பட்டிமன்றம் ~ 99 "உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா ? சங்கடமா ? "

பட்டி வாசகர்களே,

இந்தவார‌ பட்டிமன்றம் ~ 99 இனிதே ஆரம்பமாகிறது. அனைவரும் கலந்து வாதங்கள் கொடுத்து சிறப்பிக்கனும்.

தலைப்பு ~ " உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா ? சங்கடமா ? "
தலைப்பு வழங்கியவர் ~ "தோழி வாணி " மிக்க‌ நன்றி தோழி.

வாங்க‌ வாங்க‌ அனைவரும், இந்த‌ தலைப்பு பற்றி விளக்கம் அதிகம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேண். இருப்பினும் சொல்லிடுறேன் உணவுமுறை பழங்காலத்திலும்,இப்பவும் எப்படி இருக்கு? எப்படி இருக்கனும்? உடலுக்கு மருந்தாகவும் எப்படி எடுத்துக்கனும்? எவ்விதத்தில் மருந்தாக‌ பயனலிக்கிறது? இதில் இக்காலத்து உணவுகள் மருந்தாக‌ உபயோகிக்க‌ முடியுமா? முடியாதா? முடிந்தால் எப்படி? முடியாவிட்டால் எதனால்? இதுபோன்ற கேள்விகளுக்கு இருபக்க‌ அணியினரும் யோசித்து வாதங்களை சமர்பிக்கணும்.

பார்வையாளர்களே நீங்களும் கலந்துகொள்ள‌ அழைக்கிறேன். புதுமுக‌, பழைய‌ தோழர் தோழிகள் கண்டிப்பா கலந்துக்கணும்,பட்டியை சிறப்பாக‌ கொண்டு செல்ல‌ உதவணும். ஓகே ஸ்டார்ட் மியூஸிக்....

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

என் அன்பு பட்டிமன்ற‌ தோழர் தோழிகளே.... இந்தவார‌ பட்டி துவங்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரையும் அன்புகூர்ந்து பட்டியில் கலந்து சிறப்பிக்க‌ அழைக்கிறேன். வருகை தந்து வாதங்களில் கலக்கிட‌ வாழ்த்துக்கள்...
(பாரதிராஜா ஸ்டைல்)

"சாத்தியமே அணித்தேர்வர்களுக்கு இந்தாங்க‌ பனங்கற்கண்டு போட்ட‌ அருகம்புல் ஜூஸ்".

"சங்கடமே அணித்தேர்வர்களுக்கு இந்தாங்க‌ சாக்லெட் ஐஸ்கிரீம்".

இக்காலத்தில் 90% சங்கடமே ஏனென்றால் தற்போதைய‌ அனைத்து உணவுப் பொருட்களை விளைவிக்கும் போதும் கிருமிந௱சினி இடுகின்றார்கள். சாதாரண‌ அரிசி தொடக்கம் அனைத்து உணவுப் பொருட்களையும் நம்பி உண்ண‌ முடிவதில்லை. நாமே வீட்டில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து உண்டால் உணவே மருந்தாவது நிச்சயம் ஆகும்.

ஷாலி அருண்

பட்டிக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். முதல் பட்டி முதல்வாதம், முதல் பதிவு. ஆரம்பமே கலக்கல். நீங்க‌ சட்டுன்னு சங்கடமே அணியை தேர்வு செய்துட்டீங்க‌. வாழ்த்துக்கள். தொடர்ந்து வாதங்களையும் கொடுங்க‌. சாக்லெட் ஐஸ்கிரீம் உங்களுக்கும் உங்கள் அணீயினருக்கும்.

நன்றி ரேணு சிறப்பான‌ வரவேற்பிற்கு...

ஷாலி அருண்

மிக்க மகிழ்ச்சி ரேணுகா மேடம்.நான் சாத்தியமே என்ற அணியில் வாதிடப்போகிறேன்.புது நண்பரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Nothing is Impossible.

நான் நினைத்தால் கண்டிப்பாக நல்ல உனவு முறையை மீண்டும் கொணர முடியும்.

மீண்டும் வருகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

பட்டிமன்ற மக்கள் எல்லோரும் எப்படி இருக்கீங்க?விருந்தினர்களின் வருகையால் 98ஆவது பட்டியில் கலந்துக்கமுடியல ஆனாலும் மனது கேட்கவில்லை அதனால் இந்த பட்டியில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாதிட வருகிறேன் நடுவரே...!

நான் சாத்தியமே என்ற தலைப்பில் வாதிட ஒப்புதல் தெரிவிக்கிறேன்.

சீக்கிரமே வாதங்களுடன் வருகிறேன்.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

பட்டியின் முதல்விதி யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது என்பது. அனைத்து விதிகளிலும் கவனமா இருங்க‌.சரியா.

வருகைக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்...

சாத்தியமே அணிப்பக்கமும் ஆள் வந்தாச்சு... பிறகென்ன‌ மோதிப்பார்க்கவேண்டியதுதான் பாக்கி,ஆரம்பியுங்கள்.

அருகம்புல் ஜூஸ் எடுத்துக்கிட்டீங்கதானே...குடிச்சுட்டு தெம்பா வாங்க‌.

ஓ... நீங்களும் சாத்தியமே அணிப்பக்கமா? மகிழ்ச்சி, வாதங்களுடன் இந்த‌ பட்டியில் சிறப்பித்தால் அனைவரின் மனமும் நிறையும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ஹாசனி....வாதங்களுடன் வாங்க‌.

நடுவருக்கு வணக்கம். வாதிட்ட, வாதிட போகிற இரு அணியினருக்கும் வணக்கம். (போன வாரம் முழுக்க அறுசுவையில் பங்களிக்க முடியவில்லை. வேலை, வேலை, வேலை. இப்போ வந்திட்டேன்) விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. தலைப்பு. கொடுத்த வாணி அவர்களுக்கு நன்றி. இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும் நன்றி. எந்த பக்கம் போவது என்பதில் சின்ன குழப்பம். தேர்ந்தெடுத்து விரைவில் வருகிறேன் நடுவரே.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்