தேதி: January 4, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 3 பல்
உப்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தக்காளியை கழுவி தண்ணீர் போக துடைத்துவிட்டு எண்ணெயில் மிதமான சூட்டில் தோல் சுருங்கும்வரை வதக்கவும்.
அதன் பிறகு, அந்த எண்ணெயிலேயே வெங்காயத்தையும் வேகும் அளவுக்கு ஆனால் முறுகிவிடாமல் வதக்கவும்.
காய்ந்த மிளகாயையும் பூண்டையும் அதுபோல் தனித்தனியாக வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய தக்காளி சூடு ஆறியவுடன் அதன் தோலை உரித்துவிட்டு, வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஏற்கனவே வதக்கிய அதே எண்ணெயை மீண்டும் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்துவைத்துள்ள கலவை மீது ஊற்றி கலக்கி வைக்கவும்.
இது இட்லி, தோசையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.
Comments
asma
Ungaludiya thakali sadni seithen.mikayum nanraga irunthathu.innum Pala kuripukali avaludan athirparkiren.
anpudan
anna
மிக்க நன்றி அண்ணா!
மிக்க நன்றி அண்ணா! உங்கள் பெயரே அண்ணாதானா? :)
ஹாய் அஸ்மா
ஹாய் அஸ்மா அக்கா!!! எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல் நலம் எப்படி இருக்கு? இன்று தக்காளி சட்னி செய்தேன்.. சுவை அருமை.. நான் எப்போதும் இதில் சோம்பு சேர்ப்பேன்.. சோம்பு சேர்க்காமல் நல்ல சுவை தான்.. உங்கள் குறிப்புக்கு நன்றி!!!
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..