saree working

என்னுடைய‌ பட்டு சேரிக்கு ஸ்டோன் வொர்க் பண்ணலாம்னு இருக்கேன். எந்த‌ glue use ப்ண்ணலாம்னு சொல்லுங்கப்ப‌ ப்ளீஸ். FABRIC GLUE use பண்ணா ஊற‌ வைக்கும் போது ஸ்டோன் எல்லாம் தண்ணியோட‌ வந்துருது. அதனால‌ எந்த‌ glue use ப்ண்ணலாம்னு சொல்லுங்க‌.

ஸ்டோன் ஒட்டி நன்றாக காய்ந்த பின் பின்புறம் திருப்பி அயர்ன் செய்ய வேண்டும்....

துணிகளில் பயன்படுத்த fabric glue தான் பெஸ்ட்... அயர்ன் பண்ணிட்டா உரிந்து வராது

//FABRIC GLUE use பண்ணா ஊற‌ வைக்கும் போது ஸ்டோன் எல்லாம் தண்ணியோட‌ வந்துருது.// இதுல்லாம் ஊற வைக்கப்படாது சமத். (உங்கள் பெயரைச் சரியாகச் சொல்கிறேனா?)

ஸ்டோன் வைக்கும் போது அயர்ன் பண்ணாலும் கூட பிறகு ஊற வைக்க வேண்டாம். ட்ரை க்ளீனிங்தான் நல்லது. அல்லாவிட்டால் தேவையான இடத்தை மட்டும் க்ளீன் பண்ணுங்க. முழுவதும் கழுவ வேண்டுமானால் ஊற வைக்காமல் சட்டென்று கழுவி எடுங்க.

சுவரலங்காரம் அல்லது வேறு க்ராஃப்ட் என்றால் க்ராஃப்ட் க்ளூ / சூப்பர் க்ளூ பயன்படுத்தலாம். துணிக்கு ஃபாப்ரிக் க்ளூதான் பயன்படுத்த வேண்டும். அல்லாவிட்டால் துணி & அழகு கெட்டுப் போகும். அயர்ன் பண்ணுவதாக இருந்தால் துணியைப் பொறுத்து வெப்பநிலை செட் பண்ண வேண்டும். பின்பக்கம் ஒரு பேப்பர் போட்டு அயர்ன் பண்ண வேண்டும்.

‍- இமா க்றிஸ்

sorry, இமா அம்மா.நான் இப்போதான் நீங்க‌ அனுப்பியதே பார்தேன். நீங்க‌ சொன்னது ok. ஆனால் அந்த‌ glue வச்ச இடத்துல‌ தண்ணீர் பட்டால் வெள்ளையாக‌ தெரிகிறது. காயப்போட்டால் அந்த‌ ஸ்டோன் உதிர்ந்து விடுகிறது. அதற்குதான் என்ன‌ செய்வதென்றே தெரியவில்லை.

sorry, இமா அம்மா.நான் இப்போதான் நீங்க‌ அனுப்பியதே பார்தேன். நீங்க‌ சொன்னது ok. ஆனால் அந்த‌ glue வச்ச இடத்துல‌ தண்ணீர் பட்டால் வெள்ளையாக‌ தெரிகிறது. காயப்போட்டால் அந்த‌ ஸ்டோன் உதிர்ந்து விடுகிறது. அதற்குதான் என்ன‌ செய்வதென்றே தெரியவில்லை.

niga stone yeallathaium thache poduga ,yeanna nanum appadi than use pannuwean,niga oru murai ethu pool seathu parugal

தாமதமான பதில் தான். :‍)

//தண்ணீர் பட்டால் வெள்ளையாக‌ தெரிகிறது.// க்ளூ தரமானதாக இல்லை. கற்களைச் சேர்த்து வைத்து, துணி உலர்ந்த பின் திரும்ப ஒட்டலாம்.

இப்படியான வேலைப்பாடுகள் கொண்ட துணிகளை ட்ரை க்ளீன் செய்வது தான் நல்லது. அல்லாவிட்டால் கற்களின் மெருகு குறைந்துவிடும். அயர்ன் செய்வதும் சிரமம்.

கழுவிப் பயன்படுத்த நினைத்தால், மேலே சகோதரி சொன்னது போல, தைப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்