தேதி: September 11, 2014
நடுத்தர அளவுள்ள கேரட்
சிறிய கத்தி
கார்விங் கிட்
கேரட்டின் முன்பகுதியையும், பின்பகுதியையும் வெட்டிவிட்டு பட்டையாக இருக்கும் நடுப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

கார்விங் கிட்டிலுள்ள கூர்மையான கம்பி முனையுள்ள டூலைக் கொண்டு கேரட்டில் இலை வடிவத்தை வரையவும்.

வரைந்த அடையாளங்கள் தெளிவாக தெரிவதற்கு அதே டூலைக் கொண்டு வரைந்த பகுதியை இன்னும் ஆழமாக வரைந்துவிடவும்.

பிறகு கத்தியை கொண்டு வரைந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு மீதியை வெட்டி நீக்கிவிடவும்.

வெட்டி எடுத்த பிறகு இவ்வாறு இருக்கும்.

அதன் நடுவில் படத்தில் காட்டியுள்ளது போல் மெல்லியதாக ஆழமான கோடுகள் வரையவும்.

கார்விங் கிட்டிலுள்ள டூல்ஸில் ஒரு பக்கம் வளைவாகவும், மற்றொரு பக்கம் 'V' வடிவிலும் இருக்கும் டூலை எடுத்து 'V' வடிவ முனையைக் கொண்டு, இலையின் வலது மற்றும் இடது புற ஓரங்களிலிருக்கும் கூர்முனையான பகுதியில் வைத்து அழுத்தி சற்று உள்நோக்கி பெயர்த்து எடுக்கவும்.

கேரட்டில் செய்த இலை தயார்.

Comments
senbaga
Super :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
காரட் இலை
அழகாகச் செய்து காட்டி இருக்கிறீங்க செண்பகா.
- இமா க்றிஸ்
சூப்பர்
அழகா இருக்கு
கேரட் கார்விங்
செண்பகா அக்கா கேரட் கார்விங் ரொம்ப அழகு...
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Carrot Carving
Nice work senbaga :)
Kalai
காரட் கார்விங்
செய்து பார்த்தாச்சு செண்பகா. வெகு அழகாக வந்தது. 'அறுசுவை விசிறிகள்' பக்கம், படம் பகிர்ந்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்