பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

நூறாவது பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன். நீங்களும் பெண்கள் அணியா.....உங்களின் மேல் வாதங்களுக்காக காத்திருக்கிறேன்.

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அது எப்படி, ஹோட்டலுக்கு போனால் முடியுமே முடியாதோ எல்லாத்தையும் சுவைக்க ஆசை அதனால் தான் ஆளாளுக்கு ஒன்றை ஆர்டர் செய்து ஷேர் பண்ணி சாப்பிடுவோம். அப்படியாக அன்று நமது நாவிற்கு சில பல சுவைகளை விருந்தாக்கி விட்டு தானே மறு வேளை?

ஏன் வம்பு மாமியார் சமையல் செய்து அது எங்க அம்மா சமையல் போல் இல்லை என்று சொல்லை வேறு கேட்க வேண்டுமா சொல்லுங்க......அதனாலே நம் நாவிற்கு தெரிந்த சுவையை அவங்களுக்கும் பழக்கிடோம்னா எல்லோருக்கும் வசதி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒவ்வொரு ஆணும் தனக்கு விருப்பமான இடத்தை தேடிச்சென்று உண்ணுகின்றனர். ரசித்து ருசித்து ஊண்ணும் அவர்களுக்குத் தான் பெண்களைவிடவும் அதிகமாகத் தெரியும் எங்கே ருசியான உணவு கிடைக்கும் என்று. நல்ல ஊதாரணம் என் அப்பா. சேலத்தில் எந்த இதத்தில் எந்த கடையில் எந்த உணவு ருசியானது என்று ஒரு பட்டியலே வைத்திருக்கிறார். பெண்கள் பெரும்பாலானவர்கள், அப்படித் தேடி அலைவதில்லை. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை விரும்பிய உணவு எங்கிருன்தாலும் சென்று சாப்பிடுவார்கள்.
பெண்கள் பெரும்பாலானவர்கள், அப்படித் தேடி அலைவதில்லை. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை விரும்பிய உணவு எங்கிருன்தாலும் சென்று சாப்பிடுவார்கள்.

latest ஒரு song பாருங்க:
நம்ம பொறப்பு தான் நல்லா ருசித்து சாப்பிட கிடைச்சது...(மன்னிக்கவும் இப்படி டொட்ச் உசெ பன்னதுக்கு)படம்: உன் சமையல் அறையில்.

எல்லாவகையான தமிழ்நாட்டு உணவும் வருகிறது.இதிலும் ஆண்களே அதிகம் ரசித்து ருசித்து உண்கின்றனர். சமைப்பதும் அவர்களே அதிகம்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

தான் அறிந்த ருசி தன் கணவருக்கும் புரிந்ததா இருக்கிறாதா என்பதை புரிந்துக் கொள்ளவே சாப்பிடும் போது ஆண்களை கேள்வி கேக்குறோம்....இதில் என்ன தப்பு?

தோழியே, பட்டிமன்றத்தின் விதிமுறைப்படி, யாரையும் பேர் சொல்லி குறிப்பிட கூடாது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழியே நேரமில்லை என்று எல்லோரும் சொல்வார்கள் என்று எண்ணி தான் நேரம் காலம் சந்தர்ப்பம் அமைந்தால் என்று தலைப்பில் விளக்கம் அளித்திருந்தேன்.

ஒருவேளை பெண்களுக்கே வயறு சிறுசோ அதனால் தான் நிறைய சாப்பிட முடியவில்லையோ என்னவோ.....எனக்கு தெரிந்து பெண்கள் அதிகமாக சாபிட்டவர்களை நானும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை......இப்போ தான் மகாபாரத்தில் "இடும்பி" யை பார்த்தேன்.....அவள் பெண் தானே?

அப்படி எல்லாம் ரோட்டோர கடையை பற்றி நீங்க சொல்ல கூடாது....ஏன் சொல்ற(ங்க) நீ(ங்க).....அதெல்லாம் நீ(ங்க) சொல்ல கூடாது......உங்க நடுவர் கிட்ட கேளுங்க எந்த ரோட்டோர கடையில் என்ன நன்றாக கிடைக்கும் என்று......லிஸ்ட் கொடுப்பேன்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒருவேளை நீங்கள் பெண் உருவில் இல்ல ஆணாக இருப்பீர்களோ.......இப்படி எலும்பு, கல்யாண சாப்பாடு, மீன் வறுவல்,

இருங்க பெங்களூரில் உள்ள ஒரு ரோட்டோர கடை பத்தி உங்களுக்கு தனியாக தகவல் சொல்றேன்........

நீங்கள் ஒருவரே வாழும் உதாரணம் பெண்கள் எப்படி ருசித்து சாப்பிடுவார்கள் என்பதற்கு......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நூறாவது பட்டிமன்றத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

பரவாயில்லையே உங்கள் வீட்டில் நீங்க புதிதாக செய்தால் எல்லோரும் ட்ரை பண்ண வராங்களா? எங்க வீட்டில் எல்லோரும் எஸ்கேப் தான்.......நமக்கும் அந்த தைரியம் கிடையாது.......ஒருவேளை நல்ல இல்லை என்றால் மறுமுறை (நன்றாக) செய்கிறேன் என்றாலும் விட மாட்டார்கள்......பாசக்கார மனுசங்க......

