பூண்டு கஞ்சி

தேதி: August 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பச்சரிசி (அ) புழுங்கலரிசி - அரை கப்
பூண்டு - 15
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
காய்ச்சிய பால் (அ) தேங்காய்ப் பால் - ஒரு கப்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பூண்டுப் பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
அடுப்பில் ப்ரஷர் பானை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், மிளகு, சீரகம், வெந்தயம் போட்டுப் பொரியவிடவும்.
அத்துடன் பூண்டுப் பற்களைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
பிறகு களைந்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கிளறிவிடவும்.
பிறகு உப்பு சேர்த்து, அரிசியின் தன்மைக்கு ஏற்ப 3 அல்லது 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரவிடவும்.
குக்கர் ஆறியதும் திறந்து வெந்ததை சரிபார்க்கவும்.
வெந்த சாதத்தை மசித்துவிட்டு, அத்துடன் காய்ச்சிய பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து பருகலாம். காலை அல்லது மதிய உணவுக்கு சாப்பிட, பொருத்தமான உணவு. கொடுத்திருக்கும் அளவு இரண்டு பேருக்குப் போதுமானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Idhu seetha recipe illa?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் இது என் ரெசிப்பி இல்லை வனி. டீமுக்கு மெய்ல் பண்ணியுள்ளேன், மாற்றிடுவாங்க.

வாணியோ சீதா அம்மாவோ யார் ரெசிபியோ பூண்டு கஞ்சி அருமையா இருக்கு. நல்ல‌ குறிப்பு.

வனிதா கலக்குறீங்க‌. குறிப்பு வெச்சியே யாரோடதுனு சொல்றீங்க‌. ஒரு வேளை சீதா அம்மா இதை முன்னாடியே உங்களுக்கு சொல்லிட்டாங்களா?

சீதா அம்மா எனக்கு பீர்க்கங்காய், வல்லாரை இதுலலாம் துவையல் செய்ய கத்து குடுங்க‌.

நான் செய்ற துவையல் 2 இல்லனா 4 நாள்ல‌ கெட்டுடுது. கடைல‌ விக்கறது மட்டும் எப்டி 2 3 மாசம் வரை கெடாமல் இருக்கு?

அது மாறி துவையல் செய்ய‌ சொல்லி குடுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

Enakku solli koduthaanga seetha indha recipe :) adhanaal theriyum idhu yaarudaiyadhunnu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றைக்கு எல்லோருமே விடுப்பு. நானும் வெளியூர் பயணத்திற்காக‌ அவசர‌ அவசரமாக‌ குறிப்பை சேர்த்துவிட்டு சென்றேன். இந்தக் குறிப்பை ஃபோல்டர் மாற்றி ஸ்டோர் செய்து இருந்தார்கள். வாணி அவர்களின் ஃபோல்டரில் இருந்ததால் நான் அவர் பெயரில் சேர்த்துவிட்டேன். பிறகு எனக்கு போன் செய்து மாற்றச் சொன்னபோது நான் வெளியூரில் இருந்த‌ காரணத்தால் உடனடியாக‌ மாற்ற‌ முடியவில்லை. இப்போதுதான் மாற்ற‌ முடிந்தது. தவறுக்கு வருந்துகின்றோம்.

அன்பு வனி, வாணி, பாலநாயகி, அட்மின்,

பதிவிட்ட‌ அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா அம்மா,
இதனுடன் அம்மா சுக்கு சேர்த்து ஜுரம் சமயம் செய்து தருவாங்க
குறிப்புக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,

காய்ச்சல் வந்து, வாய் கசப்பாக‌ இருந்தால், இந்தக் கஞ்சி சாப்பிட‌ இதமாக‌ இருக்கும்.

பருப்புத் துவையல் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி