சுற்றுலா போக‌லாம்‍‍‍ ‍‍ 2

ஹாங்காங் இது சீனாவின் தெற்கே முத்து நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இது சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாக‌ பகுதியாக‌ உள்ளது. அதாவது தனக்கென‌ தனித்துவமான‌ தன்னாட்சி அதிகாரங்களை உடைய‌ நாடு. ஆனால், இதன் வெளிவிவகாரத்துறை சீனாவின் வசம் உள்ளது.

மலைத்தொடரும், குன்றுகளும் நிறைந்த‌ பகுதி இது. மலைகளை செதுக்கி சமதரையாக்கி பரப்பளவை அதிகப்படுத்தி உள்ளனர். உயரமான‌ கட்டடங்கள் கட்டுவத‌ற்கேற்ற‌ நில‌ அமைப்பு உள்ளது. சின்னஞ்சிறிய‌ நாடான‌ இங்கே இடப்பற்றாக்குறை காரணமாக‌ விண்ணைத் தொடும் கட்டடங்கள் ஏராளமாக‌ உள்ளது.

முதல் நாள் டிஸ்னி வேர்ல்டு சென்றோம். இது மலைகளுக்கு இடையே அமைந்துள்ள தீம் பார்க்.
முதலில் லயன் கிங் சினிமாவை அப்படியே "தி ஃபெஸ்டிவல் ஆஃப் லயன் கிங்" என்று நாட‌க‌ வடிவில் ஷோவா பார்த்தோம். குகை போன்ற‌ அமைப்புடன் அரங்கம் அமைந்திருந்தது. ஸ்டேஜ் தரை விதவிதமாக‌ மாறியவண்ணம் பிரமிப்பூட்டுவதாக‌ இருந்தது.
ஃபேன்டசிலேண்ட், டுமாரோலேண்ட், அட்வென்சர்லேண்ட் இப்படி அடுக்கடுக்காக‌ அனைத்தையும் சுற்றிவிட்டு கடைசியில் ஃபயர் ஷோ பார்த்துவிட்டு இரவில் திரும்பினோம்.

மறு நாள் ஷாப்பிங். டெம்பிள் ஸ்டிரீட், லேடீஸ் மார்க்கெட் போனோம். அங்கே எதுவும் தரமான‌ பொருளாக‌ இல்லை. எனவே எதுவும் வாங்காமல் வேடிக்கை பார்த்தோம்.
'சுங்கிங் மேன்சன்' இது ஒரு ஷாப்பிங் சென்டர். இங்கு எல்லாவிதமான‌ பொருட்களும் கிடைக்கும். எல்லா நாட்டு உணவும் கிடைக்கும். 'ஹோட்டல் சரவணா'' என்ற‌ தமிழ் நாட்டு உணவகமும் இங்கு ஃபேமஸ்.

அனைத்துவித‌ எலக்ட்ரானிக் பொருட்களும் இங்கு மிகவும் குறைந்த‌ விலையில் வாங்கலாம். தேவையான‌ பொருட்களை வாங்கிக் கொண்டோம்.

எங்களுக்கு ட்ராவல் கைடாக‌ வந்தவர் ஒரு சீக்கியர். இந்தியா என்றதும் மிக்க‌ மிகிழ்வுடன் எங்களை அவர் கவனித்துக் கொண்டார்.

அன்றிரவு "சிம்பொனி ஆஃப் லைட்ஸ்" ஷோ கண்டுகளித்தோம். கலைநயமிக்க‌ கப்பலில் இருந்த‌ வண்ணம் பார்த்தால் சுற்றிலும் உள்ள‌ வானுயர்ந்த‌ கட்டடங்களில் இருந்து கடல் நீரில் வண்ணமிகு ஒளி வெள்ளம் பிரதிபலிக்கும், அந்தக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

மறுநாள் 'தி பீக் கலேரியா' என்ற‌ உச்சிப் பகுதிக்கு அழைத்து சென்றனர். இங்கே மேல் தளத்தில் கலை ந‌யமிக்க‌ பொருட்கள் வாங்கலாம். இதன் உச்சியில் இருந்து ஹாங்காங் நாட்டைப் பார்த்து மகிழ்ந்தோம்.
இங்கே "விஷ் ட்ரீ" என்று இருக்கிறது. அங்கே உள்ள‌ பிளாஸ்டிக் இலைகளில் நமது ஆசைகளை எழுதி மரத்தில் கோர்க்கலாம். எல்லாம் ஒரு நம்பிக்கை தான் இல்லையா ?

மேலும் மியூசியம் சென்று விட்டு, ஸ்கை 100 என்னும் 118 மாடி விண்ணைமுட்டும் கட்டடத்துக்கு சென்றோம். மேல் தளம் செல்ல‌ படுவேகமான‌ லிஃப்ட். கண்மூடி திறப்பதற்குள் வந்து விட்டோம்.

விக்டோரியா ஹார்பர் இங்கே இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய‌ ஹார்பர் இது. ஆண்டு தோறும் இரண்டு லட்சத்துக்கு அதிகமான‌ கப்பல்கள் இங்கு வந்து செல்கின்றன‌.

இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மெக்காவு தீவு உள்ளது. அங்கே கேசினோ ரொம்பவும் ஃபேமஸ்.

ஹாங்காங்கில் என்னை மிகவும் கவர்ந்த‌ ஒரு விஷயத்தை இங்கே நான் குறிப்பிட்டாக‌ வேண்டும். அங்கே அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் சாலையில் எங்கும் சேறோ சகதியோ காண‌ முடியவில்லை. சாலை படு சுத்தமாக‌ காட்சியளித்தது. சாலைக்கு அடியிலேயே நேர்த்தியான‌ முறையில் டிரைனேஜ் அமைக்கப்பட்டிருந்த‌ விதம் என்னைக் கவர்ந்தது.

நம் நாடும் எப்போது இப்படி சுத்தமாக‌ ஆகும் என்று என் மனம் ஏங்கியது. ஆசையோடு அந்த‌ சுத்தமான‌ சாலையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பி 'ஸ்வர்ணபூமி' ஏர்போர்ட் வந்து இறங்கினோம்.

"ஸ்வர்ணபூமி' ஏர்போர்ட் எங்கேன்னு தெரியுமா? காத்திருங்கள் அடுத்த‌ பதிவுக்கு.

Average: 5 (4 votes)

Comments

ஹாங்காங் அருமை.

இங்க‌ UK ல‌ கூட‌ அடிக்கடி மழை பெய்யுது, ஆனாலும் எங்கேயும் சேறோ சகதியோ காண‌ முடியற‌தில்லை.
//நம் நாடும் எப்போது இப்படி சுத்தமாக‌ ஆகும் என்று என் மனம் ஏங்கியது// இதே ஏக்கம் தான் எனக்கும்.

//ஸ்வர்ணபூமி' ஏர்போர்ட் எங்கேன்னு தெரியுமா?// கடல்புறாவில் படித்த‌ ஞாபகம் இருக்கே! இப்போதய‌ இந்தோனேசியா அல்லது சுமத்ரா correct ஆ?

//கலைநயமிக்க‌ கப்பலில் இருந்த‌ வண்ணம் சுற்றிலும் உள்ள‌ வானுயர்ந்த‌ கட்டடங்களில் இருந்து கடல் நீரில் வண்ணமிகு ஒளி வெள்ளம் பிரதிபலிக்கும். அந்தக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.// - இதை நானும் மாலத்தீவில் அதிகம் ரசிப்பது. இதுக்காகவே இரவ்ல் பீச் சைட் போய் உட்கார்ந்திருப்போம். மிஸ் பண்றேன் :(

ஸ்வர்ணபூமி.. ஏதோ ரஜேஷ்குமார் நாவல்ல வர பேரு போல இருக்கு ;) சூப்பர்... நல்லா ஈசியா சொல்லிட்டு போறீங்க எல்லாத்தையும். தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செலவு இல்லாம ஹாங்காங் பயணம் ஆரம்பிச்சாச்சு .எல்லாமே பிரம்மாண்டமாஉ இருக்கு சொல்லறது கேட்கும்போது. ஸ்வர்ணபூமி போக நாங்களூம் ரெடி . ராஜேஸ்குமார் நாவல் தானே.

Be simple be sample

உங்களுடைய‌ முதல் பதிவுக்கு நன்றி.
சுத்தமான‌ அந்த‌ சாலைகள் கண்ணுக்குள்ளேயே நிக்குது பா.
//கடல் புறா// சாண்டில்யனிடம் சென்று விட்டீர்கள். நிறைய‌ புத்தகங்கள் படிப்பீங்க‌ போல‌. பொறுங்க‌ சொல்றேன்.

ஆமாம் வனி.
//கலைநயமிக்க‌ கப்பலில் இருந்த‌ வண்ணம் பார்த்தால் சுற்றிலும் உள்ள‌ வானுயர்ந்த‌ கட்டடங்களில் இருந்து கடல் நீரில் வண்ணமிகு ஒளி வெள்ளம் பிரதிபலிக்கும்//
அந்த‌ கலர் கலரான‌ ஒளிவெள்ளத்தில் கடல் நீர் வைரக்கற்கள் போல‌ தக‌ தக‌ என‌ ஜ்வலித்தது.
உங்களுக்கு மாலத் தீவு பீச் நினைவு வந்து விட்டதா?:)
உங்களுக்கு ராஜேஷ்குமார் நாவல் பிடிக்குமா? ஸ்வர்ணபூமி
ஊஹூம் இது அது இல்லை வனி.
உண்மையிலேயே ஏர்போர்ட் தான்

நான் சுருக்கமா தான் சொல்லி இருக்கேன் ரேவா. டிஸ்னி வேர்ல்டு மட்டும் ஒரு பதிவு போடலாம். அத்தனை சூப்பர்.
// ஸ்வர்ணபூமி போக நாங்களூம் ரெடி . ராஜேஸ்குமார் நாவல் தானே.//
இல்லையே. உங்களுக்கு பிடித்த‌ எழுத்தாளர் பேரைச் சொல்லுறீங்க‌ போல‌.
பொறுங்க‌ சொல்றேன்.

