பாரதியார் பாடல்கள்

பாரதியார் பாடல்கள் டவுன்லோடு செய்வது எப்படி தெரிந்தவர்கள் சொல்லவும்,அதில் நல்லதோர் வீணை செய்து பாடல் வேண்டும் உதவுங்கள் தோழிகளே..

Try to search this from google as 'maakavi bharathiyar songs free download'.It shows Many links for download.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ரொம்ப நன்றி கெளரி

ரொம்ப ரொம்ப நன்றி திவ்யா நான் எதிர் பார்க்கவேயில்லை,பாடல் கிடைக்கும்னு ரொம்ப நன்றி.

மேலும் சில பதிவுகள்