முதல்நன்மை மெழுகுவர்த்திகள்

தேதி: September 1, 2014

5
Average: 5 (3 votes)

 

அகலமான மெழுகுவர்த்தி
மெல்லிய மெழுகுவர்த்தி
பொன் நிற சாட்டின் பேபி ரிப்பன்
வெள்ளை ஆர்கன்சா ரிப்பன்
வெள்ளை சாட்டின் பேப்பர்
ப்ளாஸ்டிக் இரசப் பாத்திரம்
ப்ளாஸ்டிக் பைபிள் வடிவம்
ப்ளாஸ்டிக் புறா வடிவம்
கூரான மகரந்தம் (பொன் நிறம்) - 5 நூல்கள்
திராட்சை இலை ஹோல் பஞ்ச்
சிறிய வெள்ளை மணிகள்
ரிப்பன் ரோஸ்
சூப்பர் க்ளூ
டபுள் சைடட் டேப்
கத்தரிக்கோல்
கத்தி
இடுக்கி

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மெழுகுவர்த்தியின் மேல் எங்கே எப்படி அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து கடதாசியில் வரைந்து வைத்துக் கொள்ளவும்.
சாட்டின் ரிப்பன் முனைகளை Square Knot போட்டு இணைக்கவும். அதைக் குருசு (சிலுவை) போல வரும் விதமாக வெட்டி வைக்கவும்.
டபுள் சைடட் டேப்பை சிறிய துண்டுகளாக வெட்டி ரிப்பனின் பின் பக்கம் ஒட்டிக்கொண்டு மெழுகுவர்த்தியில் குருசினை ஒட்டவும்.
சாட்டின் பேப்பரில் சிறியதாக அப்பம் வரைந்து வெட்டவும். இதனையும் இரசப் பாத்திர வடிவத்தையும் பொருத்தமான இடத்தில் ஒட்டிவிடவும்.
மெழுகுவர்த்தியின் அடியில் வட்டமாக ஒரு வரி ஆர்கன்சா ரிப்பனை டபுள் சைடட் டேப் கொண்டு ஒட்டவும்.
பிறகு புறா வடிவத்தை ஒட்டிவிடவும். புறா வடிவம் தட்டையாக இருந்தால் அப்படியே ஒட்டிக் கொள்ளலாம். (இங்கு பயன்படுத்தியிருப்பது கேக் டெகரேஷன். கேக்கினுள்ளே சொருகுவதற்காக கீழே முள் போல ஒன்று இருந்தது. மெழுகுவர்த்தியில் அதற்கு அளவாக ஒரு பள்ளம் செய்து அதனுள் சூப்பர் க்ளூ வைத்து நிரப்பிவிட்டு, பிறகு புறாவை உள்ளே இறக்கியிருக்கிறேன்).
மகரந்தத்தில் நான்கு நூல்களிலிருந்து இரண்டு பக்க முனைகளையும் வெட்டி எடுக்க வேண்டும். ஐந்தாவதில் ஒன்றை மட்டும் வெட்டி நீக்கவும்.
நூலோடு உள்ளது கோதுமைக் கதிரின் தண்டாக வரும் விதமாக வைத்து மீதியையும் ஒட்டிவிடவும். இவற்றின் வடிவம் காரணமாக சுலபமாகப் பிரிந்து விழுந்து போகும் சாத்தியம் இருக்கிறது. மறக்காமல் கோதுமை மணிகள் வரும் இடங்களிலெல்லாம் கத்தியால் பள்ளம் சுரண்டிவிட்டு ஒட்டவும்.
பைபிளை ஒட்டுவதற்கு முன்பு, பின்பக்கம் திருப்பி இரண்டு ஓரங்களிலும் சூப்பர் க்ளூவைத் தடிப்பாக ஒவ்வொரு வரி வைத்து நன்கு காயவிடவும். காய்ந்த பிறகு நடுவில் டபுள் சைடட் டேப் ஒட்டிவிட்டு முன்பு வைத்த க்ளூவுக்கு மேலாக மீண்டும் ஒரு முறை க்ளூ வைத்து மெழுகுவர்த்தியில் ஒட்டவும். இப்படிச் செய்தால் பைபிள் நன்றாகப் பிடித்துக் கொள்ளும். காய்ந்தபின் உதிராது.
சாட்டின் பேப்பரில் ஹோல் பஞ்ச் கொண்டு இலைகளை வெட்டி எடுக்கவும். இலையின் பிரதான நரம்புகள் வரவேண்டிய இடங்களில் கத்தியால் அழுத்திவிடவும். மெல்லிய மெழுகுவர்த்திக்கு அளவாக ரிப்பனை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ரிப்பனை இடையிடையே டபுள் சைடட் டேப் போட்டு மெழுகுவர்த்தியின் மேலிருந்து கொடி சுற்றுவது போல வைத்து ஒட்டிவிடவும். ரிப்பன் ஆரம்பிக்கும் இடத்தில் பரவலாக க்ளூ வைத்து வெள்ளை மணிகளை அள்ளி வைத்து மெதுவாக அழுத்திப் பிடித்தால் ஒட்டிக்கொள்ளும். அவற்றை திராட்சைக் குலை வடிவம் வருவது போல சரிப்படுத்தவும். இவற்றுடன் 2 அல்லது 3 இலைகளைச் சேர்த்து ஒட்டினால் அழகான திராட்சைக் குலை அமைப்புக் கிடைக்கும். இப்படியே நடுவில் மற்றுமொரு திராட்சைக் குலையை அமைத்துக் கொள்ளவும். ரிப்பன் முடியும் இடத்தை ஒரு போவ் (Bow) வைத்து மறைக்கவும்.
கடைசியாக போவின் மேல் ஒற்றை ரோஜாவை வைத்து ஒட்டவும்.
முதல்நன்மை மெழுகுவர்த்திகள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பேரு புரியல... ஆனா பெரிய மெழுகுவர்த்தி அழகு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பேரு புரியல...// முதல் நன்மை - கிறீஸ்தவ மதத்தோடு தொடர்பான விடயம் வனி. First Holy Communion / முதல் சற்பிரசாதம் / புதுநன்மை / தேவநற்கருணை என்று பல பேர் சொல்லுவாங்க.

//பெரிய மெழுகுவர்த்தி அழகு// நன்றி வனி. ஒரு இந்தியத் தோழியின் தோழியின் பையனுக்காக செய்து கொடுத்தேன். ரெண்டு வருஷம் முன்னால அவங்க அக்கா முதல் நன்மையின் போது நல்ல மெழுகுவர்த்தி கிடைக்காம போச்சாம். அதனால தம்பியாருக்கும் அதிகம் டெக்கரேட் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. இங்க படத்துல தெரியுறதை விட அழகாவே வந்திருந்துது.

சின்னது சும்மா வீட்டில பொருட்கள் இருந்ததால செய்தது. அதுவும் அழகா இருந்துது. முழுசா வெள்ளையா இருந்ததாலயும் இரவில் ஃபோட்டோ எடுத்ததாலயும் இங்க ஃபோட்டோ சின்னதா இருக்கிறதாலயும் தெளிவா தெரியல. பாடசாலைக்கு அருகே இருக்கிற கார்மேல் சபை கன்னியர்கள் (மௌன சபை) ஒரு ஸ்டால் வைச்சிருக்காங்க. அதுக்கு டொனேட் பண்ணிட்டேன்.

‍- இமா க்றிஸ்

புதுநன்மை / தேவநற்கருணை மெழுகுவர்த்தி ரொம்ப‌ அழகா செய்து இருக்கீங்க‌. நான் புது நன்மை எடுத்த நியாபகம் வந்திடுச்சு .. அந்த‌ ஒயிட் ரிப்பன் கட்டி இருக்குறது ரொம்பவே அழகா இருக்கு இமாம்மா.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கு இரண்டு மெழுகுவர்த்திகளும் ரொம்ப பிடிச்சுருக்கு... ப்ளூ பேக்ரவுண்ட்ல வொயிட் அழகா இருக்கு. கீழே குட்டி குட்டி ரோஸ் & மணிகள் வச்சுருப்பது ரொம்ப அழகா இருக்கு..

கலை