பூண்டு மிளகாய்த் துவையல்

தேதி: September 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சிவப்பு மிளகாய் - 20
பூண்டு - 10 பற்கள்
கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் சிவப்பு மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
பிறகு அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அரைத்த துவையலை தாளித்த கடுகு உளுத்தம் பருப்புடன் சேர்த்து, மிக்ஸியைக் கழுவிய தண்ணீரையும் ஊற்றி, கரைத்துக் கொள்ளவும். சுவையான, காரசாரமான பூண்டு மிளகாய்த் துவையல் தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் 4 அல்லது 5 நாட்கள் வரைக்கும் கூட உபயோகப்படுத்தலாம். பூண்டு வாசனையுடன் நன்றாக இருக்கும்.

அரைத்த அதே தினத்தில், நல்ல காரமாக இருக்கும். அரைத்த மறுநாளிலிருந்து உப்புச் சுவை அதிகரிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சீதாம்மா சூப்பர்... நாங்க பச்சையா அரைச்சு பின்பு வதக்கி எடுப்போம்... இந்த முறையில் ட்ரை பண்றேன்

Hai ma , en appa ku idhu remba pidikum kattayam avaruku etha seithu kuduppen. Thank you :-))

ரம்யா ஜெயராமன்

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் செம ஸ்பைசி சட்னி. நான் இவ்வ்ளோ மிளகாய் போடனமாட்டேன். போட்டு செய்து பார்க்கிறேன்.

Be simple be sample

Seethamma thuvaiyal karasatamayiruku taste arumai nan senjuparthen

Allahu akbar

பூண்டு மிளகாய்த் துவையல் செம ஸ்பைஸியா இருக்கும் போலயே.. நல்ல‌ குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்ஸ்ஸ்ஸ்......கலரை பார்த்தாலே காரம் தெரியுது. சரி இதையும் நான் அங்கு வரும் போது மெனுவில் சேர்த்துக்கோங்கோ! அப்போ காலை டிபனிலிருந்து ஆரம்பிக்கணும் என்று நினைக்கிறேன் ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவி... சீக்கிரம் மெனுவை போடு கண்ணா... போய் உட்கார்ந்து சமைக்க‌ சொல்லி சாப்பிட்டு வரலாம். இந்த‌ முறை அன்கிளுக்கு நாங்க‌ ரெஸ்ட் குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிவிட்ட‌ அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி