ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற அவள் மட்டுமே காரணமா அல்லது ஒரு ஆணும் காரணமா

தோழர் தோழிகளே

ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற அவள் மட்டுமே காரணமா அல்லது ஒரு ஆணும் காரணமா ?

உங்களுக்கு தெரிந்த கருத்துகளை வரவேற்கிறேன்

உங்களின் பதில் எதிர்பார்த்து
குமரகுரு

ஏன் இப்படி எல்லாம் யோசிகிறீர்கள்.... சரி எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்..

ஆண் என்று சொன்னால் அதில் அப்பா சகோதரன் கணவர் என்று எல்லோரையும் சொல்லலாம்..
சகோதரன் கணவரால் நல்ல‌ நிலமைக்கு வந்த‌ பெண்களை விட‌ அப்பாவால் நல்ல‌ நிலமைக்கு வந்த‌ பெண்கள் அதிகம்...அப்பாவோட‌ உதவி இல்லாமல் யாருமே எதையும் சாதித்து இருக்க‌ முடியாது..

வணக்கம்.வாழ்க்கையில் முன்னேர ஆனுக்கு பென்னும்.பென்னுக்கு ஆனும் அவசியம்.ஏனென்றால் இருக்கை தட்டினால்தான் ஓசை கேட்கும்.தோழி சொன்னமாதிரி.ஒரு பென்.தாய் தந்தையின் வழிக்காட்டுதல்தான்.அவள் நல்லபடியாக வளருகிறாள்.நல்லது கெட்டது கற்றுக்கொள்கிறாள்.அதுபோல திருமனத்துக்குப்பின் கணவரும் மனைவியும் ஒற்றுமையிருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேரமுடியும் குடும்பம் குழந்தைகளை நன்றாக வழிநடத்தமுடியும்.சகோதரரே இது எனக்கு தெரிந்தது.தப்பா ஏதும் சொல்லியிருந்தா சாரி

Allahu akbar

ஆண் வாழ்க்கையில் முன்னேறினா அவர்களுக்கு பின் பெண் இருப்பது போல,பெண் வாழ்க்கையில் முன்னேறினா அவர்களுக்கு பின் அப்பா,அன்ணன்,தம்பி இவர்கள் இருக்கலாம் திருமணத்திற்கு முன்,திருமணத்திற்கு பின் கணவர் இருக்கலாம்,எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்,தவறு இருந்தால் மன்னிக்கவும்.

//ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற அவள் மட்டுமே காரணமா அல்லது ஒரு ஆணும் காரணமா ?//
'முன்னேற்றம்' என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்! பிஸ்னஸ்!!! பொருளாதார வளர்ச்சி!! திருமணத்தின் பின்பான கல்வி அறிவு வளர்ச்சி!!!

//அவள் மட்டுமே காரணமா அல்லது ஒரு ஆணும் காரணமா//
எந்த முன்னேற்றத்திற்கும் 'அவள்' நிச்சயம் காரணம்.
ஒரு பழமொழி சொல்லுவாங்க... குதிரையைத் தண்ணிக்கு கூட்டிப் போய்க் காட்டலாம்; குடிக்க வைக்க முடியாது,' என்று. அந்தப் பெண், மனம் வைக்காவிட்டால், முழுமனதாக விடயத்தில் ஈடுபடாவிட்டால் & பாடுபடாவிட்டால் இன்னொரு அதி புத்திசாலியால் கூட அவளை முன்னேற வைக்க முடியாது.
~~~~~
இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை.... நிச்சயம் 'ஒரு ஆணும்' (சில சமயம் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களும்) காரணம் என்பதை மறுக்க இயலாது. நீங்க நினைக்கும் விதமாகச் சொல்லவில்லை இதை. குறிப்பிட்ட பெண் ஆயிரம்தான் திறமைசாலியாக இருந்தாலும் பச்சைக் கொடி காட்டும் கணவர் / அப்பா / சகோதரர்கள் இருப்பது முக்கியம் இல்லையா! அப்படியானவர்கள் அமையாது போனால் நிச்சயம் முன்னேற முடியாது. அமைந்தால்... ஆண்கள் உதவி செய்யாமலே கூட பெண் முன்னுக்கு வரலாம்.
~~~~~~
என் கருத்து இது குமரகுரு. ஆண்கள், பெண்களை விடப் புத்திசாலிகள் என்கிற அபிப்பிராயம் எனக்கு இல்லை. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். சில வீடுகளில், அந்த வீட்டுப் பெண்களால் மட்டுமே வீடு தலை நிமிர்ந்து நிற்பதைக் கவனித்து இருக்கிறேன். சில இடங்களில் ஆண், பெண் இருவரும் ஆளுக்கொரு திறமையை வைத்துக் கொண்டு இணைந்து செயற்பட்டுக் குடும்பத்தையோ பொருளாதாரத்தையோ மேலே கொண்டுவருகிறார்கள். ஆண்களை விடப் பெண்கள் எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்ல. இருவரும் இணைந்து போகும் வாழ்க்கைதான் சிறக்கும். அப்படி அமைவதுதான் உண்மையான முன்னேற்றம்.

அடுத்த தடவை இழை இழை ஆரம்பிக்கும் முன்னால் எந்தப் பிரிவில் ஆரம்பிக்கிறீர்கள் என்பதைச் சரிபார்த்துவிட்டு ஆரம்பியுங்கள் குமரகுரு. இது 'மூடப்பட்ட பிரிவுகள்' என்பதன் கீழ் வருகிறது. :-)
சாரி அட்மின் & டீம். ;( இனி இங்கே பதில் சொல்ல மாட்டேன்.

‍- இமா க்றிஸ்

nalla aan thunai moolam oru pen saathanai padaikka mudiyhum

kandippa teevai aanin thunai - athula oru aan munnera vendum yenral nitchayam oru pen thunaiyum tevai.

ஒரு பெண் முன்னேற அவளது மன உறுதி மட்டுமே காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல‌ ஆண் துணை கிடைக்கின்றது.அப்படி நல்ல‌ துணை கிடைத்தும் மன உறுதி இல்லை என்றால் ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

நன்றி
வடிவுசெந்தில்

thannampikaiyum thunivum thevai friends

கண்டிப்பகா ஒரு ஆண் துனை தெவை,வெறும் 10% மட்டும் தான் ஆண் உதவி,மீதி 90%பெண்களே தானகவே முன்னெறுவர்கள்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மேலும் சில பதிவுகள்