இருந்தாலும் கணவர் ஊருக்கு போயிட்டார் என்றால் "அரிசி பருப்பு சாதம்" விடுத்து வேறு மெனு தானே?

தோழியே சந்தர்ப்பம் அமைந்தால் ருசித்து ரசித்து தூள் கட்டிட மாட்டீங்க?

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்னைப் பொறுத்தவரை உணவை ருசித்து சாப்பிடுவது ஆண்களே.
வீட்டில் சமைக்கும் போதே குடும்பத் தலைவனுக்கு என்ன‌ பிடிக்கும் ,எப்படி சமைத்தால் பிடிக்கும் என்பதை யோசித்தே சமையல் பண்ணுகிறோம்.
தலைவன் "இன்னிக்கு சமையல் சூப்பர்னு" சொல்லிட்டால் தலைவிக்கு தலை கால் புரியாது. அந்த‌ பாராட்டு அவளை புது டிஷ் எல்லாம் பண்ண‌ வைக்கும்.
நாமே சமைத்து நாமே சாப்பிடறதை விட‌ அதை கணவர் பாராட்டும் போது ஆர்வம் அதிகமாகின்றது.
இது தான் எல்லா வீட்டிலும் நடக்குது.
கணவர் ஊருக்கு போயிட்டால் அன்னிக்கு சமையல் சிம்பிள் தான். போதும்னு தோணும். இன்னிக்கு ரெஸ்ட்னு தோணும்.
ருசித்து சாப்பிட‌ ஆள் இல்லாமல் சமைக்க‌ ஆர்வம் வராது.

;) //அப்படி எல்லாம் ரோட்டோர கடையை பற்றி நீங்க சொல்ல கூடாது....ஏன் சொல்ற(ங்க) நீ(ங்க).....அதெல்லாம் நீ(ங்க) சொல்ல கூடாது......உங்க நடுவர் கிட்ட கேளுங்க எந்த ரோட்டோர கடையில் என்ன நன்றாக கிடைக்கும் என்று......லிஸ்ட் கொடுப்பேன்......// - ஹஹஹா... பெங்களூரில் ப்ராஜக்ட் பண்ண வந்த கல்லூரி நாட்களில் ஜெய நகர் ஏரியாவில் ஒரு கோவிலில் வியாழக்கிழமை கிடைக்கும் புளியோதரைக்காகவே போவோமாக்கும் ரூம் மேட்ஸ் எல்லாரும். ;) வரும் வழியை மாற்றி ரு மார்க்கட் ஏரியாவில் பானி பூரி சாப்பிடன்னே போவோம். எதுல வஞ்சம் வெச்சோம் சொல்லுங்க???

அந்த ரோட்டோர கடையை சீக்கிரம் சொன்னா வசதியா இருக்கும்... இந்த வாரம் 4 நள் லீவு வருது நடுவரே. பெங்களூரை ஒரு வழி பண்ண திட்டம். ;)

நடுவரே... எதிர் அணியில் இருக்கவங்களை எல்லாம் சொல்றதையெல்லாம் அப்படியே நம்பிபுடாதீங்க, என் ப்ளாக் பக்கம் எந்த ஏரியாவில் எந்த உணவகம் பெஸ்ட், அங்க என்ன உணவு பெஸ்ட், எல்லாரும் எப்படி விரும்பி சாப்பிடுவாங்கன்னு பெரிய உண்மை, பெரிய பட்டியல் உங்களுக்கு கிடைக்குமாக்கும். ;) நான் உள்ளதை உள்ள மாதிரி சொல்றதால என்னை ஆணா பெண்ணான்னு குழப்பிக்க கூடாது. என் நண்பர்கள் வட்டமெல்லாம் மழைன்னா தம் அடிக்க தாங்க விரும்புவாங்க... நான் தான் கம்பெனிக்கு ஆளில்லாம டீ அடிக்கிற ஆளு :( ரசனையே இல்லாத ஆண்களை என்ன செய்ய?

//பெண்கள் பெரும்பாலானவர்கள், அப்படித் தேடி அலைவதில்லை. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை விரும்பிய உணவு எங்கிருன்தாலும் சென்று சாப்பிடுவார்கள்.// - நம்பாதீங்க... எங்க வீட்டில் நானும் தங்கைய்ம் தான் எங்க நல்லா இருக்கும்னு சொல்லனும். எங்க அப்பாக்கோ, இவருக்கோ ஒன்னும் தெரியாது. நாங்க சொன்னா சரிம்பாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பர்களே எனக்கு இங்கே மணி நள்ளிரவை தாண்டி விட்டது......அதனால் மீண்டும் நாளை பதிவிடுகிறேன்......வாதங்கள் தொடரட்டும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்