்லையா அல்லது பால் இருக்கிறது, ஆனால் குழந்தைக்கு கொடுக்க முடியவில்லையா? பால் இருந்தும் குழந்தையால் குடிக்க முடியவில்லையெனில் ப்ரெஸ்ட் பம்ப் உபயோகிக்கலாம். தாய்ப்பாலை பம்ப் செய்து பாட்டிலில் கொடுக்கலாம். கூடவே தினமும் முடிந்த அளவு (அட்லீஸ்ட் 2 முறையாவது) நேரடியாக குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சி பண்ணிட்டே இருங்க. உங்களது பிரச்சனைக்கு வலியில்லாத தீர்வு இது. பாப்பா தானாக குடிக்க முயலுகையில் அழுவாங்க, பால் வரலைன்னு கோவப்படுவாங்க, ஆனாலும் (பம்ப் செய்வதற்கு முன்)கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் டிரை பண்ணுங்க, ரொம்ப நேரம் அழவிடாம தாய்ப்பாலை பாட்டிலில் கொடுங்க.

பிறந்த ஒரு மாதம் வரை 2 மணி நேரங்களுக்கு ஒரு முறையும் பிறகு 3, 4 மணி நேரங்களுக்கு ஒரு முறையும் பம்ப் செய்யுங்க. அடிக்கடி பம்ப் செய்வதால் பால் சுரப்பு அதிகரிக்கும்(மறக்காம பாப்பாவுக்கு நேரடியா கொடுக்கவும் முயற்சித்துட்டே இருக்கணும்)..பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் [பாகற்காய், முட்டைக்கோஸ், பூண்டு, வெந்தயம், ஓட்ஸ், மீன், அசைவ உணவுகள்) சாப்பிடுங்க.

பாப்பா கொஞ்சம் வளர்ந்ததும் தானே குடிக்க பழகிருவாங்க, கவலை வேண்டாம். ஆல் த பெஸ்ட்!

அன்புடன்,
மகி

மேலும் சில பதிவுகள்