பனானா கேக்

தேதி: August 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

செல்ஃப் ரெய்சிங் மாவு - ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ப்ரவுன் சுகர் - ஒரு கப்
முட்டை - 2
வாழைப்பழம் - 2
மார்ஜரின் (Margarine) - 200 கிராம்
பனானா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பால் - 2 கரண்டி (தேவைப்பட்டால்)
காய்ந்த திராட்சை / நட்ஸ் - சிறிது


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தைக் கூழாக அரைத்துக் கொள்ளவும். முட்டையைத் தனியாக அடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ப்ரவுன் சுகர் மற்றும் மார்ஜரினைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்துக் கலக்கவும்.
க்ரீம் போல வரும் வரை நன்கு கலக்கவும்.
பிறகு வாழைப்பழக் கூழைச் சேர்த்து அடிக்கவும்.
அதனுடன் சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு எசன்ஸ் மற்றும் திராட்சை / நட்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பட்டர் தடவிய மைக்ரோவேவ் ட்ரேயில் சிறிது மாவு தூவி, கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, மைக்ரோவேவில் வைத்து ஹையில் 10 / 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டுப் பார்த்து, ஒட்டாமல் வரும் போது எடுத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
டேஸ்டி பனானா கேக் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான‌ கேக்... அப்படியே சாப்பிட வேண்டும் போல இருக்கு... சூப்பர்....

பார்க்கும்போதே சாஃப்ட், எடுத்து சாப்பிடணும்போல இருக்கு.

Be simple be sample

அன்பு நித்யா,

ஸ்பான்ஞ் கேக் மாதிரி பாக்கறதுக்கே ரொம்ப நல்லா இருக்கு.

வாழைப்பழம், ப்ரவுன் சுகர் சேர்த்தும், கலர் மாறாமல் செய்திருக்கீங்க. அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர்மா... மைக்ரோவேவ் மட்டுமே இருக்க‌ பலருக்கு இந்த‌ சுலபமான‌ முறை பயன்படும். நல்ல‌ சாஃப்ட் கேக் பண்ணிருக்கீங்க‌. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.

கருத்து கூரிய தோழிகள் அனைவருக்கும் நன்றி.