கிளிஞ்சல் பொம்மை

தேதி: August 18, 2014

5
Average: 4.8 (5 votes)

 

கிளிஞ்சல்கள்
பார்பி பொம்மையின் தலை மற்றும் கைகள்
நெயில் பாலிஷ் பாட்டிலின் மூடி
பேர்ல் அக்ரிலிக் கலர்ஸ்
எம்சீல்
ஃபெவிக்கால்
சம்கி

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பெரிய கிளிஞ்சலை வைத்து அதன் மீது ஃபெவிக்கால் தடவி மற்றொரு கிளிஞ்சலை வைத்து ஒட்டவும். இதே போல் ஒன்றன் மேல் ஒன்றாக ஃபெவிக்கால் தடவி 8 கிளிஞ்சல்களை ஒட்டி நன்கு காயவிடவும். (இவ்வாறு ஒட்டுவதற்கு கிளிஞ்சல்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும்).
பிறகு நெயில் பாலிஷ் பாட்டில் மூடியின் அடியில் ஃபெவிக்கால் தடவி, ஒட்டி வைத்துள்ள கிளிஞ்சல்களின் மேல் வைத்து ஒட்டவும். (ஃபெவிக்காலுக்கு பதிலாக மூடியின் அடியில் சிறிதளவு எம்சீலை வைத்தும் ஒட்டலாம்).
நன்கு ஒட்டிக் கொண்டதும் மூடியின் மேல் எம்சீல் வைத்து மற்றொரு கிளிஞ்சலை ஒட்டவும்.
பிறகு பார்பி பொம்மையின் தலையின் அடியில் எம்சீல் வைத்து கிளிஞ்சலின் மேல் வைத்து ஒட்டிவிடவும்.
நன்கு காய்ந்ததும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிய 8 கிளிஞ்சல்களின் மீதும் விருப்பமான நிறத்தில் பேர்ல் அக்ரிலிக் பெயிண்ட்டை அடித்துக் கொள்ளவும். மூடியின் மேல் ஒட்டிய கிளிஞ்சலின் மேல் வேறொரு நிற பெயிண்ட்டை அடித்துக் காயவிடவும். காய்ந்ததும் அதன் மேல் சம்கியை பட்டன் போல் வரிசையாக வைத்து ஒட்டவும்.
நெயில் பாலிஷ் பாட்டிலின் மூடி தெரியாமலிருக்க வேண்டுமென விரும்பினால் ஒரு பெரிய கிளிஞ்சலை பாதியாக வெட்டிக் கொண்டு, பெயிண்ட் அடித்து காயவிட்டு சம்கி ஒட்டி மூடியின் மேல் ஒட்டிய கிளிஞ்சலின் உட்புறமாக வைத்து இவ்வாறு ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு கைகளை எம்சீல் வைத்து ஒட்டிவிடவும். கிளிஞ்சல்களைக் கொண்டு செய்த அழகிய பொம்மை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை! ஸ்டைலா இருக்காங்க பாபி. ரொம்ப க்யூட். நல்ல ஐடியா டீம்.

ஒற்றைக் கிளிஞ்சல், இரட்டைக் கிளிஞ்சல்கள்... இரண்டு விதமுமே அழகாகத்தான் இருக்கின்றன.

//ஒரு பெரிய கிளிஞ்சலை பாதியாக வெட்டிக் கொண்டு// வெட்டுறது எப்படி??? டீம் தொழில் ரகசியமா? ம்.. நீங்க சொல்லாட்டாலும் கண்டுபிடிச்சுருவேன். :-)

‍- இமா க்றிஸ்

க்யூட்டான டால்... சூப்பர் ஐடியா டீம்...

இமா...
//ஒரு பெரிய கிளிஞ்சலை பாதியாக வெட்டிக் கொண்டு// வெட்டுறது எப்படி??? //

நான் ஒரு முறை கத்தரிக்கோலால் கட் பண்ணி அப்படியே நொறுங்கி போயிட்டு.. அப்புறம் மார்க்கரால் எவ்ளோ கட் பண்ணனும்னு மார்க் பண்ணிட்டு ஆக்ஸா ப்ளேடால (ரொம்ப பொறுமையா) கட் பண்ணினேன்...

கலை

தாங்ஸ் கலை. ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

its so nice

Cute dolls ..nice creativity.. Congrats team :)

Kalai

ரொம்ப அழகாக இருக்கு கிளிஞ்சல் பொம்மை! பாராட்டுக்கள்!

அன்புடன்,
மகி