ஆடிப் பெருக்கு

பொன்னியின் செல்வன் படித்த,படித்துக் கொண்டிருக்கிற அனைவருக்குமே நாளை ஆடிப் பதினெட்டாம் நாள் நினைவில் வருவார் கதையின் நாயகன் வந்தியத்தேவன்னு நினைக்கிறேன்.அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள்.பித்ருக்களை வ்ழிபடுவோம் அவர்களின் ஆசிர்வாதம் பெருவோம்.

அன்பு அமுதவல்லி,

வாழ்த்துக்கு நன்றி.

இப்பத்தான் முதல் அத்தியாயம் படிச்சுட்டு வர்றேன். புது உலகத்துக்குள்ள போன மாதிரி ஒரு உணர்வு.

ஓவியங்களும் ரொம்ப அழகா இருக்கு. பைண்ட் செய்து வைக்கணும்னு ஆசையா இருக்கு. பாக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா உங்க பதிவு பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.படித்து முடிந்ததும் மறுபடியும் படிக்க தோணும்.கற்பனை நம்மல அறியாமலே வரும்.நன்றி உங்கள் பதிவிற்கு.

மறக்காமல் பைண்ட் பண்ணிடுங்க மறுபடியும் ஒரு முறையல்ல 100 முறை படித்தாலும் புதிதாய் படிப்பதை போலவே இருக்கும்.

அன்பு அமுதவல்லி,

ஏற்கனவே வந்தப்பவும் பைண்ட் செய்து வச்சேன், அதில் இரண்டாம் பாகம் தொலைஞ்சுடுச்சு:(:(

இந்தத் தடவை கண்டிப்பாக‌ பைண்ட் செய்து வச்சுடுவேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

"ஏற்கனவே வந்தப்பவும் பைண்ட் செய்து வச்சேன்"
இப்ப‌ எதுலயாவது வந்துட்டிருக்கா? உடனே கொஞ்சம் சொல்லுங்களேன்.

அன்புடன்
ஜெயா

அன்பு ஜெயா,

இன்னிக்கு வந்த கல்கி இதழில் இருந்து ஆரம்பிச்சிருக்கு.

ஆன்லைனிலும் பணம் கட்டி, கல்கி க்ரூப் மாகசின்ஸ் படிக்கலாம்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
நன்றி ! நன்றி !!

மேலும் சில பதிவுகள்