கொதிக்கும் சுடு தண்ணீர் கையில் பட்டு விட்டது

கொதிக்கும் தண்ணீர் கையில் பட்டு மிகவும் எரிச்சலாக உள்ளது கை நிறமே மாறி தோல் உரிந்து பிங் கலரில் உள்ளது. கலர் மாறுவதற்கு என்ன செய்வது. இப்படி கொதிக்கும் நீர் கையில் பட்ட உடனே என்ன பன்ன வேண்டும்.(First aid)

சரியாகப் பதில் சொல்ல நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் போதாது.

//தோல் உரிந்து பிங் கலரில்// காயம் எந்த அளவு பெரிதாக / ஆளமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்புக்காக ஒரே ஒரு தடவை டாக்டரிடம் காட்டலாமே!

//கலர் மாறுவதற்கு என்ன செய்வது.// முதலில் காயம் ஆற வேண்டும். சீழ் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காயம் எந்த இடத்தில் இருக்கிறது? மடிப்புகளில் இருந்தால் கையை அப்படியே வைத்திராமல் அசைக்க வேண்டும். இல்லாவிட்டால் தோல் மடிப்பு இல்லாமல் வளரப் பார்க்கும். காயம் ஆறிய பின்னால் (அப்போதும் நடுவில் பிங்க் கலராக இருக்கக் கூடும்.) காயத்தின் வெளி ஓரத்திலிருந்து உள் நோக்கி புள்ளி புள்ளியாகத் தோல் உங்கள் நிறத்திற்கு மாற ஆரம்பிக்கும். அந்தச் சமயம் ஆலிவ் எண்ணெய், bio oil பூசலாம். நாள் எடுத்துத்தான் நிறம் திரும்ப வரும். அதுவரை ஸ்டைலாக ஒரு பெரிய வளையல் மாட்டலாம். (நான் செய்ததைச் சொல்கிறேன்.) :-)

//கொதிக்கும் நீர் கையில் பட்ட உடனே என்ன பண்ண வேண்டும். (First aid)// ஓடும் குளிர் நீரில் அந்த இடத்தைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது பிடிக்க வேண்டும். கடகடவென்று கொட்டாமல் மெதுவாக ஓடவிடுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

தீக்காயம் எந்த மாதிரியாய் இருந்தாலும் முதன்முதலில் அரிசி மாவு(இட்லிக்கு ஆட்டுவது) அந்த இடம் முழுதும் பூசிவிடுவார்கள்.எரிச்சல் இருக்காது மற்றும் புண் பெரிதாகாது.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நன்றி இமாம்மா எனக்கு வலது கையில் பின்னால் விரல்களுக்கு கீழே பெரிய காயம்தான். ஒரு வாரம் ஆக போகிறது சுடு தண்ணீர் பட்டு. இன்றுதான் தோல் உரிந்து பார்கவே மிகவும் பயமாக உள்ளது. உடனே டாக்டர்ட போகவில்லை. 6 மாத பாப்பா இருக்கிறாள். தாய்பால் தருவதால் ஊசியோ மாத்திரையோ போட வேண்டாம் என்று விட்டுவிட்டேன்( முட்டாள் தனமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்) ஆனால் இப்போது போக வேண்டிய நிலமை வரும்போல

தோழி ஆனந்தகௌரி மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

//தீக்காயம் எந்த மாதிரியாய் இருந்தாலும் முதன்முதலில் அரிசி மாவு(இட்லிக்கு ஆட்டுவது) அந்த இடம் முழுதும் பூசி// தப்புங்க. காயம் சின்னதாக, ஆளமில்லாமல் இருந்தால் இது பரவாயில்லை. எந்த மாதிரி இருந்தாலும் இப்படிச் செய்யலாம் என்பது... ம்ஹும்! பிரச்சினையில் முடியலாம். உங்க பாட்டியும் அம்மாவுமே கூட காயம் பெருசா இருந்திருந்தா இப்படிப் பண்ணி இருக்க மாட்டாங்க.

‍- இமா க்றிஸ்

தோல் உரிந்திருந்தாலும் கூட சில சமயம் பயப்படும்படி இருக்காது. ஆனாலும்... நீங்கள் என்ன நினைத்துச் சொல்கிறீர்கள் என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேனா என்பது தெரியவில்லை. உடனே போனால் ஊசி போடுவார்கள் என்று ஏன் நினைத்தீர்கள்? அந்த அளவு சீரியஸாக இருந்திருந்தால் கட்டாயம் போயிருக்க வேண்டும். ஏதாவது பூச்சு மருந்து கொடுத்திருப்பார்கள். சில சமயம் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். காயத்தை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிய சரியான அறிவுரையும் கிடைத்திருக்கும்.

//போக வேண்டிய நிலமை வரும்போல// அவ்வ்வ்!! ;)) குட்டிருவேன். ;) போலப் புரைய எல்லாம் சொல்லாமல் இப்பவே போங்க. மாத்திரை தருவதானால் கூட குழந்தைக்குப் பாலூட்டுவதைச் சொன்னால் அதற்கேற்றபடி வேறு ஏதாவது கொடுப்பார்கள். பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

இது புதுசா இருக்கே... பிள்ளைக்கு பால் கொடுக்கறீங்களா, கர்ப்பமா என்ற கேள்விகள் இன்றி மருத்துவர்களும் எந்த மருந்தும் சொல்வதில்லை. இதுக்கு பயந்து காயத்தை பெருசாக்கினா அப்போ மட்டும் பிள்ளைக்கு எல்லாம் செய்ய முடியுமா? கையில் வலி படுத்தும் தானே? முதல்ல தள்ளி போடாம சிவியராக விடாம போய் பாருங்க. சின்னதா இருக்கும் போதே காட்டினா மருந்தும் குறைவான டோசா இருக்கும், பெருசாக விட்டா??? ம்ஹூம்... குட் கெர்ள்... போயிட்டு வந்து டாக்டர் என்ன சொன்னார் என்று சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமாம்மா வனி அக்கா டாக்டர்ட போனேன் மருந்து மற்றும் எண்ணெய் தடவ சொல்லியிருக்கிறார் சீக்கிரம் சரி ஆகி விடும்

புரிந்தது இமா மேடம். ஆனால் மிகவும் சிறிய காயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். மற்றபடி தோழிக்கு பெரிய காயம் என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். மன்னிக்கவும்.

நன்றி எல்லாம் வேண்டாம் Prabha, I'm your friend.

No pains,No gains

ANANTHAGOWRI.G

Dear Praba mukash,
1. For any kind of burn injuries first wash that place with just cold water
(if it is by any gravy, milk, are any food items.dont wipe that place
with any towel . If you do that the burned skin will worn out. So pl wash only just cold water not ice water till the burning senstion reduced.
2. If you have faith in homiopathy medicine you can follow this.
1, First have the medicine " Resqueremedy" 2 pills three times a day
toget relief from the shock ( it is useful for any kind of shock.
2.Next " Cantharis 200x" four times 4 pills perday. It is the main
remedy for the burn injuries. If you follow this medicine for just
one week you can see how will work, ( i have the experience in my
life.) You can not trace out the injured place and no scar also.
3, Next "Arnica 200x" 2 pills three times a day follow this also for
four days is enough, (It is the medicine for any kind of blows
by any thing and black spot caused by the blows (raththam
kattipothal). And it will cure any kind of wounds including the
open wounds by with in three dosses. You can apply pure coconut
oil. Otherwise you can get the cantharis oilment in the same shop.
Chew that pills with out any drink.Avoid coffice ,Tea,Masalas.N.V
If you have want to clear idea pl. go the Homiopathy website.

I think you can follow this if you have the faith.

Best of luck get well soon.
Anbudan Poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்