தோழிகளின் உதவியை எதிர்பார்க்கிறேன்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்..கடந்த ஜூலை 3 எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.. மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, 22 நாள் அகிடுச்சு.. டாக்டர் LACTOBOND என்ற TABLET கொடுத்தார் எந்த பலனும் இல்லை... என் மகள்ளுக்கு தற்போது NESTLE LACTOGEN POWDER தான் கொடுத்து வருகிறோம்.

நான் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். அனைத்து தோழிகளின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்....

hi Faridha and Saran.... எனது கணவர் வேறு மருத்துவரிடம் ஆலோசனையுடன் ஊசி அல்லது pump-யை பயன்படுத்து என்கிறார்... எனது கெட்ட நேரம் நேற்று நான் பார்க்க சென்ற மருத்துவரின் clinic பூட்டி இருந்தது..
இல்லை mahiarun... பால் ஊறவும் இல்லை... மார்பகம் மற்றும் காம்பு சிறியதாகவே உள்ளது...
(எனது மருத்துவரிடம் கேட்டு யெந்த பலனும் கிடைக்கவில்லை.. )

கவலை படாதிங்க. குழந்தை பால் குடிக்க குடிக்க தான் பால் நன்கு ஊறும் என்பார்கள். குழந்தை குடிக்க ஆரம்பித்தால் போதும் சரியாகிவிடும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//22 நாள் அகிடுச்சு// குழந்தை பிறந்த சமயம் ஹாஸ்பிட்டல்ல ஆலோசனை எதுவும் சொல்லலயா?

//இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். // யோசிக்க வேண்டாம். குழந்தைக்கு லக்டோஜன் கொடுக்கலாம்.

யோசனை சொல்வதற்கு உங்கள் பிரச்சினை சரியாகப் புரியவில்லை. டாக்டர் டாப்லட் கொடுத்தது நீங்கள் சொன்னதை வைத்து மட்டும்தான் இல்லையா! அவரிடம் என்ன சொன்னீர்கள்? 'பால் சுரக்கவில்லை,' என்று சொன்னீர்களா? அதற்குத்தான் டாப்லட் கொடுத்து இருக்கிறார்.

நீங்கள் உங்கள் கேள்வியில் சொல்லி இருப்பது போல மார்பகம் சிறிதாக இருப்பதோ காம்புகள் சிறிதாக இருப்பதோ மட்டும் உங்கள் பிரச்சினையாகத் தெரியவில்லை. மார்பக அமைப்பு தொடர்பாக நாம் நினைக்காத வேறு சில விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் மார்பக அமைப்பை நீங்கள் கட்டாயம் ஒரு மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஒரு பெண் மருத்துவரிடம் காட்டலாம்.

////22 நாள் அகிடுச்சு// ஒரு வேளை.. 'தாமதமாகிவிட்டது. பாப்பா லாக்டோஜனோடு நன்றாக வளருகிறார். இதை இப்படியே விட்டு விடலாம்,' என்னும் முடிவுக்கு நீங்கள் வரலாம். அப்படி இருந்தால் கூட நீங்கள் இப்போது ஒரு முறை காட்டி சிகிச்சை தேவையா என்பதைக் கவனிப்பது நல்லது. அடுத்த குழந்தை பிறக்கும் சமயம் ஒரு கவலை இல்லாமல் இருக்கும் அல்லவா?

ஃபரீதா ஒரு யோசனை சொன்னாங்க. அப்படி ஒன்று இருக்கிறது. ஃபரீதாவின் பிரச்சினை வேறு. அதனால் அந்தச் சிகிச்சை பலனளித்தது. உங்கள் பிரச்சினை வேறு என்று தோன்றுகிறது.

பிரச்சினை ஒன்றாகவே இருந்தாலும் கூட இது போன்றவற்றை மருத்துவத் துறை தொடர்பான ஒருவர் சம்பந்தப்படாமல் நாமாகவே முயற்சி செய்வது தப்புங்க. தொற்றுகள் ஏற்பட்டுப் பிரச்சினை ஆனால்!!

ஒவ்வொருவர் உடலமைப்பும் ஒவ்வொரு விதம். பலரும் 'பால் போதவில்லை,' என்பதைத் தவிர வேறு பிரச்சினை இல்லாமல் ஒழுங்காக இருப்போம். சிலருக்குக் காம்புகள் மார்பின் உள்ளே புதைந்தது போன்ற அமைப்பில் இருப்பதும் உண்டு. சிலருக்கு முன்பு நன்றாக இருந்து பிரசவ சமயத்தில் உள்ளே புதைந்து போகும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். சிலருக்கு சக்க்ஷன் உதவும். சிலருக்கு ப்ரெஸ்ட் பம்ப் போதும். இந்த முறைகளால் சிலருக்கு சரியானது போல இருந்தாலும் நிரந்தரமாக இருக்குமா என்பது சொல்ல இயலாது. இதற்கு மேலும் சிகிச்சை முறைகள் உள்ளன.

மற்றப் பெண்களின் அழகை, கூந்தலை, மூக்கை, உதட்டை எங்கள் அமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இது அப்படி அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அது போல்தான் எல்லோரும் இருப்பார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். தப்பாக இருப்போமோ என்கிற சந்தேகம் பெரிதாக வராது. அல்லது... யாரிடமாவது பேசத் தயக்கமாக இருக்கும்.

//Breast pump யூஸ் செய்தால் பாட்டிலில் தானே குழந்தைக்கு பால் புகட்ட முடியும். இல்ல குழந்தைக்கு நாமே பால் புகட்ட முடியுமா?// என்று கேட்டிருந்தீங்க. பாட்டிலில்தான் புகட்ட வேண்டும். உங்களுக்குப் பால் சுரப்பு சரியாக இருக்குமானால் நீங்களே குழந்தைக்கு உதவலாம். குழந்தைக்கு உறிஞ்சுவதற்கு வசதியாக காம்புகளைப் பிடித்து குழந்தை வாயில் வைத்துக் கொள்ளலாம். கொஞ்ச நாள் போக தானாகவே எல்லாம் சரியாகிவிடும். நிப்பிள் ஷீல்ட்ஸ் உதவக் கூடும். நிப்பிள் ஷெல்ஸ் கூட உதவும். இன்னும் வேறு ஏதாவது முறைகள் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் குளிக்கும் சமயம் மார்புக் காம்புகளை சிறிது மசாஜ் செய்து வெளியே இழுத்து விடச் சொல்வார்கள்.

எல்லாமே எல்லோருக்கும் சரியாக வருவது இல்லை. உங்கள் கணவர் சரியாகச் சொல்லியிருக்கிறார். உங்களை யாராவது பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியான தீர்வு எது என்று சொல்ல முடியும். //எனது மருத்துவரிடம் கேட்டு யெந்த பலனும் கிடைக்கவில்லை..// வேறு ஒருவரிடம் போய்க் காட்டுங்கள்.

பிறகு விரும்பினால் என்ன ஆயிற்று என்று இங்கு வந்து பதிவு செய்யுங்கள். உங்களைப் போல் சிரமப்படும் வேறு யாருக்காவது உதவும் இல்லையா!

‍- இமா க்றிஸ்

வணக்கம் சகோதரிகளே... எனக்கு பால் ஊற செய்த அனைத்து முயற்சியும் பலனில்லை.. நேற்று ஹார்மோன் டெஸ்ட் எடுத்துள்ளேன்... முடிவு நாளை தான் தெரியும்.... வேதனை அதிகரிக்கிறது.... மன அமைதி என்பதே இல்லை.... முடிவு நல்லபடியா இருக்கனும் கடவுளே....

Tension agathinga, athigamana tensionala paal varum vaipu kuraivakum. Massage your breast with any oil. Then relax, drink lots of water. See your baby's face n try to feed her without any tension. You can do it.. actually first 3months I have had enough milk for my baby, then I felt milk is not much enough. So my doctor advised me to take
almond milk or almonds
Hummus ( white Channa, garlic n something)
Fenugreek tablet
Lots of garlic
Dill leaves.
Still I am taking fenugreek tablet (8), almond milk .my baby is 7months old, n exclusively breasfeeding only. Above what I mentioned is all you can get from home. So you can try it, god bless your baby...

Anbudan Kanchana Raja

ஹார்மோன் டெச்ட்-இல் என்னுடைய அளவு மிகவும் குறைவாக உள்ளது.... paal vara chance illanu sollittaga... naan ippo ennathan panrathu???

எனக்கு பால் பத்தாமல் போன போது தினமும் ஒரு லிட்டர் பால், முருங்கை கீரை, பால் சுறா, மில்க் ரஸ்க், பாலில் வேகவைத்த பூண்டு இவைகள் பலன் அளித்தன. ட்ரை செய்து பாருங்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்.... ஹார்மோன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியுமா? நான் தாய் பால் தரவே முடியாதா தோழிகளே?

தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்.... ஹார்மோன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியுமா? நான் தாய் பால் தரவே முடியாதா தோழிகளே?

மேலும் சில பதிவுகள்