ஆப்பமும் விவிக்காயும்

ஆப்பம் சுவையான‌ செட்டிநாட்டு உண‌வு. நமது காலை டிபனுக்கு ஏற்ற‌ ஒன்று. நடுவில் உப்பி மிருதுவாகவும் ஓரத்தில் மொறுமொறுப்பாகவும் பஞ்சு போன்ற‌ ஆப்பம் அனைவருக்கும் பிடித்தமான‌ உணவு.

சின்னக் குழந்தைகளாக‌ இருக்கும் போது எங்கள் வீட்டில் பாட்டிம்மா ஆப்பம் சுட்டு தட்டில் வைத்தால் முதலில் ஓரத்தில் உள்ள‌ மொறுமொறுப்பான‌ பகுதியை ஆர்வமுடன் சாப்பிடுவோம். கடைசியில் தான் மீதியைத் தேங்காய்ப்பால் விட்டு சாப்பிடுவோம்.

அடையாறு ஆனந்த‌ பவனில் ஆப்பத்தை படத்தில் காட்டியபடி வளைத்து வளைத்து பூ போல‌ செய்து பரிமாறுவது தனி அழகு தான்.

நானும் இணயத்தில் சுவையான‌ ஆப்பம் ரெசிபியைத் தேடித் தேடி அலசிப் பிழிந்தேன்.

அனைத்துக் குறிப்புகளிலும் உளுந்து, வெந்தயம் சேர்த்து ஆப்பம் செய்வது பற்றியே காணப்பட்டது.

உளுந்து, வெந்தயம் சேர்த்து ஆப்பம் செய்யும் போது அதன் சுவை சற்றே தோசையை போல‌ வந்துவிடுகின்றது.

எங்கள் பாட்டியம்மா சுவையாக‌ சமைப்பதில் வல்லவர். அந்தக் காலத்தில் பாட்டிய‌ம்மா ஆப்பம் செய்யும் முறையே வேறு.

பச்சரிசியை ஊறவிட்டு உரலில் இடித்து, மாவைச் சலித்து கடைசியில் வரும் அந்தக் குருணையை கஞ்சி காய்த்து, ஆறவிட்டு அதில் இடித்துச் சலித்த‌ மாவைக் கலந்து அதிலே சிறிதளவு புளித்த‌ பதனீரைச் சேர்த்து பிசைந்து வைப்பார்கள். அதில் ஈஸ்ட் இருக்கே அதற்காகத் தான்.

மறுநாள் அந்த‌ மாவு சும்மா புஸூபுஸூன்னு பொங்கி வந்திருக்கும். அதில் ஆப்பச் சோடா சேர்த்து ஆப்பம் செய்வார்கள்.

ஆப்பச் சோடான்னா என்னன்னு விழிக்க‌ வேண்டாம். சோடா உப்பை ஆப்பச் சோடான்னு தான் சொல்லுவார்கள். கடையிலும் அப்படியே கேட்டு வாங்குவோம்.

இப்போது நான் ஆப்பம் செய்முறையைச் சொல்கின்றேன். இந்த‌ முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்தை எனக்கு தெரிவியுங்கள்.

பச்சரிசி‍‍‍‍‍ _ முக்கால் டம்ளர்
புழுங்கலரிசி _ கால் டம்ளர்
ஜவ்வரிசி _ இரண்டு தேக்கரண்டி

மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊறவிட்டு இத்தோடு

தேங்காய் துருவல் _ நான்கு மேசைக் கரண்டி
சாதம் _ இரண்டு தேக்கரண்டி

கலந்து மிக்சியில் நன்றாக‌ அரைத்து இத்துடன்

தோசைமாவு _ ஒரு கரண்டி
உப்பு _ தேவையான‌ அளவு
தண்ணீர் _ ஒரு டம்ளர்

போட்டு மாவை கலந்து வையுங்கள். தோசை மாவு ஈஸ்ட் செய்யும் வேலையைச் செய்து மாவை நன்கு புளிக்கச் செய்யும். சாதம் சேர்ப்பதால் மாவு விரைவில் புளிக்கும். மறுநாள்,

சர்க்கரை _ அரை தேக்கரண்டி
சோடா உப்பு _ ஒரு சிட்டிகை

சேர்த்து ஆப்பம் சுடுங்கள். சுவையான‌ பூப் போன்ற‌ ஆப்பம் ரெடி. உளுந்து, வெந்தயம் சேராத‌ ஒரிஜினல் ஆப்பத்தின் சுவை இதில் இருக்கும்.

தேங்காய்ப் பாலில் ஏலக்காய், சர்க்கரை கலந்து ஆப்பத்தில் விட்டுச் சாப்பிட‌ பொருத்தமாக‌ இருக்கும். தேங்காய்ப் பால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதே மாவில்

வெல்லப்பொடி, ஒரு வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து இனிப்புப் பணியாரம் செய்யலாம். உள்ளி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து காரப் பணியாரம் செய்யலாம். இரண்டுமே அருமையாக‌ இருக்கும்.

இது மட்டுமன்று, இதே மாவில்

பொட்டுகடலை _ நான்கு தேக்கரண்டி
தேங்காய் துருவல்_ ஒரு கப்
சர்க்கரை _ தேவையான‌ அளவு
முந்திரி, திராக்ஷை _நெய்யில் வறுத்தது

அனைத்தும் கலந்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக‌ எடுக்க‌ அது தான் விவிக்கா.

(இனிப்பு சேர்ப்பதால் மாவு கொஞ்சம் நீர் விட்டுக் கொள்ளும். எனவே, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது).

(இது என்ன‌ பேரு? இது காய் இல்லியே !! என‌ என் புகுந்த‌ வீட்டினர் கூற‌ நானும் இதை இனிப்பு இட்லி என்று அழைக்க‌ ஆரம்பித்து விட்டேன்.)

விவிக்கா மிதமான‌ இனிப்புடன் மிருதுவாக‌ மிகுந்த‌ சுவையுடன் இருக்கும். அதன் மாறுபட்ட‌ சுவை யாவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ஆப்பமாவு இருந்தால் இந்த‌ மூன்று அயிட்டமும் ரெடி. சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள் தோழிகளே.

5
Average: 5 (5 votes)

Comments

நிகி அக்கா ம்ம் ம்ம் டேஸ்டி குறிப்பு,
எல்லா ஐட்டமும் சூப்ப‌ரோ சூப்பர்....இனிப்பு பனியாரம் இன்னும் சூப்பர்.... படமும் ரொம்பவே அழகு....
கண்டிப்பா ட்ரை பண்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வாவ் சூப்பர் நிகி. நிஜமா நீங்க சொல்லற மாதிரி ஆப்பம் சாப்பிடும்போது தோசை ஃபீல் வருது. நான் நீங்க சொன்னமாதிரி செய்துப்பார்க்கிறேன். அது நீங்க சுட்ட ஆப்பமா நிகி. எல்லாமே மனசை அள்ளுது.

Be simple be sample

சூப்பர். :-) நீங்க சமையற் குறிப்பாக அனுப்பி இருக்கலாம்னு தோணுது. விவிக்கா... சுவையாக இருக்கும் என்று தெரியுது.

அந்த இரண்டாவது படத்திலுள்ளது போல ஒரு 'இனிப்பு' சிறு வயதில் சாப்பிட்டிருக்கிறேன். நத்தார் சமயம் செய்வார்கள். பிபிக்கம் என்பார்கள் அதை. தலைப்பில் இந்தப் பெயர் ஒற்றுமையைக் கவனித்துத்தான் உள்ளே வந்தேன். :-)

‍- இமா க்றிஸ்

எல்லாமே குறிப்பாக‌ வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே... தேட‌ சுலபமாக‌ இருந்திருக்கும். படங்கள் அழகு... அப்பம் அம்சமா செய்திருக்கீங்க‌. அவசியம் செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நிகிலா,

அருமையான‌ குறிப்புகள். படங்களும் அருமையாக‌ வந்திருக்கு.

நான் ஸ்டிக் ஆப்ப‌ சட்டியில் மாவு ஊற்றி, கையினால் சுழற்றி, இது போல‌ பூ வடிவம் வர‌ வைப்பதுண்டு. ஹோட்டலில் கிடைக்கிற‌ அளவு, அதே போல‌ வரலைன்னாலும், கிட்டத்தட்ட‌ வருது.

விவிக்கா குறிப்பு ரொம்ப‌ வித்தியாசமா இருக்கு. இனிப்பு சுவை இருப்பதால‌ குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவசியம் செய்து பார்க்கிறேன் நிகிலா.

அன்புடன்

சீதாலஷ்மி

நிகி இன்னைக்கு எங்க வீட்டுல நீங்க சொன்ன ஆப்பம். படம் முகப்புத்தகத்தில். சூப்பரா வந்திருக்கு நிகி

Be simple be sample

உங்களோட‌ முதல் கருத்துக்கு மிக்க‌ நன்றி.
//எல்லா ஐட்டமும் சூப்ப‌ரோ சூப்பர்..//
செய்து சுவைத்துப் பாருங்க‌ சுபி.

ஆம் ரேவா. ஆப்பம்னா உளுந்து வெந்தயம் இருக்கக் கூடாது பா.
//அது நீங்க சுட்ட ஆப்பமா நிகி//
ஹி..ஹி... கூகுள்ல‌ சுட்டது
மிக்க‌ நன்றி ரேவா

நன்றீ இமா;) நான் இதுவரை சமையற்குறிப்பு அனுப்பியதில்லை இமா.
விவிக்கா புளிப்பும் இனிப்பும் கலந்து மாறுபட்ட‌ சுவையுடன் இருக்கும்.
பிபிக்கம்__ விவிக்கா தான் பேரு மாறி இருக்குமோ ??

//எல்லாமே குறிப்பாக‌ வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே.//
முதல்ல‌ தோணலை. அனுப்பி இருக்கலாம். . அதனால் என்ன‌? நீங்க‌ செய்து பார்த்து குறிப்பு அனுப்பிடுங்கோ.:) வனி
ரொம்ப‌ டேஸ்டியான‌ ஒன்றல்ல‌... மூணு.

அன்புள்ள‌ சீதா
உங்க‌ பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.
//விவிக்கா குறிப்பு ரொம்ப‌ வித்தியாசமா இருக்கு. இனிப்பு சுவை இருப்பதால‌ குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்//
எண்ணெய் இன்றி ஆவியில் வெந்து எடுப்பதால் அனைவருக்கும் ஏற்றது.
இதன் சுவை புளிப்பு இனிப்பு கலந்த‌ மாறுபட்டதாக‌ இருக்கும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌ சீதா.

முகப்புத்தகம் பார்த்தேன். சூப்பரோ சூப்பர். சும்மா அப்படியே பூவிதழ் மாதிரி செய்து அசத்தியிருக்கீங்க‌.
நீங்க‌ செய்த‌ ஆப்பம் எடுத்துச் சாப்பிட‌ மட்டுமல்ல‌, கண்ணாலே பார்க்கவும் பூ தான்.
செய்து பார்த்து பதிவிட்டதுக்கு மிக்க‌ நன்றி ரேவா.

Niki super ... Appam, vivika rendume super.. Kattaayam seythu parthu solren Nikki :)

Kalai

மிக்க‌ நன்றி கலா .
விவிக்கா நம்ம‌ நெல்லை ஸ்பெஷல் அயிட்டம் பா
செய்து பார்த்து கட்டாயம் சொல்லுங்க‌ கலா

Vivika saptruken niki.. Appam intha madhiri mavula seythathillai .

Kalai

செய்து பாருங்க‌ கலை சூப்பரா இருக்கும். நம்ம‌ ரேவ் செய்து பார்த்து முகபுத்தகத்தில‌ போட்டுருக்காங்க‌ பாருங்க‌. :)

..... உங்க ஆப்பம் அழகா ஷாஃப்டாயிருக்கு நன்றி. எங்கம்மாவும் ஆப்பம் அருமையா சுடுவாங்க அவங்க பச்சரிசியுடன் பழையசோறு போட்டு கலக்கி கையால் புடுச்சிப்பார்ப்பாங்க.அது உடையலன்னாதான் சரியான பாகம்னு நைசாக அரைத்து புளிக்கவைப்பாங்க.மாவு புளித்ததும் சோடாஉப்பு தேங்காய்பால் உப்பு தோசைமாவு 1கரன்டிப்போட்டு கலக்கி ஆப்பச்சட்டியில் சுடுவாங்க அதுவும் நீங்க சொன்னதுபோல நல்லாவரும் ஆனா நான் செஞ்சேன் .வழுக்குனுயிருக்கு அப்புரம் நிரைய பாத்துசெஞ்சும் எங்கம்மா கைபக்குவம் வரல நீங்க சொன்னாபோல செஞ்சேன் ரொம்ப நல்லாவந்துச்சுமா ரொம்ப நன்றி

Allahu akbar

Nikila.நீங்க போட்டுருந்த விவிக்காயும் இன்னோறு நாள் செஞ்சு சாப்பிட்டுசொல்ரேன்.நன்றிகிலா..நீங்க போட்டுருந்த விவிக்காயும் இன்னோறு நாள் செஞ்சு சாப்பிட்டுசொல்ரேன்.நன்றி

Allahu akbar

//அடையாறு ஆனந்த‌ பவனில் ஆப்பத்தை // இங்க அண்ணபூர்ணாவிலும் இதே போன்று பூப்போல ஆப்பம் கிடைக்கும். நீங்கள் கொடுத்திருக்கும் 3 குறிப்புகளுமே அருமை, விவிக்காய் இப்பொழுதான் கேள்விப்படுகிறேன் :) இந்த குறிப்பு முயற்சி செய்து பார்க்கலாம்னு இருக்கேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

// நீங்க சொன்னாபோல செஞ்சேன் ரொம்ப நல்லாவந்துச்சுமா //
இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். ரொம்ப‌ சந்தோஷம் பா.

//நான் செஞ்சேன் .வழுக்குனுயிருக்கு அப்புரம் நிரைய பாத்துசெஞ்சும் எங்கம்மா கைபக்குவம் வரல// நீங்க‌ பழைய‌ சாதம் அதிகமா போட்டுருப்பீங்க‌. சாதம் அதிகமானால், ஆப்பம் வழுக்குனு தான் வரும். அதனால், அம்மா பக்குவம் வராமல் போயிருக்கும். ஹஜனிசா

விவிக்காய் நெல்லை மாவட்ட‌ ஸ்பெஷல் அருள். ரொம்ப‌ அருமையா இருக்கும்.:)

எங்க‌ வீட்டுக்கு வந்திருந்த‌ நண்பர் ஒருவருக்கு விவிக்கா செய்து கொடுத்தோம். அவர் ப்ளைன் இட்லினு நினைச்சுட்டார். எப்படி சாம்பார் இல்லாமல் சாப்பிடறதுனு அப்படியே வச்சிருந்தார். நாங்கள் சொன்னப்புறம் எல்லாவற்றையும் சாப்பிட்டுட்டு
செய்முறை கேட்டுட்டு போனார் என்றால் பாருங்களேன்.
செய்து பாருங்க‌ அருள்.

நிகிலா...

உங்கள் முறைப்படி செய்தேன்..ஆப்பம் பஞ்சு போல‌ மிருதுவாக‌ நன்றாக‌ வந்தது.கணவரும் குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டாங்க‌..குறிப்புக்கு நன்றி.

என் அம்மாவும் இது போலத்தான் செய்வாங்க‌. முன்னாடி ஆப்பம் செய்திருக்கேன், ஆனா இவ்வளவு சாஃப்டா வந்ததில்ல‌..

தென் தமிழகத்தில்தான் உளுந்து சேக்காம‌ செய்வாங்கன்னு நெனைக்கிறேன்.

அன்புடன் கவிதா.

anbe sivam

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி.'
//ஆப்பம் பஞ்சு போல‌ மிருதுவாக‌ நன்றாக‌ வந்தது// மிக்க‌ சந்தோஷம் கவி:)

//தென் தமிழகத்தில்தான் உளுந்து சேக்காம‌ செய்வாங்கன்னு நெனைக்கிறேன்.//
இருக்கலாம், இணையத்தில் உளுந்து சேர்த்து தான் உள்ளது. ஆனால், உளுந்து சேர்க்காமல் செய்தால் சுவையாக‌ இருக்கும்.

Nerru iravu dinner ku pannaen. Dosa maavu add pannala. Super soft aaappam. Oru kutty cup vechiruken innaiku paniyara chattiyil seyya. Thanks for the recipes. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//Super soft aaappam//
தோசை மாவு புளிக்க‌ செய்வதற்கே. நானும் மாவு இல்லாட்டி போடறதில்லை.

செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி வனி. அந்த‌ குட்டி கப் மாவில் விவிக்காயும் செய்து பாருங்க‌. ரொம்ப‌ பிடிக்கும்.:)

Unga tips nallrukku. Nan new arrival . Ulunthu sarkkamal appam soft ak varukiratha dosai mavu must sarkkanuma sadam nan niraya poduvan ini unga style la panni parkkaran

நல்லா வரும். பண்ணிப் பாருங்க‌.
நன்றி பானு

Appam super niki. Nalla soft, taste. Nalla irukku.photo edukka mudiyala. Next time kattayam photo eduthu anuparen. Nalla kurippukku thanks niki.:)

Kalai

எங்க வீட்ல ஒரு டம்ளர் பச்சரிசி, கால் டம்ளர் புழுங்கலரிசி, தலா ஒரு தேக்கரண்டி உளுந்தும், வெந்தயமும் போட்டு ஊற வைப்போம். உளுந்து சேர்வதாலோ என்னமோ ஆப்பம் நடுவில் பஞ்சு போன்ற மெத்தென்றும் வெந்தயம் சேர்வதால் லேஸ் போன்ற ஓரம் ப்ரவுன் நிறத்தில் க்றிஸ்ப்பியாகவும் இருக்கும்.எங்க வீட்ல எல்லோருக்குமே ஓரம் நன்கு முறுகலாக இருந்தால் தான் பிடிக்கும். இங்கு வின்டரில் அதிக குளிர் என்பதால் வெந்தயம் சேர்க்காமல் அரைத்திருக்கிறேன், அவ்வளவு முறுகலா வர்ரதில்லை. மகளுக்கு ஸ்டார் வடிவில் செய்து கொடுப்பேன்.
சிறு வயதில் பிறந்த நாளென்றால் காலை டிபனுடன் விவிகாவும் இருக்கும். பல வருடங்களுக்குப் பின் கடந்த மாதம் தான் விருந்தினருக்கென்று செய்தேன். ஆப்ப மாவில் பணியாரம் இதுவரை செய்ததில்லை. அடுத்த முறை செய்துப் பார்த்துடறேன்.

Unga appam saithu parthan. Soft illayama. N soolra method la panni parunga. ldly arsi - 1glass passarsi -1glass ulundu-1/4glass vandayam sirithalavu pottu tani taniyaka ura vaikkavum iarandumani narm ura vaithu tanitaniyaka nice aka arikkavum.lastla sadam oru kaipidiyaivida kuda poottu arithu night mavu fridgela vaikkama valiya vaithu morning soda mavu sirithu kalakki appam sudavum mavu arikkumpothu tanner niraya vittu arikka kudathu mixiyela arikkalam