சீ ஃபுட் நூடுல்ஸ்

தேதி: August 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

எக் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
முட்டை - 3
கணவாய் - ஒன்று
இறால் - 5
சுரீமி ஸ்டிக் - 5
குடை மிளகாய் - ஒன்று
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 10
முட்டைகோஸ் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
வெங்காயத் தாள் - ஒரு கட்டு
இஞ்சி - கால் அங்குலத் துண்டு
பூண்டு - 5 பற்கள்
சோயா சாஸ் - அரை மேசைக்கரண்டி
ஃபிஷ் சாஸ் - அரை மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
ஆயிஸ்டர் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் மெல்லியதாக நீளமாக வெட்டிக் கொள்ளவும். கணவாய், இறால், சீ ஃபுட் ஸ்டிக் ஆகியவற்றையும் தேவையான அளவில் வெட்டி வைக்கவும். எண்ணெய் தடவிய நாண் ஸ்டிக் பேனில் முட்டையை அடித்து ஸ்க்ரம்பில்டு செய்து தனியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். அத்துடன் அரை மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு ஃபோர்க்கினால் நன்றாக கலந்துவிடவும். (ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்).
நாண் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தீயை அதிகரித்து, பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். (தீயை அதிகரித்து 3 நிமிடங்கள் மட்டும் வதக்குவதால் காய்கறிகள் முழுவதும் வேகாமல் க்ரஞ்சியாக இருக்கும்).
வதக்கிய காய்கறிகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.
அதே நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள கணவாய், இறால், மற்றும் சுரீமி ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அத்துடன் வதக்கிய காய்கறிகள் மற்றும் ஸ்க்ரிம்பில்டு முட்டை ஆகியவற்றைச் சேர்த்து, மிளகு பொடி மற்றும் வெங்காயத் தாள் சேர்த்துக் கிளறவும்.
பிறகு சாஸ் வகைகளைச் சேர்க்கவும்.
இரண்டு கைகளிலும் ஒவ்வொரு ஃபோர்க்கை பிடித்துக் கொண்டு நூடுல்ஸ் நொறுங்கிவிடாதபடி அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.
எண்ணெய் குறைவான, டேஸ்டி & க்ரஞ்சி நூடுல்ஸ் தயார்.

கடைகளில் நூடுல்ஸ் செய்வதற்கென்று சைனீஸ் வோக் (Chinese Wok) என்னும் கைப்பிடி கொண்ட குழிவான பேன் பயன்படுத்துவார்கள். அதில் அதிக எண்ணெய் உபயோகித்து உணவின் தனித்துவம் மாறாமல் காய்கறிகளை க்ரஞ்சியாக பொரித்தெடுப்பார்கள். நான் கொடுத்துள்ள முறையில் செய்தால் குறைவான எண்ணெயில் சைனீஸ் உணவின் தனித்துவம் மாறாமல் வீட்டிலேயே சமைத்துவிடலாம்.

இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்குப் பதிலாக குழந்தைகளுக்கு இதைப் போன்று செய்து கொடுக்கலாம். சீ ஃபுட்டுக்கு பதிலாக எலும்பில்லாத சிக்கனிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். நூடுல்ஸ் அருமையாக‌ இருக்கு. எனக்கு நூடுல்ஸ் ரொம்ப‌ பிடிக்கும். நாளை ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

சுப்பர்ப் வாணி. பார்க்கவே ஆசையா இருக்கு.

‍- இமா க்றிஸ்

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி டெடி, செய்து விட்டு எப்படி இருந்ததென்று சொல்லுங்க

ஒரு முறை செய்து பாருங்க இமா. குறைவான கலோரி தான். எங்க வீட்ல எல்லா வகை உணவுடனும் சைட் சாலட் உண்டு. கலோரியையும், உண்ணும் உணவின் அளவையும் குறைப்பதற்க்காக.
நன்றி

சூப்பர் நூடுல்ஸ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா