தேதி: July 28, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு / மல்டிக்ரெய்ன் மாவு - ஒரு கப்
பொடித்த பாதாம் - அரை கப்
பொடித்த சர்க்கரை - 1/3 கப்
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
பால் - தேவைக்கேற்ப
வெனிலா எஸன்ஸ் - அரை தேக்கரண்டி







அவனில் வைத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த குக்கீஸுக்கு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் முட்டை சேர்க்கத் தேவையில்லை.
கேக் போலவே குக்கீஸ் செய்வதற்கும் அனைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசியம். வெண்ணெயை ஒரு மணி நேரத்திற்கு முன்பே வெளியில் எடுத்து வைத்திருந்து பயன்படுத்தவும். முட்டை பயன்படுத்தும் வகைகளுக்கும், முட்டை ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசியம்.
Comments
குக்கீஸ்
வனி வீட்ல குக்கீஸ் சீசன் போலிருக்கு, ஒரே குக்கீஸா போட்டு அசத்துரீங்க வனி :-) நான் மைதாவுடன் பாதாம் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து செய்துள்ளேன், அடுத்து கோதுமை மாவிலே உங்க ரெசிப்பியை டிரை பண்ணிடுவோம். வெரி நைஸ்
ஆமண்ட் குக்கீஸ்
யமி வனீ. ஒரு பாக்கட் பார்சல் ப்ளீஸ்.
- இமா க்றிஸ்
வனிதா
வனி அசத்ரிங்க போங்க. வீட்ல கேக் அன்ட் குக்கீஸ் காத்து வீசிட்டு இருக்கு போல
வனி
வனி ,
அவனை ஒரு வழி பண்ணிடுவீங்க போலே
பட் சூப்பர் கூக்கீஸ்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
வனிதா அக்கா
எங்க வீட்ல அவன் இல்ல. அதனால் நேற்று என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய் இதை செய்து பார்த்தேன்.. நல்லா க்ரிஸ்பியா சூப்பரா இருந்துச்சு.. .நீங்க கோதுமை மாவு தான் யூஸ் பண்ணிருக்கீங்களா?
கலை
வனிக்கு வாழ்த்துக்கள்.
தூள்! இன்னும் என்ன மிச்சமிருக்கு.கப்பக்கிழங்கை துருவி மாவில் சேர்த்து கேக்கும் குக்கீசும் செய்து போடுங்க வனி. 1000 வது குறிப்பை நோக்கி பீடு நடை போடும் வனிக்கு வாழ்த்துக்கள்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
வனி அக்கா
ஹய்யோ வனி அக்கா எவ்ளோ சூப்பர் குக்கீஸ். எனக்கு தான். பார்க்கற அப்போ ஈஸியா தா இருக்கு. ஆனா செஞ்சா சாஃப்டா வர மாட்டுதே. ஆனா கண்டிப்பா இதை ட்ரை பண்ணுவேன். வாழ்த்துக்கள். நீங்க அவன்க்கு உள்ளயே பூந்து விளையாடறீங்க. எனக்கு அது தான் வரவே மாட்டேங்குது. எனக்கும் இந்த விளையாட்ட கத்து குடுங்க.
எல்லாம் சில காலம்.....
ஆல்மண்ட் குக்கீஸ்
வனி, ஆல்மண்ட் குக்கீஸ் சிம்ப்ளி சூப்பர்ப்!!! அப்படியே எடுத்து சாப்பிட தோணுது! ;) எனக்கு குக்கீஸ்ன்னாலே தனி விருப்பம்! கட்டாயம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி - ஆல்மண்ட் குக்கீஸ்
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
வாணி... மிக்க நன்றி :) என்ன பண்ண வாணி எல்லாம் நீங்களும் ரேணுவும் துவங்கி வெச்சது, இப்போ குக்கீஸ் பாக்ஸ் எம்ப்டி ஆனா கேட்க ஆரம்பிச்சுடுறாங்க, இந்த முறை என்ன குக்கீஸ்ன்னு.
இமா... மிக்க நன்றி :) ப்ளீஸ் போடாமலே இமாக்கு ஒரு பாக்கட் பார்சல்.
நித்யா... மிக்க நன்றி :) அப்படித்தான் நம்ம வீட்டில் அடிக்கடி காற்று மாறி வீசும்.
கவிதா.. மிக்க நன்றி :) எனக்கும் அவனை நினைச்சா தான் பயமா இருக்கு.
கலை... மிக்க நன்றி :) செய்து பார்த்து பதிவிட்டது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி. முடிஞ்சவரை மைதா அவாய்ட் பண்றேன் கலை. இது மல்டிக்ரெய்ன்ல பண்ணது.
ஜெயந்தி... மிக்க நன்றி :) கப்ப கிழங்குன்னா குச்சிகிழங்கா? அதாவது மரவள்ளிக்கிழங்கு? அதுல தான் ஏற்கனவே கேக் போட்டிருக்கோமே ;)
பாலநாயகி... மிக்க நன்றி :) 2 நாள் டைம் ப்ளீஸ்... நிச்சயம் ஆட்டத்துல சேர்த்துக்குறேன் ;)
சுஸ்ரீ... மிக்க நன்றி :) எனக்கு ராகி குக்கீஸ் தவிற வேறு ஒன்னும் சாப்பிட விருப்பமில்லை... அதிகபட்சம் ஒரு செட் செய்து வெச்சா 1 அல்லது 2 குக்கிஸ் ருசி பார்ப்பேன். இவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தான் செய்வதே.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி நான் குறிப்பிட்டது Sweet Potatoநு சொல்லப்படும் தாமிர நிற தோல் ஆரஞ்சு நிற சதை கொண்ட கிழங்கு. அதில் Muffin செய்தேன் சுவை அருமையாய் இருந்தது.அதைத்தான் மரவள்ளி என்று குறிப்பிட்டேன். அது தவறான பெயர்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
ஜெயந்தி
ஓக்கே ஒக்கே... அது சர்க்கரை வள்ளிக்கிழங்கு / சீனிக்கிழங்கு. ட்ரை பண்ணிடுறேன் ஜெயந்தி... தேன்க்யூ :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Naa iniki thaan senju
Naa iniki thaan senju parthen.arumai....
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!