மைக்ரோவேவ் பால்கோவா

தேதி: August 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

இந்த குறிப்பு வாணி செல்வின் அவர்களது மைக்ரோவேவ் பால்கோவா குறிப்பைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

கோக்கனட் பவுடர் - 100 கிராம்
பால் பவுடர் - 100 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - சிறிது
சர்க்கரை - 250 கிராம்
தண்ணீர் - அரை கப்


 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தயும் மைக்ரோவேவ் பவுலில் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பிறகு பவுலை மைக்ரோவேவ் ஹையில் 5 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.
நன்கு கிளறிவிட்டு மேலும் 3 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்தெடுக்கவும்.
பிறகு மீண்டும் ஒரு முறை கிளறிவிட்டு 3 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்திருக்கவும். நன்கு ட்ரையானதும் எடுத்து நெய் தடவிய தட்டில் போட்டு ஆறவிடவும்.
சுவையான பால்கோவா தயார். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். இதன் சுவை ட்ரை பால்கோவா போல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பால்கோவா குறிப்பு நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் நித்யா :)

Kalai

பால்கோவா வித்தியாசமா நல்லா இருக்கு, இதுல‌ நீங்க‌ coconut powder என்று சொல்லியிருப்பது Dessicated coconut ஆ? இல்லை coconut powder என்றே தனியா இருக்கா?

குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி.

நன்றி கலா.

அனு கோக்கனட் பவுடருனு தனியா இருக்கு பா.

நித்யா அக்கா,
உங்க‌ பால்கோவா டிப்ஸ் ஈசி அன்ட் டேஸ்டியா இருக்கே,
சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *