கொழுப்பற்ற‌ பட்டர் பற்றிய‌ சந்தேகம்....

கொழுப்பற்ற‌ பட்டரினை டயட்டில் இருப்பவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? அதனால் உடல் எடை அதிகரிக்குமா?

//கொழுப்பற்ற‌ பட்டரினை// உண்மையில் butter பாலிலிருந்து எடுக்கும் உணவு. கொழுப்பு இல்லாமல் butter இருக்க முடியாது. fat free என்று விற்பனைக்கு இருப்பவை butter substitutes. இவற்றிலும் 100% கொழுப்பு இல்லாமல் இருக்காது. விரலால் தொட்டு ஒரு கடதாசியில் தடவிப் பாருங்கள். எண்ணெய் ஊறுவது தெரியும். கொழுப்பு அடியோடு இல்லாவிட்டால் அப்படி ஆக முடியாது அல்லவா?
தாவரக் 'கொழுப்புகளிலிருந்து' தயாரிக்கப்படுவது - மாஜரின்.

//அதனால் உடல் எடை அதிகரிக்குமா?// நீங்கள் வாங்கிய பொருளில் உள்ள குறிப்புகளைப் படித்துப் பாருங்கள். சக்தி, கொழுப்பு, மாப்பொருள் அளவு, இனிப்பு எவ்வளவு சேர்க்கப்பட்டிருகிறது என்பதை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு / ஒரு பரிமாறல் இத்தனை கிராம் என்று போட்டிருக்கும். இது டயட்டில் இல்லாதவர்களுக்கு. டயட்டில் இருப்பவர்கள் அதை விடக் குறைவாகத்தான் சேர்க்க வேண்டும். அதற்கு மேல் போனால் & தினமும் இவ்வாறு சேர்த்து வந்தால் நல்லதல்ல. 'எடை' என்பதை மட்டும் பார்க்க வேண்டாம். உள்ளே குருதிக் குழாய்களிலும் கொஞ்சம் படியும். சிலருக்கு வயிறு & இடை பெரிதாக இருக்கும் காரணம் அங்கு தசை போடுவது மட்டும் அல்ல. கொழுப்பும் அங்கேதான் படிந்து வைக்கிறது.

எடையைக் குறைக்க நிறையவே முயற்சி செய்கிறீர்கள் என்று தெரிகிறது ஷாலி. :-) என் வாழ்த்துக்கள்.
மெதுவாக, நாள் எடுத்தே குறையுங்கள். சட்டென்று நிறைய எடை குறைந்தால் சிலருக்கு எடை குறைந்த இடங்களில் தோலில் சுருக்கங்கள் போன்று அடையாளங்கள் வரலாம்.

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி இமா அக்கா. . கட்டாயம் நான் இதை அவதானிக்கின்றேன்....

ஷாலி அருண்

மேலும் சில பதிவுகள்