அழகான படங்கள் மூலமாக அருமையான சுற்றுலாவை ரொம்ப சிறப்பாக
சொல்லியிருக்கீங்க; ரொம்ப அருமைங்.
மேலும் ஆர்வமுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம் :-)

நட்புடன்
குணா

//அழகான‌ படங்கள்// மிக்க‌ நன்றி. அடுத்த‌ பதிவும் விரைவில் வெளியாகும். மீண்டும் நன்றி சகோ குணா.:)

மே மாசத்துல ஹாங்காங் க்ளைமேட் எப்படி இருக்கு? வெயில் அதிகமா? பனி அதிகமா? கைடு ன்னு சொல்றதை வச்சுப் பார்த்தா பேக்கேஜ் டூர் போனீங்கன்னு நினைக்கிறேன். வேற என்ன மாதிரியான பிரச்சனைகள் அங்கே இருந்துச்சுன்னு சொல்ல முடியுமா?

ஸ்வர்ணபூமி ஏர்போர்ட் எனக்கு தெரியுமே.. ! :-) க்ளூ: அது ஹாங்காங் ல இல்லை.

(ஹாங்காங்ல நம்ம அறுசுவை மக்கள் யாராவது இருக்காங்களா?)

வணக்கம்.
மே மாதத்தில் ஹாங்காங்கில் பனி இல்லை; வெயிலும் இல்லை; க்ளைமேட் மிகவும் இதமாக‌ இருந்தது, அவ்வப்போது மழை சாரல் மாதிரி பெய்து கொண்டு இருந்தது. குடை வாங்கி ஹாண்ட்பேக்கில் வைத்திருந்தோம்.
ஆமாம். பேக்கேஜ் டூர் தான் போனோம்.
நாங்க‌ போனப்போ பிரச்சனைன்னு எதுவும் இல்லை. நல்லா எஞ்சாய் பண்ணினோம்.
அறுசுவைத் தோழிகளுக்கு தெரிவிக்க‌ வேண்டுமென்றால், சுங்கிங் மேன்சன் இரவு நேரத்தில் பாதுகாப்பான‌ இடம் அல்ல‌. அதுவும் பெண்களுக்கு ஏற்றதல்ல‌ என்பதை எங்கள் கைடு திரு. ஹேப்பி சிங் அறிவுறுத்தியிருந்தார்.
ஸ்வர்ணபூமி... அது ஹாங்காங்கில் இல்லை. ஓரெழுத்தை மாற்றினால் சரியான‌ இடம் வரும்.
நன்றி.

தகவலுக்கு நன்றிங்க. இணையத்தில ஒவ்வொரு மாதிரி தகவல் கிடைச்சது. வெயில் அதிகம், ஹியுமிடிட்டி அதிகம், பனி அதிகம்னு நிறைய ரிவ்யூஸ் பார்த்தேன். வெளிநாட்டுக்காரங்க 30 டிகிரியை தாண்டினாலே பயங்கர வெயில்னு சொல்லிடுவாங்க. நம்ம ஊர் ஆட்களுக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசை.

ஸ்வர்ண பூமி ஏர்போர்ட், பாங்காங் ஏர்போர்ட் தான்.
அடுத்து தாய்லாந்து சென்றோம்.

ஹாங்காங் சாரல் மழை எனில், பாங்காங்கில் நல்ல‌ வெயில்.

அன்பு நிகிலா,

யு.எஸ்.ல இருந்து இந்தியா திரும்பிய போது, ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக ஹாங்காங் ஏர்போர்ட்டில் இருந்தோம்.

சரியாகத் திட்டமிடாததால், ஊர் சுற்றிப் பார்க்க முடியவில்லை.

இப்ப நீங்க எழுதியிருப்பதைப் படிக்கும்போது, அடடா, சுற்றிப் பார்த்திருக்கலாமே என்று ஏக்கமாக இருக்கு.

அவசியம் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் வர்ணனைகள். பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாங்காங் சின்னஞ்சிறிய‌ நாடு தான். பார்க்க‌ வேண்டிய‌ அனைத்து இடங்களும் அருகருகே இருக்கின்றன‌.
ஐந்து மணி நேரத்தில் நிறையவே பார்க்கலாம்.
வருத்தப்படாதீங்க‌ சீதா.
அடுத்த‌ வாய்ப்பு விரைவில் கிடைக்கும்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.