தேதி: July 31, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய் துருவல் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (அ) 4
பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் துவரம் பருப்பைத் தனித்தனியாகக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய அரிசி, பருப்பை தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, தனித்தனியாக மிக்ஸியில் போட்டு (தண்ணீர் ஊற்றாமல்) கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

இஞ்சியுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

அடுப்பில் ப்ரஷர் பான் அல்லது குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அத்துடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி, பருப்பைச் சேர்த்து, மிதமான தீயிலேயே வைத்துக் கிளறவும்.

அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பிறகு மேலும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாகச் கலந்துவிட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரவிட்டு இறக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் மூடியைத் திறந்து நன்றாகக் கிளறவும். தண்ணீர் அதிகமாக இருப்பது போலத் தெரிந்தால், அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கிளறி வேகவிட்டு இறக்கவும்.

சுவையான அரிசி உப்புமா தயார். விரும்பினால் நெய் சேர்த்துப் பரிமாறலாம்.

Comments
சீதா
குறிப்பை விடவும் இவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் உங்க குறிப்பும் பதிவுகளும் பார்க்க மகிழ்ச்சியா இருக்குன்னு தான் சொல்ல தோணுது. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
அன்பு வனி,
முதல் பதிவிற்கு நன்றி.
சமையலில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு பயன்படுகிற மாதிரி, சிம்பிளான குறிப்புகள் படம் எடுத்து வச்சிருக்கேன்.
இன்னும் அனுப்புகிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா
வெல்கம் சீதாம்மா வெல்கம். திரும்ப உங்க வரவு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உப்புமா சூப்பர்ம்மா. :)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
சீத்தா அம்மா
உங்க குறிப்புக்கு இப்போ தான் நான் முதல் முறையா கருத்து பதிவு செய்றேன். உப்புமா ரொம்ப நல்லா இருக்கு. இப்பவே சாப்டணும் போல இருக்கு. செஞ்சி குடுக்க தான் ஆள் இல்லை. சரி நாளைக்கு நானே செய்து சாப்டறேன். ஆனா கண்டிப்பா உங்க கை பக்குவம் ருசி வரவே வராது.
எல்லாம் சில காலம்.....
சீதா மேடம்,
நம்மூட்ல உப்புமா எல்லாம் செய்றதே இல்லீங்க. ஊருக்குப் போனா அவசியம் செய்துப் பார்க்கிறேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க குறிப்பைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
உமா
அன்பு உமா,
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. உங்க அன்பான வரவேற்பு மனசுக்கு இன்னும் இதமா இருக்கு.
அன்புடன்
சீதாலஷ்மி
பாலநாயகி
அன்பு பாலநாயகி,
முதல் முதலா பதிவிட்டீருக்கீங்க. மகிழ்ச்சி, நன்றி.
இங்கே அறுசுவையில் படங்கள், விளக்கங்கள் எல்லாம் தெளிவா இருக்கும். இங்கே பார்த்து நிறைய செய்யக் கத்துக்கிட்டிருக்கேன்.
பழகப் பழக, பக்குவம் தானாகவே வந்துடும்.
அன்புடன்
சீதாலஷ்மி
வாணி
அன்பு வாணி,
அன்பான வரவேற்புக்கும் பதிவிக்கும் மிகவும் நன்றி.
உப்புமா என்னோட ஃபேவரைட் உணவுகளில் ஒன்று. முன்பெல்லாம், மிஷினில் அரிசி பருப்பு ரவையாக உடைச்சுட்டு வந்து, வெங்கல உருளியில் தண்ணீர் கொதிக்க வச்சு, அதில் உப்புமா ரவையைக் கொட்டி, நடுவில் கீரை கடையும் மத்தின் காம்பை சொருகி வச்சுடுவாங்க.
பிறகு, சட்டியை இறக்கி வச்சு, கட்டி கட்டியாக இருக்கும் உப்புமாவை உடைச்சு விட்டு, கிளறுவாங்க.
நமக்கு இதெல்லாம் சரி வராது, ஆனா அரிசி உப்புமா சாப்பிட ஆசை. மதுரையில் பக்கத்திலிருக்கும் ஒரு பெண்மணி, இந்த மாதிரி துவரம்பருப்பை ஊற வச்சு, அரைச்சு செய்திருந்தாங்க. அந்த செய்முறையை, குக்கரில் ட்ரை செய்து பார்த்தேன். நல்லா வந்தது.
நீங்களும் செய்து பாருங்க, நல்லா வரும்.
அன்புடன்
சீதாலஷ்மி
அரிசி உப்புமா
பிடிச்சிருக்கு. அங்கதான் வருவேன் சாப்பிட. :-)
- இமா க்றிஸ்
சீதா பாட்டி சமையல்,
சீதாம்மா, இது என் பாட்டி எனக்கு செய்து கொடுப்பாங்க. இதுதான் அறுசுவைக்கு முதலில் நான் கொடுக்க நினைத்தது. பட் மாறிடுச்சு.
சரி எனக்கு ஒரு டவுட் பாட்டி செய்யும்போது அரைப்பதெல்லாம் உங்களைப்போலதான் செய்தார்கள். பின் தாளிக்கும்போது வெள்ளை ரவை செய்ய வறுத்துவைத்து செய்வோம்ல அதுபோல செய்ததாக நினைவு. மேலும் அவங்க குக்கர் விசில் விடலை.
நான் இருமுறை செய்யும்போதும் இப்படிதான் செய்தேன். நன்றாக வந்திருந்தது. அதுவெ பிள்ளைகள் உண்ண சங்கடப்பட்டால் கொழுக்கட்டைபோல பிடித்தும் வைத்து கொடுப்பேன். இப்படியும் செய்யலாம்தானே... இல்லை கண்டிப்பா விசில் விடனுமா?
எங்கள் பாட்டி செய்து கொடுத்ததை இந்தபாட்டி செய்து காண்பித்தது மிக்க மகிழ்ச்சி... :)
அரிசி உப்புமா
சீதா அம்மா ஒரு சந்தேகம் ரவா உப்புமா போல் உதிரியாக இருக்குமா.செய்து பார்க்க ஆசையாக இருக்கு. குறிப்பு சூப்பர்.
இமா
அன்பு இமா,
சீக்கிரம் வாங்க, செய்து தர்றேன், வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
ரேணுகா
அன்பு ரேணுகா,
எனக்கும் இந்த டிஷ் செய்யறப்ப, வீட்டுப் பெரியவங்க நினைப்பு வந்துடுச்சு.
அவங்க கைப் பக்குவமும் ருசியும் தனி. அதுவுமில்லாம, நிறைய செய்யறப்ப, இன்னும் டேஸ்ட் இருக்கும்.
மிஷினில் உப்புமாவுக்காக ட்ரை ஆகத் திரிச்சுட்டு வந்தா, நீங்க சொல்வது போல வறுத்து செய்யலாம். அரிசி மாவு வறுக்கும்போது, கூடுதல் வாசனையும் சுவையும் இருக்கும்.
இப்ப செய்யறது எப்பவாவது, அதுவும் 1 கப் அளவுதானே, அதனால், ஊற வச்ச அரிசியை, மிக்ஸியில் ஈரப்பதமாக திரிச்சிருக்கேன். அதை வதக்கிப் போட்டிருக்கேன்.
குக்கரில் வச்சதுக்குக் காரணம், அடிக்கடி கிளற வேண்டாம் என்பதால். வாணலியிலும் செய்யலாம். நல்லா இருக்கும்.
கொழுக்கட்டை ஐடியா ரொம்ப நல்லா இருக்கு. நானும் செய்து பார்க்கிறேன்.
பாட்டிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் பேத்திகளுக்கு ஒரு ஜே!
அன்புடன்
சீதாலஷ்மி
நித்யா
அன்பு நித்யா,
ஊஹும், அவ்வளவு உதிரியாக வராது. பொங்கலை விட, கொஞ்சம் உதிரியா இருக்கும்.
செய்து பாருங்க, பிடிக்கும்னு நினைக்கிறேன்.
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா.
ஆமாம் நான் என் பாட்டியை தாத்தாவை ரொம்ப நினைக்குறேன். தாத்தா எனக்கு ரோல் மாடல், பாட்டி அவருக்கு குறைச்சல் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு அன்பா கவனிச்சுப்பாங்க தெரியுமா? தாத்தாவின் மறைவிற்கு பின் என் பாட்டி படுக்கை ஆகிட்டாங்க. அவங்களுக்கு அனைத்தும் நாந்தான் செய்வேன். விடாமல் தினமும் 2 முறை வாக்கிங் செய்யவைப்பேன்.
அவங்க மாரியம்மன் பண்டிகையின்போது விளக்குமா செய்ய அரைப்பாங்கல்ல அப்ப இதுக்கும் சேர்த்து அரைப்பாங்க. நீங்க சொன்னதுபோல அதனால்தான் வறுக்கறாங்க...
கொழுக்கட்டை, என்ன சொல்ல பழமையிலும் புதுமை புகுத்தி என்னவருக்கும், என் குட்டீஸ்கும் கொடுத்து பழக்கமாகிடுச்சு...:)