தேதி: August 28, 2014
பட்டர்ஃப்ளை செய்வதற்கு:
சிறிய ப்ளாஸ்டிக் மணிகள் - விருப்பமான மூன்று நிறங்களில்
20 செ.மீ அளவில் கோல்டன் கம்பி - 2
ஃப்ளவர் செய்வதற்கு:
கோல்டன் கம்பி
சிறிய ப்ளாஸ்டிக் மணிகள் - விரும்பிய நிறங்களில்
பச்சை நிற டேப்
ஃபெவிக்கால்
ஸ்டோன்ஸ்
பட்டர்ஃப்ளை செய்வதற்கு 20 செ.மீ அளவுள்ள கோல்டன் கம்பிகளில் ஒன்றை எடுத்து அதில் 50 - 60 மணிகள் கோர்க்கவும். (இரண்டு நிற மணிகளை மாற்றி மாற்றி கோர்க்கவும். மணிகளின் இடது புறம் 4 செ.மீ அளவிற்கு கம்பி தெரிவது போல இருக்க வேண்டும். வலது புறம் அதிகமாக கம்பி தெரியும்).

மணிகள் கோர்த்த பிறகு கம்பியை படத்தில் உள்ளது போல் வைத்து மடக்கிவிட்டு முறுக்கவும்.

பிறகு வலது புறம் 40 - 50 மணிகள் கோர்க்கவும்.

அதை படத்தில் காட்டியுள்ளபடி ஏற்கனவே முறுக்கி வைத்துள்ள மணிகளின் கீழ்புறமாக வருவது போல் வளைத்து நன்கு முறுக்கிவிடவும்.

இதே போல் மற்றொரு கம்பியிலும் மணிகள் கோர்த்து முறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

தயார் செய்த இரண்டிலும் மேல் நோக்கி இருக்கும் கம்பிகளை இணைத்து லேசாக முறுக்கிவிட்டு, அதில் வேறொரு நிறத்தில் மணிகள் கோர்க்கவும். இதே போல் கீழ் நோக்கி இருக்கும் கம்பிகளிலும் மணிகள் கோர்த்து முடிக்கவும். பட்டர்ஃப்ளை ரெடி.

ஃப்ளவர் செய்வதற்கு 10 செ.மீ அளவில் கோல்டன் கம்பியை தேவையான எண்ணிக்கையில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய கம்பியில் ஒன்றை எடுத்து அதில் 18 மணிகள் கோர்த்து படத்தில் காட்டியுள்ளபடி கம்பியை மடக்கி முறுக்கிக் கொள்ளவும்.

இதேபோல் மற்றொரு கம்பியை எடுத்து அதில் 22 மணிகள் கோர்த்து மடக்கி முறுக்கி வைக்கவும்.

பிறகு 18 மணிகள் கோர்த்த கம்பியை, 22 மணிகள் கோர்த்த கம்பியின் உள்பக்கம் வைத்து ஒன்றாக சேர்த்து முறுக்கிக் கொள்ளவும். பூவின் இதழ் தயார்.

ஒரு பூவிற்கு 5 இதழ்கள் வீதம் தேவையான எண்ணிக்கையில் இதே முறையில் இதழ்களைத் தயார் செய்து கொள்ளவும்.

அவற்றில் 5 இதழ்களை எடுத்து ஒன்றாகச் சேர்த்து கம்பியால் சுற்றிக் கட்டி, அதன் மேல் பச்சை நிற டேப்பை சுற்றிவிடவும்.

பிறகு இதழ்களை ஒவ்வொன்றாக விரித்துவிட்டு, நடுவில் ஃபெவிக்கால் வைத்து ஸ்டோன் ஒட்டிவிடவும். அழகான பீட்ஸ் ஃப்ளவர் ரெடி. (விருப்பமான எண்ணிக்கையில் இதழ்களைச் சேர்த்துக் கட்டி, டேப் சுற்றி பூக்கள் செய்யலாம்).

மற்றொரு விதமான ஃப்ளவர் செய்வதற்கு 10 செ.மீ அளவில் நறுக்கிய கம்பி ஒன்றை படத்தில் காட்டியுள்ளவாறு மடக்கி அதில் மணிகள் கோர்க்கவும்.

10 - 12 மணிகள் கோர்த்த பிறகு மணிகளுக்கு மேலுள்ள இடைவெளியின் வழியாக மற்றொரு கம்பியைவிட்டு இவ்வாறு மடக்கிக் கொள்ளவும்.

இருபுறமும் இருக்கும் கம்பிகளில் 13 - 15 மணிகள் கோர்க்கவும்.

மணிகள் கோர்த்த பிறகு இருபுறமும் இருக்கும் கம்பிகளை இவ்வாறு முறுக்கிக் கொள்ளவும்.

பிறகு மணிகளின் கீழ்புறம் இருக்கும் கம்பிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து முறுக்கிவிட்டு, மணிகள் உள்ள பகுதியை படத்தில் உள்ளவாறு வளைத்துவிடவும். பூவின் இதழ் தயார். இதே போல் தேவையான எண்ணிக்கையில் இதழ்களைத் தயார் செய்து, மேலே குறிப்பிட்டுள்ள முறையில் 5 இதழ்களை ஒன்றாகச் சேர்த்து கம்பியால் கட்டிவிட்டு, பச்சை நிற டேப் சுற்றிவிடவும்.

அழகான பீட்ஸ் ஃப்ளவர் ரெடி. நடுவில் ஃபெவிக்கால் வைத்து ஸ்டோன் ஒட்டிக் கொள்ளவும்.

Comments
சூப்பர்
அருமை டீம். அழகோ அழகு.பார்த்தவுடன் செய்ய தோணுது. டைம் கிடைகிறப்ப கண்டிப்பா முயற்சிக்கணும்.
டீம்
இரண்டுமே அழகு.
- இமா க்றிஸ்
பட்டர்ஃப்ளை & ஃப்ளவர்ஸ்
டீம் பீட்ஸ் பட்டர்ஃப்ளை & ஃப்ளவர்ஸ் ரெண்டு வேரியேஷனுமே சோ ப்ரிட்டி ... எனக்கு மஞ்சள் பூ வை விட வெள்ளை பூ ரொம்ப புடிச்சு இருக்கு
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
kaivenai
nalla uasefullaka erukku
டீம்
இதை செய்த கையை அப்படியே அண்ணாகிட்ட காட்டி என் சார்பா ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கங்க ;) எல்லாமே ஒவ்வொரு விதமான அழகு. பத்திரமா வைங்க... எப்பவாது வனி அந்த பக்கம் வருவேன்... வந்து வாங்கிக்கறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அழகு
அழகாக இருக்கு. என்னிடம் நிறைய சீட் பீட்ஸ் இருக்கு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!