சுற்றுலா போகலாம் 3

சுவர்ணபூமி ஏர்போர்ட் அது தாய்லாந்து நாட்டின் பாங்காங் ஏர்போர்ட் தான்.
ஏனோ அந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு சந்தோஷம்.

முதலில் ஒரு சின்ன‌ சைட் சீயிங் கிளம்பினோம். சில‌ புத்த‌ர் கோயில்கள். ஒரு அங்குலத்தில் சின்னஞ்சிறிய‌ கோல்டன் பேப்பரை வாங்கி புத்தரின் மீது ஒட்டியபடி தனது பிரார்த்தனையை செய்தனர். அந்த‌ விக்கிரகம் முழுவதும் கோல்டன் பேப்பரல் தக‌ தகவென‌ இருந்தது. கோயில் பிரகாரம் எல்லாம் சுற்றி விட்டு கிளம்பினோம்.

மறுநாள் அங்கிருந்து பட்டயா கிளம்பினோம். பட்டயா முழுவதும் water ride தான். முதலில் ஸ்பீட் போட்டில் அமர்ந்து லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டோம். கடலில் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தை சில‌ நிமிடங்களில் சென்றடைந்தோம். அந்தச் சவாரி ரம்மியமாக‌ இருந்தது. கடல் நீர் பன்னீராக‌ தெறித்து எங்களை வரவேற்றது.

குறிப்பிட்ட‌ இடத்தை வந்தடைந்ததும் முதலில் பாராசூட் ரைடிங். இந்தியாவில் கோவாவில் இருக்கு. அதுபோலத் தான் இதுவும். நல்ல‌ பாதுகாப்பான‌ முறையில் பறக்க‌ விடுகின்றனர்.

நீரில் ஒரு முழுக்கு மூழ்க‌ விட்டு மீண்டும் பறக்க‌ விட்டு போட்டில் இறக்கி விடுகின்றனர்.

அங்கிருந்து மீண்டும் வேறு படகில் coral island அழைத்துச் சென்றனர். அங்கே நீருக்குள் மூழ்கியவண்ணம் அடியிலுள்ள‌ பவளப் பாறையைத் தொட்டுப் பார்த்தபடி நடக்கலாம்; ரசிக்கலாம்; மீன்களைப் பிடிக்கலாம்.

நம் தலையில் ஹெல்மெட் மாதிரி ஒன்றை அணிவித்து விடுகின்றனர். அதனூடே சின்ன‌ ட்யூப் மூலம் நாம் சுவாசிக்க‌ காற்று வந்தவண்ணம் உள்ளது.

குறிப்பிட்ட‌ இடத்தை இதற்காக‌ தேர்வு செய்து எல்லையிட்டு வைத்திருக்கின்றனர். ஆங்காங்கே பாதுகாப்புக்கு ஆட்கள் நீரினுள் இருக்கின்றனர்.

நீருக்கு அடியில் இறங்கியதும் நீரின் அழுத்தத்தால் காது வலிக்கின்றது. சூயிங்கம் தருகின்றனர். அதை மென்று கொண்டே இருக்க‌ வேண்டும். ஒவ்வொரு பேமிலியாக‌ நீருக்குள் இறக்கி விடுகின்றனர்.

பவளப்பாறையைத் தொட்டு ரசித்தோம். அங்கே ஏகப்பட்ட‌ மீன்கள் வருகின்றன‌. அவற்றிற்கு கொடுப்பதற்கு பிரட் தருகின்றனர். அதைக் கொடுத்து நீருக்குள்ளேயே வீடியோ ஷூட் பண்ணித் தருகின்றனர். மீன்கள் பிரட்டோடு சேர்த்து நம் விரல்களையும் கடிப்பதை ரசித்து அனுபவிக்கலாம்.

அன்றிரவு தாய்லாந்து நாட்டின் கல்ச்சுரல் ஷோ ஆன‌ கொலேஷியம் ஷோ பார்க்கச் சென்றோம். ஒரு பாடலுக்கு இருந்த‌ மேடையமைப்பு அடுத்த‌ பாடலுக்கு கிடையாது. ஒவ்வொரு பாடலுக்கும் மேடை பேக்ரவுண்ட் ஒவ்வொரு விதமாக‌ செட் பண்ணி பிரமிக்க‌ வைத்தார்கள். தெருக்களையும், அரண்மனையையும், பூங்காவையும், கடைவீதியையும் மேடையிலேயே கொண்டு வந்தனர்.

மறுதினம் Sriracha Tiger Zoo சென்றோம். அங்கே புலி, யானை, முதலை, பன்றி இப்படி விலங்குகளைக் கொண்டு ஷோ நடந்தது.

புலிகளை பூனைகளைப் போல‌ பழக்கி சர்க்கஸ் பண்ண‌ வைத்ததை கண்டபோது மனது வலித்தது. புலிகள் தன் தனித்தன்மையை இழந்ததை எண்ணி வருந்தினேன்.

பன்றிகளை ஓடவிட்டு Pig Race நடத்தினர். அது ரசிக்கும்படி இல்லை.

புலிக்குட்டியை மடியில் வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். என் குழந்தைகள் அவ்வாறு எடுத்துக் கொண்ட‌ ஃபோட்டோ தான் என்னோட‌ டெஸ்க் டாப்பில் இப்போதும் இருக்கின்றது.

மேலும் மீன்குஞ்சுகளுக்கு, அல்லது முதலைகுட்டிக்கு புட்டியில் பால் புகட்டி அதையும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

அப்புறம் ஷப்பிங். எங்கு சென்றாலும் இது நமக்கு மிகவும் பிடித்தமான‌ விஷயம் ஆச்சே. தாய்லாந்தில் சப்பல், ஹேண்ட்பேக், டி ஷர்ட் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கின்றன‌. வாங்கலாம். என்னைக் கவர்ந்த‌ வுட்டும் பிராஸும் சேர்ந்த‌ கட்லரி செட் ஒன்று வாங்கினேன்.

தாய்லாந்து மக்கள் மெதுவாகப் பேசும் இயல்புடையவர்கள் என்று நண்பர் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டு இருந்தேன் . நான் ஷாப்பிங் செய்யும் போது சற்றே உரத்த‌ குரலில் ஏதோ சொல்லப் போக‌ கடைக்காரரும் சிரித்துக் கொண்டே ஒரு காதைப் பொத்தியது நினைவுக்கு வருகின்றது.

இங்கும் எலக்ட்ரானிக் அயிட்டங்கள் இந்தியாவை விட‌ மிக்க‌ மலிவாக‌ வாங்கலாம். வீட்டுக்குத் தேவையான‌ சில‌ அயிட்டங்களை வாங்கிக் கொண்டோம்.

தாய்லாந்து செல்ப‌வர்கள் அங்கே மறக்காமல் வாங்க‌ வேண்டிய‌ பொருள் ஒன்று உண்டென்றால், அது நவமணிகள். ஆம் அங்கே Gems gallery சென்றோம். விதவிதமான‌ வண்ணங்களில் எல்லா வகையான‌ கற்களும் இங்கே ஒரிஜினலாக‌ கிடைக்கும். முத்து, மரகதம், ரூபி, மாணிக்கம் இப்படி அங்கே எல்லா வகையான‌ கற்களும் நம்பிக்கையுடன் வாங்கலாம்.

அந்தக் கற்கள் எடுக்கும் விதத்தை குட்டி ட்ரைனில் அமர்ந்தபடி அழகிய‌ முறையில் ஒலி,ஒளிக் காட்சியுடன் கண்டு களித்தோம்..

எரிமலை வெடித்துச் சிதறுவது போலவும், அப்போது வைரக்கற்கள் கிடைப்பது போலவும் தத்ரூபமாக‌ காட்டினார்கள்.

எங்களுக்குப் பிடித்தமான‌ கற்கள், முத்து மாலைகள்,மோதிரங்களை வாங்கிக் கொண்டோம்.

ஒரு வ‌ழியாக‌ எங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினோம்.

கிட்டத்தட்ட‌ ஒன்பது நாட்கள் சென்ற‌ இந்த‌ சுற்றுலாவில் என்னைக் கவர்ந்த‌ விஷயம் எது என்பதைப் பற்றி அடுத்த‌ பதிவில் குறிப்பிடுகின்றேன். தோழிகளே, உங்களைக் கவர்ந்த‌ விஷயத்தை நீங்கள் குறிப்பிடலாமே.

5
Average: 5 (6 votes)

Comments

சுவர்ணபூமி ஏர்போர்ட் பெயருக்கு ஏற்றார் போல் தகதகவென‌ ஜொலிக்கிறது.
உங்கள் எழுத்து தெளிந்த‌ நீரோடை போல் அழகாக‌ செல்கிறது. கூடவே பயணித்தது போன்று இருக்கிறது.
நிறைய‌ சாகச விளையாட்டுகளிலும் பங்கேற்று இருப்பீர்கள் போல‌ இருக்கு நிகிலா :) பயமா இல்லையா.
மிக‌ அழகான‌ பதிவு. நீங்கள் போன‌ பதிவில் போட்ட‌ விஷயங்களை என்னவரிடம் பகிர்ந்த‌ பொழுது,பாங்காக் சென்றுவிட்டு வரும்பொழுது 10 மணிநேரமா சுவர்ணபூமி ஏர்போர்ட்லயே உலவிக்கொண்டிருந்தோம், வெளியே செல்ல‌ வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேரு மலையை மத்தாக‌ கொண்டு, வாசுகியை(பாம்பு) கயிறாக‌ கொண்டு, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் படம் இருக்கு.ஏர்போர்டினுள் எடுத்தது.
அப்படத்தை பார்த்து வியந்துதான் போனேன்.
நீங்கள் இன்னும் வியப்பூட்டும் பலவிஷயங்களை பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது நிகி :)

பின்னூட்டத்தில் சில‌ திருத்தம் செய்துள்ளேன், புகைப்படங்களை தூசு தட்ட‌ வாய்ப்பளித்த‌ பதிவிற்கு நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய சுற்றுலா பயணம் அதுக்குள்ள முடிச்சிட்டிங்களே நிகி.

Be simple be sample

கட்டுரை சூப்பர் நிகிலா. போய்ப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டும் வகையில் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
என்னைக் கவர்ந்தது பவளப் பாறை விசிட், பிராணிகள் & ஜெம் காலரி. எப்போதாவது அங்கு போகக் கிடைத்தால் தவறவிடாமல் பார்ப்பேன். பவளப் பாறை இலங்கையில் இருந்தாலும் பார்க்கக் கிடைத்ததே இல்லை. ;(

‍- இமா க்றிஸ்

பதிலளி தட்டிவிட்டேன். உங்க‌ எடிட்டிங் எல்லாம் முடிந்தது தானே. :)
//உங்கள் எழுத்து தெளிந்த‌ நீரோடை போல் அழகாக‌ செல்கிறது. கூடவே பயணித்தது போன்று இருக்கிறது.//
மிக்க‌ நன்றி அருள்.

உங்கள் அனைவரது கருத்துகளும் தான் என்னை ஊக்குவிக்கின்றது.
(புகைப்படங்கள் மலரும் நினைவுகளைத் தருபவை. தூசிபட‌ விடலாமா? அவ்வப்போது புரட்டுங்கள்.) :)

//இனிய சுற்றுலா பயணம் அதுக்குள்ள முடிச்சிட்டிங்களே //
ஆம் ரேவ், டிஸ்னி மட்டுமே ஒரு பதிவு போடலாம். ஆனால்,தீம் பார்க் தானே. நிறைய‌ பேரு பார்த்திருப்பாங்கன்னு தோணுச்சு.
இந்த‌ பதிவில் கூட‌ முதலில் ஜெம்ஸ் கேலரி பற்றி எழுத‌ விட்டுப் போச்சு. அப்புறம் போட்டோ பார்த்ததும் நினைவுக்கு வந்தது. (அங்கே எல்லா காட்சியும் செய்முறையோடு பார்த்தோம்.)
மூன்று நாடும் மூன்று பதிவா போட்டுருக்கேன். .
நீங்க‌ கூடவே வந்தது மிக்க‌ மகிழ்ச்சியைத் தருகிற‌து.
மிக்க‌ நன்றி ரேவா. தொடர்ந்து மற்ற‌ பதிவுகளில் சந்திப்போம்.:)

//கட்டுரை சூப்பர் நிகிலா. போய்ப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டும் வகையில் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்//
மிக்க‌ நன்றி இமா. நீங்கள் அனைவரும் தரும் ஊக்கமே காரணம்.:)

பவளப் பாறை புதுவித‌ அனுபவம். த்ரில்லிங்கா இருக்கும்.
ஜெம் கேலரி நேரில் பார்க்கும் போது நான் சொன்னதை விட‌ அருமையா இருக்கும். எல்லாமே ப்ராக்டிகலா பார்க்கலாம்.

பிராணிகள் பிடிக்கும். ட்ரிக்ஸி (முயல் தானே) நினைவா?
ஆனால், அங்கே பாவம், வாயில்லா ஜீவன்களை ஷோ என்ற‌ பெயரில் பாடாகப்படுத்துவதாக‌ தோன்றியது.
புலிக்குட்டிக்கு புட்டியில் பால் புகட்டும் போது, ஒரு போட்டோ எடுத்ததும் டக்கென்று பாட்டிலை வாயிலிருந்து பிடுங்கி விட்டனர். அந்த‌ குட்டி பாவம்.
கஷ்டமாக‌ இருந்தது எனக்கு. அதை நல்லா பட்டினி போட்டு வச்சிருக்காங்க‌.:(

பாஸ்போர்ட், வீசா, டிக்கெட் & ஹோட்டல் எந்த‌ செலவுமே இல்லாமல் 3 நாட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறீர்கள்.
வேறென்ன‌ வேண்டும் எங்களுக்கு.....
மிகவும் அருமையான‌ பதிவுகள், வாழ்த்துக்கள் நிகி......

//பாஸ்போர்ட், வீசா, டிக்கெட் & ஹோட்டல் எந்த‌ செலவுமே இல்லாமல் 3 நாட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறீர்கள்.//
தனியே போனால் எந்த‌ டூரும் ரசிக்காது அனு. மூணு நாட்டுக்கும் என்னோடு கூடவே வந்து enjoy பண்ணியமைக்கு மிக்க‌ நன்றி அனு.

அன்பு நிகிலா,

சுற்றுலா போவது ஒரு இனிய‌ அனுபவம் என்றால், அதை சுவைபட‌ சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு லகுவாக‌ கை கூடியிருக்கிறது.

உங்களைக் கவர்ந்த‌ விஷயங்களை ஹைலைட் செய்திருப்பதும், மிருகங்களுடன் எடுக்கும் புகைப்படம் பற்றிய‌ உங்களுடைய‌ மாறுபட்ட‌ உணர்வுகளைப் பதிவு செய்திருப்பதும் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

//சுற்றுலா போவது ஒரு இனிய‌ அனுபவம் என்றால், அதை சுவைபட‌ சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு லகுவாக‌ கை கூடியிருக்கிறது.//
நிஜமாவா சீதா?
நிஜமென்றால் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் மாதிரி:)
//மாறுபட்ட‌ உணர்வுகளைப் பதிவு செய்திருப்பதும் அருமை.//
ஆம் அந்த‌ மிருககாட்சி சாலையில் ஷோ முடிந்ததும் நம்மிடையே அவற்றை வைத்து காசு கேட்டார்கள். அதுவும் அவற்றை அவமதிப்பதாகவே தோன்றியது.
பாராட்டுக்கு மிக்க‌ நன்றி சீதா.

முன்பே மொபைலில் இருந்து படிச்சேன், தமிங்கிலம் வேணாம்னு விட்டுட்டேன். :) அருமையான‌ சுற்றுலா அழைத்து போனீங்க‌. பவளப்பாறை அது இதுன்னு ரொம்ப‌ காஸ்ட்லி ட்ரிப். சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அருமையான‌ சுற்றுலா அழைத்து போனீங்க‌.//
கூடவே வந்ததுக்கு தான்க்ஸ் வனி.
பவளப் பாறை வித்தியாசமான‌ அனுபவம்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிஸ் பண்ணாதீங்க‌.

இனிமையான சுற்றுலாவையும் சுவையான அனுபவங்களும் படிக்க நன்றாக இருந்ததுங்க.
படங்கள் அருமைங்க.

நட்புடன்
குணா

//இனிமையான சுற்றுலாவையும் சுவையான அனுபவங்களும் படிக்க நன்றாக இருந்ததுங்க.//
//படங்கள் அருமைங்க.//
உங்கள் பதிவுக்கும், கருத்துக்கும் மிக்க‌ நன்றி குணா.:)