தேதி: September 3, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாங்காய் - ஒன்று
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

மாங்காயைக் கழுவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய மாங்காயுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த்தும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பெருங்காயத் தூள் சேர்த்து பொரியவிடவும். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.

தாளித்தவற்றைக் கிளறி வைத்திருக்கும் மாங்காயில் கொட்டிக் கிளறவும்.

சுவையான மாங்காய் ஊறுகாய் தயார். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் 4 நாட்கள் வரைக்கும் கெடாம்ல் இருக்கும். பரிமாறும் போது ஈரமில்லாத ஸ்பூன் போட்டு உபயோகப்படுத்தவும்.

Comments
சீதா
;) என்னவோ நடக்குது... ஒன்னும் சொல்றதுக்கில்ல.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதாம்மா
வாவ்.. மை ஃபேவரிட் மாங்காய் ஊறுகாய் யம் யம் தூள் ரெசிபி சீதாம்மா அந்த பவுல் எனக்கு குடுத்துடுங்க :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
சீதாம்மா
நாவூறுது சீதாம்மா. அப்டியே தயிர் சாதம் போட்டு ஊறுகாவோட ஒரு ப்ளேட் ப்ளீஸ்.:)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
சீதாம்மா
ஊறுகாய் விரும்பாத எனக்கும் எச்சில் ஊறுது
Be simple be sample
சீதாலட்சுமி
எனக்கு ஊறுகாய் ரொம்ப பிடிக்காது.
ஆனால் மாங்காய் ஊறுகாய் பார்த்தால் கொஞ்சமாவது டேஸ்ட் செய்யத் தோணும்.இப்ப உங்க குறிப்பை பார்த்ததும் இப்ப டேஸ்ட் செய்யத் தோணுது.பார்க்கவே நல்லா இருக்கு.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
சீத்தாம்மா, ம்ம் ஊறுகாய்
சீத்தாம்மா,
ம்ம் ஊறுகாய் சூப்பர், நாக்கு ஊருதே.......
சிம்பிள் ஊறுகாய் குறிப்பு.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சீதாம்மா,
சீதாம்மா,
சிம்ப்லி சூப்பர்..
என்றும் அன்புடன்,
கவிதா
மிகவும் நன்றி
பதிவிட்ட அனைத்துத் தோழிகளுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
அப்படியே சாப்பிடனும்
அப்படியே சாப்பிடனும் போலிருக்கு.
மாங்காய் ஊறுகாய்
அன்பு ரத்னப்ரியா,
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி