கருவேப்பிலை சாதம்

தேதி: January 7, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

அரிசி - 2 கப்
முந்திரி - 15
கருவேப்பிலை - 2 கொத்து
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள்- 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

முதலில் அரிசியை சுத்தம் செய்து பொல பொலவென்று வேக வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு சட்டியில் நெய் ஊற்றி கருவேப்பிலையை நன்கு வதக்கி ,முந்திரியையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்

பின் வேறு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,மிளகு தூள் சேர்த்து வதக்கி பின் வேகவைத்த சாதத்தை போட்டு வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும் கருவேப்பிலை சாதம் தயார்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கதீஜா,
உங்களுடைய இந்த கருவேப்பிலை சாதம் நேற்று இரவு செய்தேன். சும்மா சூப்பரா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இதன் சுவை. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கருவேப்பிலை சாதம் செய்தீங்களா உங்களுக்கு இந்த டேஸ்ட் பிடிச்சிதுன்னு சொன்னது சந்தோஷம்.செய்து பார்த்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.