கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ்

தேதி: September 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ப்ளைன் கார்ன் ஃப்ளேக்ஸ் - ஒரு கப் (குவியலாக)
ஹனி - 3 மேசைக்கரண்டி
பட்டர் - 30 கிராம்
ட்ரை ஃப்ரூட்ஸ் - 2 மேசைக்கரண்டி
வால்நட் - 2 மேசைக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ் பெரிய துண்டுகளாக இருந்தால். கையால் லேசாக நொறுக்கிக் கொள்ளவும். நட்ஸையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஓவனை 180 டிகிரியில் முற்சூடு செய்யவும்.
அடுப்பில் நாண் ஸ்டிக் தவாவை வைத்து, அதில் பட்டரைப் போட்டு உருக்கவும்.
பட்டர் உருகியதும் ஹனியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும். பட்டரையும், ஹனியையும் சேர்த்துக் கலக்கும் போது, அந்த கேரமல் நுரைத்து வெண்மையாக வரும்.
நுரைத்து வரும் போது கார்ன் ஃப்ளேக்ஸைச் சேர்த்து நன்கு ஒன்று சேரக் கலந்துவிடவும். நிறம் மாறாமல், ஒரு வாசம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, நறுக்கிய நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸைச் சேர்த்துப் பிரட்டவும்.
கப் கேக் ட்ரேயில் கப் பேப்பரை வைத்து, ஒவ்வொரு கப்பிலும் ஒன்றரை மேசைக்கரண்டி அளவு ஃப்ளேக்ஸ் மிக்ஸைப் போட்டு முற்சூடு செய்த ஓவனில் 9 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய, சுவையான, சத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் தயார். குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸிற்கு கொடுத்தனுப்ப ஏதுவானதாக இருக்கும்.
ஆறிய பிறகு தான் க்ரிஸ்பியாக இருக்கும். அதை டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைத்தால் இரண்டு வாரங்கள் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும். மிகவும் சுவையாகவும் இருக்கும்.

இதை பொரி போன்று இருக்கும் ஃப்ளேக்ஸிலும் செய்யலாம். நொறுக்காமல் சேர்க்கவும்.

மிகவும் இனிப்பாக வேண்டாமெனில் 2 மேசைக்கரண்டி அளவு மட்டும் ஹனியை சேர்த்துக் கொள்ளவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் பிடிக்காதவர்கள், அவரவருக்கு விருப்பமான நட்ஸைச் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் செர்ரியைக் கூட சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கலாம். பார்க்கவும் அழகாக இருக்கும்.

இதையே மினி பேப்பர் கப் மோல்டில் போட்டும் பேக் செய்யலாம். மலாய் மக்கள் பண்டிகை நாட்களில் இது போன்று மினி மோல்டில் தான் செய்து வைக்கின்றார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு, வித்தியாசமாவும் இருக்கு :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் க்ரிஸ்பி ரெசிபி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈசி & யம்மி குக்கீஸ். ரொம்ப நல்லாருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வித்தியாசமான இருக்கு. சூப்பர்

Be simple be sample

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எனது குறிப்பிற்க்கு பின்னூட்டம் அளித்த வனிதா,கனிமொழி,உமா,ரேவதி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ்,
இவ்ளோ ஈசி அன்ட் டேஸ்டி குறிப்பு,
பார்க்கும் போதெ சாப்பிடனும் போல‌ இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *