
பெரிய இடைவெளியா போச்சு. பரவாயில்லை, ஆனாலும் விடாம தொடரலாம் தானே! ;) இங்கே பலரும் கேட்க கூடிய ஒரு கேள்வி, கப்புன்னா எத்தனை கிராம்? இது எல்லா பொருளுக்கும் ஒரே மாதிரி இல்லை. அதனால் ஓரளவுக்கு எல்லாத்துக்கும் அளவு தெரிஞ்சுகிட்டா குறிப்புக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வசதியா இருக்கும். கீழே எனக்கு தெரிந்த சில:
1 கப் மைதா - 125 கிராம்
1 கப் கோதுமை மாவு - 120 கிராம்
1 கப் சர்க்கரை - 200 கிராம்
1 கப் ஐசிங் சுகர் - 125 கிராம்
1 கப் ப்ரவுன் சுகர் - 200 கிராம்
1 கப் ரவை - 160 கிராம்
1 கப் தயிர் - 245 கிராம்
1 கப் சாதாரண பொன்னி அரிசி - 200 கிராம்
1 கப் பாசுமதி அரிசி - 195 கிராம் (200ன்னே வெச்சுக்கலாம் பொதுவா அரிசிக்கு, 5 கப் என்றால் 1 கிலோ)
1 கப் அரிசி மாவு - 160 கிராம்
1 கப் வெண்ணெய் என்பது ஏறக்குறைய 225 கிராம்
1 ஸ்டிக் பட்டர் என்பது ஏறக்குறைய 113 கிராம்.
1 கப் கொக்கோ பவுடர் என்பது 120 கிராம்.
இவை ஸ்டாண்டர்ட் மெஷர்மண்ட் கப் என சொல்லப்படும் 250ml கப்.
பேக்கிங் ட்ரேவை வெறும் வெண்ணெய் / எண்ணெய் தடவியும் தயார் செய்யலாம். அல்லது அவற்றை தடவிய பின் மாவை தூவி தட்டி ட்ரேவின் உள் பகுதி முழுக்க மாவு பரவும் படி செய்து பின் அதிகமாக ஒட்டாமல் இருக்கும் மாவை கொட்டிவிடலாம். சாக்லேட் கேக் என்றால் மாவுக்கு பதிலாக கொக்கோ பவுடரை தூவலாம். அல்லது நான்-ஸ்டிக் குக்கிங் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். சில நேரம் உள்ளே பட்டர் பேப்பர் நறுக்கிப்போட்டும் கலவையை ஊற்றலாம். பட்டர் பேப்பர் போடும் போது கேக் அடியில் ஒட்டாமல் எடுக்கச் சுலபமாக வரும். அதிக மாய்ஸ்ட் கேக் செய்யும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேக்கிங் ட்ரே நான்-ஸ்டிக் அல்லது கண்ணாடி பயன்படுத்துவதை விட அலுமினியம் நல்ல மெத்தென கேக் தயாரிக்க உதவும் என எப்போதோ டிவியில் யாரோ சொல்லிக்கேட்டேன். ;)
தப்பு தப்பா என்ன நடக்கலாம்... இங்க ஒரு குட்டி பட்டியல்:
1. முதல்ல உங்க அவனை நீங்க சரியா முற்சூடு செய்யறீங்களா? இது பழகப் பழக உங்களுக்கு புரியத்துவங்கும். உங்க அவன் எவ்வளவு நேரத்தில் தேவையான சூட்டுக்கு வருதுன்னு. இல்லன்னா இருக்கவே இருக்கு அவனுக்குன்னு தெர்மாமீட்டர். வாங்கி வெச்சு செக் பண்ணிக்கங்க. ;)
2. அடுத்தது நீங்க சொன்ன பொருட்களை சரியா அளந்து எடுக்கல, அல்லது எதையாவது மாற்றி அதுக்கு பதிலா வேறு எதையாவது சேர்க்க முயற்சித்திருக்கலாம். சரியான சப்ஸ்டிட்யூட் இல்லன்னா கேக் சொதப்பிடும்.
3. சில அவனில் ஒரு பக்கமா அதிகம் சூடாகலாம். அப்படியிருந்தால் குக்கீஸ் போன்றவை அடுக்கும் போது ஒரு பாதி ட்ரேவில் உள்ளவை பேக் ஆகும் முன் மற்ற பாதி டார்க் ஆக துவங்கி இருக்கும். என்னிடம் ஒரு அவன் அப்படி இருந்தது. அது போன்ற பிரெச்சனை இருந்தால் அடிக்கடி நடுவில் கேக் ட்ரேவை திருப்பி விடுவேன். ஓரளவு சரியாக வர உதவியது.
4. அடுத்தது மாவை சரியாக கலக்காமல் விடுவது. இதனால் எல்லாம் ஒன்றாக கலந்து விடாமல் இருந்து, கேக் சொதப்பிவிடும்.
5. அடுத்தது மாவை அதிகம் கலப்பது. குறிப்பில் எப்படி கலக்கச் சொல்கிறார்களோ அப்படியே கலக்க வேண்டும். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலக்கும் போது கடைசியாக லிக்விட் பொருட்களோடு மாவை கலப்போம், அப்போது பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா வேலை செய்ய துவங்கும். கலவையின் உள்ளே பபுல்ஸ் ஃபார்ம் ஆகும். அதிக நேரம் கலக்கும் போது அந்த காற்று உடைந்து போகும், இதனால் அவனில் வைத்ததும் கேக் உப்பி வராமல் அழுந்திப் போயிருக்கும். உங்க கேக் கெட்டியா இருந்தா இது காரணமா இருக்கலாம்.
6. கேக் மாவை கலந்ததும் உள்ளே வைக்காமல் இருப்பது. அவனை முற்சூடு செய்வது எதுக்காக? மாவை உள்ளே வைத்ததுமே பேக் ஆக துவங்கிடணும், அந்த மாவுக்கு தேவையான சூடு ரெடியா இருக்கணும் என்று தானே? மாவை வெளியே அதிக நேரம் வைத்தாலும் கலந்த மாவுக்கு உடனே தேவையான சூடு கிடைக்காம போகும் தானே? இது ஏன் என்றால் 5ல் சொன்னது போல அந்த பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா வேலை செய்ய துவங்கி சில நிமிடங்களுக்கு தான் அந்த காற்று உள்ளே இருக்கும். அதன் பின் அவை செயலிழந்து போகும். அதனால் அவை செயலிழக்கும் முன் அவனில் சரியான சூட்டில் பேக் ஆக வேண்டும். தாமதமானாலும் கேக் கெட்டியா தான் இருக்கும்.
7. கேக் பேக் பண்ண வைத்த உடனே திறந்து பார்ப்பது, அல்லது அடிக்கடி திறந்து பார்ப்பது உள்ளே உள்ள சூடு குறைந்து போக காரணமாகும். இதனால் உங்கள் கேக் சரியாக பேக் ஆகாமலோ அல்லது நடுவில் அழுந்தியோ போகும்.

8. அதே போல நீங்கள் பயன்படுத்தும் பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா காலாவதி ஆகாமல் இருக்கிறதா என கவனியுங்கள். அப்படி எக்ஸ்பைரி டேட் முடிஞ்சிருந்தா அது வேலையை பார்க்கப்போறதே இல்லை. Sponge Cake முயற்சித்தால் Pan Cake தான் கிடைக்கும். :(
9. முட்டை, பட்டர் ரூம் டெம்பரேச்சரில் இருப்பதும் அவசியம். பட்டரை அப்படியே சர்க்கரையோடு கலக்க சொன்னால் அப்படித்தான் செய்ய வேண்டும். நாமாக வெண்ணெயை உருக்கி சேர்த்தால் குறிப்பில் உள்ள அதே கேக் கிடைக்காது, உங்களுக்கு வேறு மாதிரி தான் ரிசல்ட் கிடைக்கும். ரூம் டெம்பரேச்சர் என்பது ரொம்பவே முக்கியம். வெண்ணெய் அதிக நேரம் வெளியே இருந்தாலும் கேக் நன்றாக வராது. உங்க கேக் சில நேரம் அதிக மாய்ஸ்டாகவும், ஸ்டிக்கியாகவும் (கையில் ஒட்டும்விதமாக) அல்லது நடுப் பகுதி உப்பி பின் வீழ்ந்து போயிருந்தால் அது பட்டர் அதிக நேரம் வெளியே இருந்தது காரணமாக இருக்கலாம். அதிக நேரம் வெளியே இருந்தால் வேர்த்து நீர்த்துப் போகும்.
10. மாவை சரியாக சலிக்காமல் இருந்தாலும் கேக் ஒன்று போல பேக் ஆகாம வர வாய்ப்பு இருக்கு.
11. கேக் மேலே / கீழே டார்க் ஆகியும் கேக் நன்றாக எழும்பவில்லை என்றால் அவன் சூடு அதிகம். கேக் பேக் ஆகிவிட்டது, ஆனாலும் எழும்பவில்லை அதிகம் என்றால் அவனின் சூடு குறைவாக இருந்திருக்கலாம்.
12. மேலே பிசு பிசுப்பது லிக்விட் கண்டண்ட் அதிகமானாலும் ஏற்படும்.
13. பேக்கிங் பவுடர் அதிகமானாலும் கேக் நடுவில் எழும்பிய பின் அழுந்திப்போகும்.
14. அதிக நேரம் பேக் செய்தாலோ, அதிக சூட்டில் பேக் செய்தாலோ கேக் ட்ரையாக வரக்கூடும்.
15. மாவு அதிகமானாலோ அல்லது லிக்விட் / ஃபேட் கண்டண்ட் குறைந்து போனாலோ கூட கேக் ட்ரையாக வரக்கூடும்.
இன்னும் நிறைய இருக்கு... ஆனா எல்லாத்தையும் ஒரே லிஸ்ட்டா போட்டா குழம்பிப் போவீங்க ;) அதனால் இப்போதைக்கு இதோட நிப்பாட்டிக்கறேன். பயன்படுமா மக்களே இந்த குறிப்புகள்?? உங்க கருத்தை சொல்லுங்க. வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்க, அடுத்த பதிவில் பதில்கள் கொடுக்க முயற்சிக்கிறேன் (எனக்கு பதில் தெரிஞ்சா :P). ஒரு முறைக்கு 10 முறை சொதப்பினாலும் விடாம முயற்சி பண்ணுங்க, உலகில் சுலபமாக கிடைக்கக்கூடியது ஒன்றுமில்லை ;) முயற்சி செய்து தோற்றவர்களும் யாரும் இல்லை.
Comments
வனிக்கா
அனைவருக்கும் பயனுள்ளதா பல சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள்... தொடருங்கள்
அன்பு வனி
எத்துணை உபயோகமான டிப்ஸ். புக் மார்க் பண்ணி வச்சாச்சு. நன்றி .
ஏன் சரியா வரலைன்னு மண்டையைப் பிச்சுக்க வேண்டாம்.
பாராட்டுக்கள்.
நன்றி வனி.
இந்த அளவுகள், Tips கொடுத்தது மிக பெரிய உதவி. எனக்கு இது பிரச்சனையாக இருந்து நிறைய சொதப்பியிருக்கேன். இன்னமும் டம்ளர்,ஆழாக்கு என்பதுவும் டவுட்தான்.முடிந்தால் சொல்லுங்க. //பயன்படுமா மக்களே இந்த குறிப்புகள்?// கண்டிப்பா பயனுள்ள குறிப்புதான்.சந்தேகமே வேண்டாம். நன்றி வனி.
கேக்
//ஒரே லிஸ்ட்டா போட்டா குழம்பிப் போ//வாங்க என்பது உண்மைதான். ஆனாலும் யார் வேணுமானாலும் தேவைக்கு உடனே வந்து பார்ப்பாங்க இல்லை. //பயன்படுமா// நிச்சயம் வனி. அவ்வளவு அழகா கொடுத்து இருக்கீங்க. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
வனி
யாருக்கும் சந்தேக்மே வராது வனி .ஏன்னா வனி குறீப்புகள் ஸ்பெஷலிஸ்ட்
Be simple be sample
வனி
அனைவருக்கும் உபயோகமான நல்ல பயனுள்ள குறிப்புகள். நன்றி வனி.
//பயன்படுமா மக்களே இந்த குறிப்புகள்?? // என்ன இப்படி கேட்டுட்டீங்க, வனி சொன்னா அது பயன்படாம போய்டுமா என்ன?
பேக்கிங் டிப்ஸ்
வனி..இனி கூகுள் பண்ண தேவையே இல்ல. நிச்சயமா ரொம்பவே பயனுள்ள குறிப்புகள் தான்..
உங்களுக்கு அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்பா.
anbe sivam
சூப்பர் டிப்ஸ்
அன்பு வனி,
கேக் செய்து பார்க்க நினைக்கும் தொடக்க நிலை இளம் வல்லுனர்களுக்கு ரொம்ப உதவியான டிப்ஸ்.
அன்புடன்
சீதாலஷ்மி
வனி டார்ல் @
பேக் பண்ண திங்க்ஸ் ரெடி ,,ஆனா பயமா இருக்கு @
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
வனி
வனி நல்ல பயனுள்ள பதிவு, கேக் செய்யும் ஆசை வந்திடுச்சு :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
பிரியா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அம்முலு
மிக்க நன்றி :) சில நாள் முன் தோழி யாரோ கேட்ட போது கொடுத்ததையே தான் மீண்டும் கொடுத்திருக்கேன் இந்த இழையில். ஆழாக்கு கணக்கு எனக்கும் குழப்படி தான். பழைய இழைகளில் பலர் இது பற்றி பேசி இருக்காங்க, முடிஞ்சா புரிஞ்சா கண்டிப்பா கொடுக்கறேன் அம்முலு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
ஆஹா ;) பேக்கிங் குயின் சொன்னா மாற்று ஏது? நன்றி நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்ஸ்
ஹிஹிஹிஹீ.... புகழ்ந்தா வனிக்கு வெட்க வெட்கமா வருதாக்கும் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு
வனி பயன்படும்படியேவா எப்பவும் பேசுறேன் ;) என் மனசு போற போக்குல பேசுறேன். நன்றி அனு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிதா
மிக்க நன்றி :) ஏற்கனவே பல சொதப்பலில் நாங்க பண்ண கூகிள் எஃபக்ட்டு தான் இதுவும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதா
தொடக்க நிலைன்னு சொல்லிட்டு எப்படி வல்லுனர்கள்னு சொல்லலாம்?? எனக்கு டவுட்டு. கோச்சுக்கப்புடாது... எல்லாம் இமா காத்து வீசுது. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அஸ்வதா
இம்புட்டு சொன்ன பிறகும் பயமுன்னு சொன்னா வனி அழுவேன். ;( பயப்படாம குறைவான அளவில் ஒருமுறை முயற்சி பண்ணுங்க. எல்லாம் நல்லா வரும். மிக்க நன்றி அஸ்வதா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அறிவு
சாரி.. அருளு... நீங்க அவன் வாங்குறதா சொன்னீங்களே வாங்கியாச்சா? நன்றி. :)
சரி... இடையில் கொஞ்ச நாள் வரலயே... அம்மா நலமா? ஊருக்கு போய் வந்தீங்களா மீண்டும்?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Baking tips
பயனுள்ள டிப்ஸ். நியூ பேக்கர்ஸ் இந்த குறிப்புகள் பயன்படுத்தி ஈஸியா பேக் செய்யலாம் . நான் பேக்கிங் ஆரம்பிக்கும்போது இந்த மாதிரி டிப்ஸ் கிடைச்சிருந்தா இன்னும் பெர்பஃக்டா செய்திருப்பேன் :)
Kalai
கலை
மிக்க நன்றி :) இப்படி நீங்க சொன்னதை படிக்கிறதை விட மகிழ்ச்சி என்ன இருக்கு??
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vanitha
Enaku cake seiyarathu romba pidikum romba arvama eruppen enaku erundha doubt 1 2 eppo illa romba romba nalla erukku thanks 2 my vanitha
அர்ச்சனா
மிக்க நன்றி :) நல்லா பேக்கிங் தெரியுமானா குறிப்புகள் அனுப்புங்களேன்... நான் கத்துக்குட்டி தான், நிறைய வகை வகையா செய்ய ஆசை, ஆனா குறிப்புகள் தெரியாது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vanitha
Baking, craft, hair care tips, god show case ethu ellam therium ma epadi anuprathunu theriyala ma therincha sollu ma
அர்ச்சனா
ஆஹா!!! இம்புட்டு தெரிஞ்சவங்களை எல்லாம் நாங்க விடமாட்டோமே ;)
முதல்ல நீங்க செய்ய வேண்டியது தமிழ் தட்டச்சு :) வேற வழியே இல்லை, தமிழில் அனுப்பினால் மட்டுமே டீம் அதை ஏற்பாங்க, வெளியிடுவாங்க.
உங்களுக்கு தெரிஞ்ச சமையலோ, கைவினையோ... செய்யும் போடு ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுங்க. ஒவ்வொரு படத்தையும் 1, 2, 3... என்று வரிசையாக எண்ணிட்டு, அந்த ஸ்டெப்ல என்ன பண்ணனும், பண்ணிருக்கீங்கன்னு ஒரு விளக்கம் எழுதி arusuvaiadmin @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வைங்க. அம்புட்டு தான்... ஏதும் சந்தேகம் அல்லது திருத்தம் இருந்தா டீம் உங்கள் மெயிலில் தொடர்பு கொண்டு கேட்பாங்க.
ஆல் தி பெஸ்ட். :) விரைவில் எதிர் பார்க்கலாம் தானே?
பின் குறிப்பு: உங்க சமையல் அனுபவம் 5 வருடத்துக்குள்ளன்னு போட்டிருக்கே... சீன்னவரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன் ;) வாம்மா போம்மான்னு சொல்லும் அளவு நான் சின்ன பிள்ளை இல்லைங்கோ... ஹஹஹா. வனிக்கு 30 தாண்டியாச்சு. எதுக்கு மேல எவ்வளவுன்னு கேட்டு ஃபீல் பண்ண வெச்சுடாதீங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Edo epavae arambikeran
Edo epavae arambikeran vaelaiya very help ful information for me vanitha
Vanitha
Enga akka vukum unga age thango vanitha akka akka
vanivasu akka
Nalla payanulla kuripu..
Enakum recpes post pana
asayahaulladu.
Na adhk enaseiyanum.
Konjam sollungha.
Aavaludan ungha sister
Sulthania
Hi sulthania,
First oru recipe seiyum pothu athai step by step ah photo eduthukanum, next atha pathina kurippu tamil aa type panni arusuvaiadmin@gmail.com ku post pannunga .
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela