test tube baby

ஹாய் தோழீஸ்

அருசுவை தோழிகள் அனைவரும் எப்படி இருக்கீங்க‌. சில‌ மாதங்களாக‌ தளத்திற்கு வரமுடியவில்லை.
எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் முடிந்து விட்டது கடைசி மூன்று மாதங்களாக‌ ஒரு பிரபல‌ மருத்துவமனையில் நானும் என் கணவரும் ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டிருக்கிரோம். என் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்தார்கள். non moving cells என்று ரிசல்ட் வந்தது. கவுன்ட் 15 மில்லியன் இருக்கிறது இருந்தும் கூட‌ விந்துவிற்க்கு நகர்ந்து செல்லும் தன்மை இல்லை என்று சொல்கிறார்கள். இத்ற்க்கு முடிவு டெஸ்ட் டியூப் பேபி என்கிறார்கள்.
இதற்க்கு வேறு வழி இல்லையா. வேறு எதாவது செய்ய‌ முடியுமா தயவு செய்து பதில் கூறுங்கள் தோழீளே.
உங்கள் பதிலுக்காக‌ காத்திருக்கிறேன்
மீனா

நீங்கள் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் இன்னும் 2 அல்லது 3 டாக்டர்களை பார்த்து அதன் பின் முடிவு செய்வது நல்லது என்று நினைக்கிறேன். இப்போ எல்லா பிரச்சனைகளுக்கும் maximum மருந்து கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால் இதற்கும் ஏதாவது தீர்வு இருக்கும் என நம்புகிறேன்.

எனக்கும் சில பிரச்சனைகள் இருந்தது(cyst and fibroid). நாங்கள் 3 மருத்துவர்கள் பார்த்து கடைசியாக சென்னையில் ஒரு டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தோம். இப்போது ஒரு பையன் இருக்கிறான். மற்ற டாக்டர்ஸ் எல்லாரும் எனக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். சேலத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து சரியாகவில்லை என்றால் test tube baby ட்ரை பண்ணலாம் என்று சொன்னார்கள். நான் கடைசியாக பார்த்த டாக்டர் மட்டும் தான் அறுவைசிகிச்சை இப்போது பண்ணாமலே குழந்தை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி சிகிச்சை அளித்தார். அவர்கள் சொன்ன மாதிரியே குழந்தை கிடைத்தது. கடவுளின் உதவியும் இருந்தது.

அதற்காக தான் இன்னும் 2 அல்லது 3 டாக்டர் பார்க்க சொல்கிறேன். நீங்கள் இப்போது எடுத்திருக்கும் ரிப்போர்ட்டை காட்டி openion கேளுங்க. அப்புறம் முடிவு எடுங்கள். நல்லா pray பண்ணுங்க. சீக்கிரம் குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள்.

உங்களுடைய‌ பதிலுக்கு மிக்க‌ நன்றி.

--

-

hello dr
வால்நட் சாப்பிட்டல் விந்துவிற்கு நகர்ந்து செல்லும் தன்மை அதிகரிக்குமா ?
இந்த‌ நிலையில் iui செய்தால் கருதரிக்க‌ முடியுமா dr

இந்த‌ தகவலை எல்லாம் கூகில் செர்ச் பண்ணாலே கண்டு பிடிச்சுக்குவோம்பா. நீங்க‌ கொடுத்திருக்குறதே காபி பேஸ்ட் தானே? எந்த‌ டாக்டரும் பதில் சொல்ல‌ இணையத்துல‌ இருக்கிற‌ தகவலை காபி பேஸ்ட் பண்ண‌ மாட்டாங்கப்பா. என்னத்தச்சொல்ல‌!!

யாரோ எவரோ இங்க‌ வர‌ கேள்விகளை பார்த்துட்டு டாக்டர்னு ஐடி (வெறும் ஐடி தான்) ரெஜிஸ்டர் பண்ணிட்டு வந்து பெண்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கார். அவரையும் நம்பி கேள்வி கேட்கறீங்க‌! இந்த‌ நம்பிக்கையை உங்களை பார்க்கும் மருத்துவர் மேல‌ வைங்கம்மா. ஹாஸ்பிட்டல்ல‌ குறைந்தபட்சம் நீங்க‌ சந்தேகம் கேட்கின்றவர் டாக்டர் தான் என்றாவது ஒரு உறுதி இருக்கும்.

மெயில் ஐடி வேற‌ கொடுத்து வெச்சிருக்கு. எத்தனைபேர் மெயில் போட்டாங்களோ!

உங்கள் நிலை புரிகிறது மீனா. ஆனா முகம் தெரியாத‌ இடத்தில் கவனம் தேவைம்மா. எந்த‌ சந்தேகம் இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை வேறு வேறு மருத்துவரை கூட‌ பார்த்து சந்தேகத்தை கேளுங்க‌.

hai
sorry நான் இந்த‌ மாதரியெல்லாம் யோசிக்கவே இல்லை. எப்படியாவது குழந்தை பெற்றுக் கொள்ள‌ வேண்டும் என்ற என்னத்தில் இருந்தேனே தவிர‌ நாம் யாரிடம் கேள்வி கேட்கிறோம் அவர் யார், அவர் சொல்வது உண்மை தானா, என்று எதை பற்றியும் சிந்திக்காமல் இருந்துவிட்டேன்.தக்க‌ சமயத்தில் உதவி செய்தமைக்கு நன்றி
thank u so much

ama pa avaga soldrathuhtan correct ethule neriya gents varaga..oru thozhi husbandkuda pracahaninu kelvi kettu iruthanga athuku akash nu oru gents kavalapadathiganu solitu avaroda ph number potu call me nu potu irukaru..ethalam yena avagalukulam manasacheye ilaya...

இதுவும் ஒரு பாடம் தோழீ

மேலும் சில பதிவுகள்