தேதி: September 4, 2014
காலியான டூத் பேஸ்ட் ட்யூப்
பேப்பர்
சார்ட் / கெட்டியான அட்டை (டார்க் கலர்)
பென்சில்
ஹாட் க்ளூ கன் / ஃபெவி குயிக்
டிஷ்யூ பேப்பர்ஸ்
ஸ்டாமின்ஸ்
முத்துக்கள் / கற்கள்
கத்தரிக்கோல்
டூத் பேஸ்ட் ட்யூபை வெட்டி எடுத்து, அதன் உள் பகுதியை சுத்தமாக கழுவித் துடைத்துக் கொள்ளவும்.

ஒரு பேப்பரில் விருப்பமான பூவின் இதழ் வடிவத்தை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை மாதிரியாக வைத்து வெட்டி வைத்துள்ல டூத் பேஸ்ட் ட்யூபில் வைத்து இதழ்கள் வெட்டி எடுக்கவும்.

டிஷ்யூ பேப்பர் சிலவற்றை அடுக்கி வைத்துக் கொண்டு, அதன் மேல் இதழ்களை வைத்து பென்சிலின் பின் பகுதியால் (அல்லது ஏதேனும் உருண்டையான முனை கொண்டு) இதழின் நடுவில் வைத்து அழுத்தவும். (இவ்வாறு செய்வதால் இதழ் குவிந்தது போல வடிவம் கிடைக்கும்).

என்ன பூ வடிவம் கொடுக்க விரும்புகிறீர்களோ அதற்கேற்ப என்ன அளவில், எத்தனை இதழ்கள் வேண்டும் எனப் பார்த்து தேவையான எண்ணிக்கையில் இதே போல இதழ்களைத் தயார் செய்து கொள்ளவும். இதழ்களை எப்படி இணைத்து ஒட்ட விரும்புகிறீர்களோ, அது போல ஒரு முறை இணைத்து வைத்துப் பார்த்துக் கொள்ளவும்.

இப்போது சார்ட் / கெட்டியான அட்டையில் (டார்க் கலராக இருந்தால் பூ டிசைனை நன்றாக எடுத்துக் காட்டும்) பூ இதழ்களை ஒவ்வொன்றாக க்ளூ வைத்து ஒட்டிக்கொண்டே வரவும்.

பூவின் நடுவில் முதலில் ஸ்டாமின்ஸ் (விரும்பினால் ஒட்டலாம்) ஒட்டிக் கொண்டு, அதன் நடுவில் க்ளூ வைத்து முத்து அல்லது கல் ஒட்டிக் கொள்ளவும்.

இதே போல பூ இதழ்கள் அனைத்தையும் ஒட்டிவிடவும்.

அரும்பு செய்வதற்கு ஒரு இதழ் வடிவம் வெட்டி, அதை பென்சிலின் முன் பகுதியில் வைத்து கோன் வடிவில் சுருட்டிக் கொள்ளவும். கோனின் அடி முனையை நன்றாக அழுத்திவிட்டு வைக்கவும் (கோனின் அடி முனையை அழுத்திவிடுவதால் பிரிந்து வராமல் இருக்கும்).

பிறகு அரும்பை விரும்பிய இடங்களில் ஒட்டிவிடவும்.

பூக்களின் நடுவில் நான் க்வில்டு விநாயகரை ஒட்டியுள்ளேன். உங்கள் விருப்பம் போல செய்யலாம்.

தூக்கிப் போடக்கூடிய டூத் பேஸ்ட் ட்யூபில் செய்த பூக்களைக் கொண்டு, தயார் செய்த வால் ஹேங்கிங் இது.

இதழ்களை ஒட்டும் போது கூர்மையான பகுதியை மட்டுமே ஒட்டினால் இதழ்கள் தூக்கிக் கொண்டு உண்மையான பூக்கள் போல பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Comments
வனி
அழகா இருக்கு வனி. பிள்ளையாரும் க்யூட்.
- இமா க்றிஸ்
டீம்
ஜெட்டா வேலை பார்க்கறீங்கப்பா!!! இன்னைக்கே வரும்னு நான் நினைக்கவே இல்லை. அழகாக வந்திருக்கு... பெயருக்கும் அழகாக வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி மக்களே :) நான் செய்ததை இன்னும் ஃப்ரேம் கூட பண்ணாம வெச்சிருக்கேன்... உங்க வேகம் எனக்கு வர மாட்டங்குதே!! :( சோம்பேரி புள்ளையா போனேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
முதல் கருத்து கைவினையில் இமா தான் ;) நன்றி இமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
டூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ் ப்ரிட்டி ... க்வில்டு விநாயகர் அழகா இருக்கார் .. :)
ஒரு டவுட் அக்கா இதழ்கள் ல லாம் நீங்க கலரிங் ஏதாது குடுத்து இருக்கீங்களா இல்ல நேச்சுரல் கலர் ஆ அது ..? வால் ஹாங்கிங் நு சொல்லி இருக்குற படத்துல இருக்குறது கோல்டன் கலர் ல தெரியுது...
ஈஸியா இருக்கு ட்ரை பண்ணலாமேனு கேக்குறேன் அக்கா... :)
உங்க ஹாண்ட் கிராப்ட்லாம் ஏன் இவ்வளவு அழகா வருது தெரியுமா...?
என்னதான் அவங்க கண்ணுல இருந்து ஒளிச்சு வச்சாளும்
உங்கள இவ்வளவு அழகா வேலை செய்ய விடுறதே ஒரு நல்ல விஷயம் தான ... :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கனி
நேச்சுரல் கலர் தான் கனி... கலர் பண்ணல. இதுல கலர் பண்ணாலும் சரியா ஒட்டாமல் ஆர்டிஃபிஷியலா தெரியும். அதனால் அப்படியே விட்டுட்டேன். ஃபோட்டோ லைட் மற்றும் சுற்றி இருக்கும் கலர்ஸ்க்கு ஏற்றபடி அந்த பூக்கள் கோல்ட் அன்ட் சில்வரா மாறி தெரியுது. வினாயகர்... என்னோட முதல் க்வில்லிங். மிக்க நன்றி கனி :)
//உங்கள இவ்வளவு அழகா வேலை செய்ய விடுறதே ஒரு நல்ல விஷயம் தான ... :)// ம்ம்... ஸ்கூல் அனுப்பிட்டு, தூங்க வெச்சுட்டு நான் பண்றதுக்கு அவங்களுக்கு க்ரெடிட்டா!! சரி தான். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
செம :) எப்படி தான் இப்படியெல்லாம் யோசனை வருதோ? நானும் கிடைக்கிற குப்பையில் எல்லாம் அழகான பொருட்களை தூக்கி போட மனம் வராமல் சேர்த்து வைக்கிறேன். ஆனால் அதில் என்ன செய்யலாம் நு தெரியவே மாட்டேன் என்கிறது. இப்படி நெறய கத்துக்குடுங்க. வெயிட்டிங்.
அன்புடன்
தயூ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
வனி
ரொம்ப அருமை வனி. பொறுமையா அழகா செய்துருகீங்க.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
:-)
உண்மையான பூக்கள் போல பார்ப்பதற்கு அழகாக இருக்கு
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
Vanitha Vilvaranimurugan
உங்களை போன்றோருக்கு மட்டும் எப்படி தான் இப்படியெல்லாம் வேண்டாமென தூக்கி போடும் பொருள்களில் இருந்து கைவினை பொருள்கள் செய்றீங்களோ!நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் எனக்கு மட்டும் இது மாதிரி ஒன்றும் தோணவே மாட்டேங்குது.போங்கப்பா!
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
vani
எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கிறிங்களோ. சூப்பர் வனி சான்ஸே இல்ல.
Be simple be sample
vani akka
Azagana kalainayam ungaluku vazthukkal unga samaiyalthan nan athigama cook pannathu thanks akka
Allahu akbar
வனி
வாவ் சூப்பர் செமையா இருக்கு.
எப்படி இப்படி ஒரு ஐடியா?
வனி வால் ஹேங்கிங்கா இல்லாமல் பூங்கொத்து மாதிரி செய்ய வருமா?
நானும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
டெடி தயூ
யோசனை என்னுடையதில்லை... யூ டியூபில் எப்போதோ ரீசைக்ளிங் க்ராஃப்ட் என கண்ணில் பட்டது, ஐடியா பிடிச்சுது, அவங்க செய்த பூ பிடிக்கல ;) அதனால் ஐடியாவை நான் வேறு விதத்தில் பயன்படுத்துக்கிட்டேன். நன்றி தயூ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா
பொறுமை??? ;) ஃபேஸ்புக்ல சொல்லிடாதீங்க இந்த வார்த்தையை, என் ஆத்துக்காரர் படிச்சா விழுந்து விழுந்து சிரிப்பார். மிக்க நன்றி உமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜெயா
மிக்க நன்றி ஜெயா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டெல்சி
தயூக்கு சொன்னதே தான் ;) எப்போதோ கண்ணில் பட்டது, பேஸ்ட் தீர்ந்து போகவும் நினைவுக்கு வந்து செய்தேன். நன்றி டெல்சி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்ஸ்
முடியல... ;) உங்களுக்கு நான் தனியா கதை சொல்றேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிசா
ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் நிஸா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
ஆக்ஷுவலா நான் பார்த்த வீடியூவில் பூங்கொத்துக்காக தான் பூ பண்ணிருந்தாங்க. ஹாட் க்ளூ கன் வெச்சு தான் ஒட்ட முடியும். என்னிடம் நிறைய வித விதமா பிஸ்தா ஷெல் பூக்கள், ஸ்டாக்கிங் துணி பூக்கள், துணியில் செய்தவை, கார்ன் ஹஸ்கில் செய்தவைன்னு இருக்குறதால எனக்கு அப்படி செய்ய விருப்பம் இல்ல. கூடவே அப்படி செய்யும் போது பேஸ்ட்டின் மேல் பக்கம் உள்ள கலர் எல்லாம் நீக்க வேண்டும், இல்லன்னா மேல கலர் பண்ணனும், ஆர்டிஃபிஷியலா தெரிஞ்சுது... அதனால் வேறு விதமா செய்தேன். கட்டாயம் பூங்கொத்தா செய்யலாம். கம்பியின் முனையில் அலுமினியம் ஃபாயிலை சுருட்டி சுற்றிக்கொண்டு அதன் மேல் இதழ்களை அப்படியே ஒட்டினாங்க. அவங்க இதழுக்கு வடிவம் ஏதும் கொடுக்கல. ட்ரை பண்ணிப்பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
நீங்க செய்தது நேச்சுரலா இருக்கு. அந்த சில்வர் கலர் ரொம்பவே பிடிச்சிருக்கு. தவிர என்னிடம் ஹாட் க்ளூ கன் இல்லை. ட்ரை பண்ணீட்டு சொல்றென் வனி
வனி
வனி நீங்களும் ஆரம்பிச்சாச்சா? சூப்பர், இதுல வண்ணம் ஒட்டாது, ஆனா இந்த கலர் தான் அழகா இருக்கு, அப்பறம் உங்க சோள தோகை மலர்களை ஊரில் எல்லாருக்கும் காட்டினேன், யாருமே நம்ப மாட்டிக்கிறாங்க அது சோளதோகைல பண்ணியதுன்னு சொன்னா:)) என் அண்ணி லலிதாவுக்கு இது ரெம்ப பிடிச்சு போச்சு, உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க:))சொல்லிட்டேன்!!
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
நிகிலா க்ளு ஸ்டிக்
நிகிலா க்ளு கன் இல்லாவிட்டால் பராவாயில்லை, க்ளு ஸ்டிக் மட்டும் வாங்கிக்கோங்க, நெருப்பில் காட்டினால் உருகும், உடனே உபயோக படுத்துங்க, நெருப்பில் ரெம்ப நேரம் காட்டினால் கருப்படிக்கும், என் அனுபவம்,
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
Flowers
Pretty flowers vanikkaa .. Will give it a try for sure :) started quilling .. Good.:)
Kalai
ரேணுகா
தகவலுக்கு நன்றி ரேணு.:) க்ளூ ஸ்டிக் வைத்து செய்து பார்க்கிறேன். கவனமாக கருப்படிக்காமல் செய்து பார்க்கிறேன்
நிகிலா
என்னிடம் க்ளூ கன் இருக்கு... ஆனா பயன்படுத்தியதில்லை. எனக்கு எப்பவும் குயிக் ஃபிக்ஸ் தான் பெட்டரா தோணும் ;) ரேணு ஐடியாவை ட்ரை பண்ணுங்க
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணு
மிக்க நன்றி :) //நீங்களும் ஆரம்பிச்சாச்சா? // - நம்ம கை என்னைக்கு சும்மா இருந்தது? எப்பவும் எதாவது பண்ணிக்கிட்டு தான் இருப்பேன்... அது இங்க வருதா, வராம வீட்டில் இருக்கான்றது தான் மேட்டர்.
//என் அண்ணி லலிதாவுக்கு இது ரெம்ப பிடிச்சு போச்சு, உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க:))சொல்லிட்டேன்!!// - என்னோட ஸ்பெஷல் தேன்க்ஸ் சொல்லிடுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலை
ஆமாம்... வெகு நாட்களுக்கு பின் வாங்கி வெச்ச பேப்பரை எல்லாம் என்ன பண்றதா உத்தேசம்னு என் மனசு கேட்டுச்சா... எடுத்து ட்ரை பண்ணேன் ;) இன்னும் டூல்ஸ் எதுவும் வாங்கல... சும்மா டூத் பிக், மூடி, பேனான்னு தேவைக்கு ஏற்ற அளவில் கையில் கிடைப்பதெல்லாம் டூல்ஸ் ஆகுது. அதுவே திருப்தியா இருக்கு எனக்கு.
மிக்க நன்றி கலை... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா