தேதி: August 22, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முற்றிய தேங்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - அரை கப்
உப்பு - சுவைக்கேற்ப
காய்கள்: தலா 100 கிராம்
அவரைக்காய்
பீன்ஸ்
புடலங்காய்
சுரைக்காய்
வெள்ளைப் பூசணிக்காய்
பச்சைப் பட்டாணி
பட்டர் பீன்ஸ்
கேரட்
உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
கத்தரிக்காய்
முருங்கைக்காய்
பெரிய வெங்காயம்
சின்ன வெங்காயம்
பூண்டு
இஞ்சி
அரைக்க:
பச்சை மிளகாய் - 10 (அ) 12
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - மிகச் சிறிய துண்டு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை






இது ஒரு சிறப்பு உணவு. நெல்லை மாவட்டத்தில் திருமணத்திற்கு மறுநாள் நடைபெறும் சம்பந்தி விருந்தில் இது கட்டாயமாக இடம் பெறும். (மாப்பிள்ளை விருந்திலும் இடம் பெறும்).
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து காய்களையும் சேர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், பீன்ஸ், வெங்காயம், பூண்டு ஆகியவை மட்டும் முக்கியமானவை. மற்றபடி கிடைக்கும் காய்களை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம். தக்காளி மற்றும் மாங்காய் சேர்க்க வேண்டாம்.
பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, காய்களுடன் வேக வைத்துவிடலாம். இஞ்சியையும் தட்டிப் போட்டுவிடலாம். இதனால் தேங்காய்ப் பால் சேர்ப்பதால் வரும் பித்தம், அஜீரணம் போன்றவை ஏற்படாமல் உணவு நன்றாக ஜீரணமாகும்.
வதக்கி சேர்க்கும்போது பூண்டு வாசனை வரும். ஆனால், வேக வைப்பதால் வாசனை தனியாகத் தெரியாது.
Comments
அன்பு சீதா
நானும் இது போல தான் செய்வேன். ஆனால், இறக்கிய பின் ஒரு மூடி எழுமிச்சம்பழம் பிழிந்து விடுவேன், நீங்கள் தக்காளி, வேண்டாம்னு சொல்லி இருக்கீங்க. அப்படின்னா எலுமிச்சையும் வேண்டாமோ?
நிகிலா
அன்பு நிகிலா,
நீங்க சொல்லியிருப்பது சரி. எலுமிச்சம்பழச் சாறு கண்டிப்பாக சேர்க்கணும். குறிப்பில் குறிப்பிட மறந்துட்டேன்.
சொதியை இறக்கி வைத்ததும், எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
நினைவு படுத்தியதற்கு நன்றி நிகிலா.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா
சூப்பர். காலையில் மொபைலில் இதை கண்டதுமே முடிவு பண்ணிட்டேன், நாளை சமையல் இது தான்னு. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதா அம்மா
நான் இது வரை இது மாதிரி பண்ணது இல்லை. கண்டிப்பா ட்ரை பண்றேன்.
ஆனா தேங்காய் பால் சூடு பண்ண கூடாது கொலஸ்ட்ரால் ஆகும்னு சொல்றாங்க. அதனால நான் இப்போலாம் தேங்காய் சேக்கறதுனா கூட அடுப்பு அனைத்துட்டு அப்றம் தான் சேர்க்கறேன். இது மாறி கொதிக்க வைத்து செய்யலாமா?
ஏனா வீட்ல மாமனார் மாமியார்னு வயசானவங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒத்துக்குமானு பாக்கனும் இல்ல.
ஆனா உங்க சொதி பார்க்க சூப்பரா இருக்கு. அவங்களுக்கு இல்லனாலும் நான் செய்து சாப்டனும் போல இருக்கு.
எல்லாம் சில காலம்.....
seetha
சொதி சூப்பர் சீதா. செய்தாச்சு சுவைத்தாயிற்று. விருந்தினர் மிண்டும் இதையே வைக்க வைக்கச் சொல்லி வாங்கி சாப்பிட்டாங்க. செய்த எனக்கு இதை விட மகிழ்ச்சி என்ன??? :) தேன்க்யூ சீதா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பால நாயகி
அன்பு பால நாயகி,
தேங்காய்ப் பால் ஓரளவுக்கு கொழுப்பு சத்து உள்ளதுதான்.
சொதி, அடுப்பில் வைத்து, மூணு தரம் பொங்கி வந்த பிறகு இறக்கி வைக்கணும். அதாவது சூடுபடுத்தித்தான் செய்யணும்.
பூண்டு, இஞ்சி இதெல்லாம் சேர்ப்பதால் ஜீரணமாகி விடும்.
செய்து பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
வனி
அன்பு வனி,
செய்து பாத்தாச்சா? பிடிச்சிருந்ததா? சூப்பர், சூப்பர்.
தாங்க்யூ வனி, எனக்கும் மகிழ்ச்சி.
அன்புடன்
சீதாலஷ்மி
தேங்காய் சொதி
சீதாமேடம், நான் இன்னும் இது போல் சமைத்ததில்லை, காய்கறிகள் நிறைய சேர்த்து நல்ல சத்துள்ள குறிப்பு. கட்டாயம் முயற்சி செய்யணும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சீதாலட்சுமி
ஆஹா... குறிப்பை படித்ததும்,பார்த்ததுமே எப்படியாவது செய்து பார்த்துடணும்னு முடிவுப்பண்ணிட்டேன்.
அசத்தலான குறிப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீதா....
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அருட்செல்வி
அன்பு அருட்செல்வி,
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள். செய்து பார்த்து சொல்லுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
அப்ஸரா
அன்பு அப்ஸரா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கு.
செய்து பார்த்து சொல்லுங்க.
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா அம்மா,
சீதா அம்மா,
நலமா?
சூப்பர் சொதி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
அன்பு கவிதா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்க பதிவைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
எல்லோரும் நலம்தானே.
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி