எக் வெஜ் மசாலா சேமியா

தேதி: September 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

சேமியா பாக்கெட் - ஒன்று
முட்டை - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய் - தலா ஒன்று


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து பொடிமாஸ் செய்து கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து சேமியா மற்றும் காய்கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதகக்வும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிக் கலவை மற்றும் சிக்கன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும்.
கொதி வரும் போது தக்காலி சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும். கலவை சற்று கெட்டியாகத் துவங்கியதும் சேமியாவைச் சேர்த்து மூடி போட்டு, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து திறந்தால், சேமியா வெந்து தண்ணீர் முழுவதும் வற்றி இருக்கும். அத்துடன் பொடிமாஸ் செய்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான எக் வெஜ் மசாலா சேமியா ரெடி

தண்ணீரின் அளவு சேமியாவின் ப்ராண்டைப் பொறுத்து மாறலாம். நான் அணில் சேமியா பயன்படுத்தியுள்ளேன்.

காய்கறிகளை அதிக நேரம் வேக வைக்க வேண்டாம். க்ரஞ்சியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். விரும்பினால் தாளிக்க நெய் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின்க்கு நன்றி.. தாங்க்ஸ் சுபா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈசியா இருக்கு . நானும் இதுபோல செய்திருக்கிறேன் நன்றி கனிமொழி

பானு உங்கள் பதிவுக்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Arumaiyayiruku nanga ithupola mutton chicken pottu semiyabiriyani pannuvom ithum try panren thanks

Allahu akbar

வருகைக்கும் பதிவுக்கும் மிக்க‌ நன்றி. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சிம்பிளீ சூப்பரா இருக்கு கனி

Be simple be sample

Nanum idu pol than saiven

வருகைக்கு நன்றி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பதிவுக்கு நன்றி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அம்மணி கல்யாணம்னு சொன்ன‌ பிறகு தான் மீண்டும் சமையல் பக்கம் வந்திருக்கீங்க‌ போல‌ ;) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா கல்யாணம் நு போன‌ வருஷம் ல‌ இருந்து கதை ஓடிக்கிடே இருக்கு

இத்தன‌ நாள் அப்படியோ எஸ்கேப் ஆகிட்டே இருந்தேன் ;) இனி அதுக்கு வழியே இல்ல‌ அக்கா :)
வீட்ல‌ இந்த‌ வருஷ என்ட் லயே பண்ணிடனும் நு சொன்னாங்க‌ நான் அடுத்த‌ வருஷம் தான் நு சொல்லிடேன் அப்புறம் தான் மே மாதம் நு சொல்லி இருக்காங்க‌ முடிஞ்சா மே ல‌ இருந்து எஸ்கேப் ஆகி நவம்பர் வரைக்கும் தள்ளிக்கிட்டு வந்துடணும் :) பாவம் என் மாமன் ;) இத‌ டைப் பண்ணி நானே சிரிச்சுக்குறேன் :) பதிவுக்கும் வருகைக்கும் மிக்க‌ நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hi kanimozhi..ur recipe looks delicious. Il try and let u know how it came out..

In the end only 3 things matter: how much u loved, how gently u lived and how gracefully u let go things not meant for u..