தேதி: August 7, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரவா - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மோர் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
கேரட் - ஒன்று
முந்திரி - 4
பட்டாணி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வாணலியில் அரை தேக்கரண்டி நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் ரவையை போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

வதக்கியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆறியதும் உப்பு மற்றும் சோடா உப்பு போட்டு மோர் ஊற்றிக் கலந்து கொள்ளவும்.

நன்கு கலந்துவிட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து இட்லிகளாக ஊற்றி, இட்லிப் பானையில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான ரவா இட்லி தயார். இட்லியின் மேலே கேரட் துருவல், பட்டாணி மற்றும் முந்திரி வைத்து அலங்கரித்துப் ப்ரிமாறவும்.

அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.

Comments
ரவா இட்லி
சூப்பருங்க, என்னோட ஃபேவரட் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரவா இட்லி
குறிப்பு அருமை. நான் செய்தால் அழுத்தமாக போய்விடுது. எதனால் என்று சொல்லுங்களேன்.
ஜெயா அக்கா
உங்க இட்லி சூப்பரோ சூப்பர். எனக்கும் ரவா இட்லி அழுத்தமா வருது. என்ன பண்ணா ஸாஃப்டா வரும்?
எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஜெயலட்சுமி இருக்காங்க. அவங்கல எல்லாம் ஜெயானு கூப்டுவாங்க. குட்டீஸ்க்கு அவங்க பேர் வராம ஜெயா அக்காவ ஜேக்கா ஜேக்கானு கூப்டுவாங்க. :)
உங்க பேர் பார்த்ததும் எனக்கு அந்த நியாபகம் வந்துடுச்சி.
எல்லாம் சில காலம்.....