கோபி மஞ்சூரியன்

தேதி: September 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பற்கள்
மைதா மாவு - 150 கிராம் (அரை கப்)
உப்பு - தேவைக்கேற்ப
டொமேட்டோ ஸ்வீட் சாஸ் - 2 தேக்கரண்டி
ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, கல் உப்பு கலந்த வெந்நீரில் சிறிது நேரம் போட்டு, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன், பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து, தயிர் பதத்தில் கரைத்து வைக்கவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை மைதா மாவுக் கரைசலில் போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, சூடானதும் மைதா மாவுக் கரைசலில் போட்டு வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்த துண்டுகளை டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பூண்டுப் பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, சூடானதும் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு டொமேட்டோ சாஸைச் சேர்த்துக் கிளறவும்.
டொமேட்டோ சாஸ் சேர்த்துக் கிளறியதும், நன்கு நிறம் மாறி வரும்.
சுவையான கோபி மஞ்சூரியன் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும். விருந்துகளில் ஸ்டார்ட்டராகவோ, அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவோ பரிமாறலாம்.

காரம் தேவைப்படுபவர்கள் வதக்கிய வெங்காயத்தில் காலிஃப்ளவரைச் சேர்க்கும் போது, சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்க்கலாம்.

விரும்பினால், பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் மற்றும் சோயா சாஸை வெங்காயம் வதக்கும் போது வதக்கிச் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதெல்லாம் எப்போ??!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீத்தாம்மா,
வழ்க்கம் போல‌ இந்த டிப்ஸும் நல்லா இருக்கு...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சூப்பர் சீதாம்மா. குடமிளகாய் சேர்த்தா நல்லாருக்கும்ல இன்னும்.

Be simple be sample

அன்பு வனி, அன்பு சுபி, அன்பு ரேவதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப‌ நாள் கழித்து பின்னுாட்டம் தருகிறேன், முதல் பின்னுாட்டம் உங்களுக்கு தான், சுவையான குறிப்பு.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு ராதா ஹரி,

ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு, உங்க‌ பின்னூட்டம் பார்த்து. எவ்வளவு நாளாச்சு உங்ககிட்ட‌ பேசி.

உங்க‌ குறிப்புகள் அடிக்கடி செய்யறேன், முடியறப்ப‌ ஃபோட்டோ எடுத்துப் போடறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கலக்குறீங்க சீதா.......பொ....பா.....பூ.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

very nice..................

all is well

அன்பு லாவண்யா, அன்பு ஹர்ஷு,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி