தேதி: August 14, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஓட்ஸ் - ஒரு கப்
சீனி - முக்கால் கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
காய்ச்சிய பால் - ஒரு கப்
கேசரி கலர் - தேவைக்கேற்ப
விரும்பிய நட்ஸ் - சிறிது
தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும்.

கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.

பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.

கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.

சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.

இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
Comments
vani
சூப்பரோ சூப்பர் குறிப்பு. ரொம்ப வித்யாசமான குறிப்பு. ஈஸியாவும் இருக்கு. ஆனா யாரும் இப்டி யோசிக்க மாட்டாங்க. ஓட்ஸ்ல கேசரி. நல்லா யோசிச்சி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. பாக்கறப்பவே நாக்குல எச்சில் ஊருது. கண்டிப்பா செய்து பார்க்கறேன்.
எல்லாம் சில காலம்.....
வாணி
என்னொட ஈசி & டேஸ்டீ ஸ்வீட் கலெக்க்ஷன்ஸுக்கு ஏகப்பட்ட ஐடியாஸ் கிடைக்குது....:))) அசத்துறீங்க....
வாணி
அன்பு வாணி,
ஓட்ஸில் கேசரி, வித்தியாசமாக இருக்கு. பாக்கறதுக்கும் ரொம்ப அழகு.
அன்புடன்
சீதாலஷ்மி
பாலநாயகி
ஊக்கமளிக்கும் பின்னூட்டம், மிக்க நன்றி பாலநாயகி.ரொம்ப நல்ல சுவையா இருந்தது.அவசியம் செய்து பாருங்க, கண்டிப்பா செய்துட்டு எப்படி இருந்ததென்று சொல்லணும் சரியா. நன்றி தோழி
அனு
செய்து பார்த்துவிட்டு பிடித்ததான்னு சொல்லுங்க. இப்ப எல்லாம் எங்க வீட்ல பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட கெஸ்ட் வந்தால் இந்த கேசரி தான். சாப்பிட்டு பாராட்டி ரெசிப்பியும் வாங்கிட்டுப் போயிடுவாங்க. நன்றி அனு.
சீதா மேடம்
வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி சீதா மேடம்.
ஓட்ஸ் கேசரி
கேசரி பார்க்கும் போதே சாப்பிட தோணுது ரொம்ப அருமயா செய்து இருக்கீங்க வாழ்த்துககள்
வாணி அக்கா,
ஓட்ஸ் கேசரி ஈஸியா இருக்கு,
கலர் புல்லா இருக்கு பார்க்கும் போதே சாப்பிட தோணுது,
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
வாணி
கலகறீங்க... கலர் கலரா... ஓட்ஸ்ல கேசரி. சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா