ஈஸி மக்ரோனி

தேதி: September 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

மக்ரோனி - 2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - ஒன்று
நசுக்கிய பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
மாசித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தண்ணீரில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் மக்ரோனியைப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய்த் தூளின் பச்சை வாசனை போனதும் தக்காளி சாஸ், சில்லி பேஸ்ட் மற்றும் மாசித் தூள் சேர்த்து பிரட்டவும். (தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்).
அத்துடன் வேக வைத்த மக்ரோனியைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும். (விரும்பினால் சிறிது மல்லித் தழை சேர்க்கலாம்).
டேஸ்டி & ஈஸி மக்ரோனி ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

Macroni chicken illama nan senjathilla masila ok senjupakren thanks

Allahu akbar

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கு நன்றி தோழி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஈஸி மக்ரோனி சூப்பர் ரெசிபியா இருக்கே விரைவில் செய்துட்டு சொல்லுறேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனி. செய்துட்டு சொல்லுங்க. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வீட்ல மக்ரோனி இல்ல உமா, பாஸ்தாவில் இதைப் போன்று செய்துப் பார்க்கிறேன். கலர்ஃபுல் டிஷ்

வருகைக்கு நன்றி வாணி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா