வாதம் நோய் பற்றி தெறிந்தவர்கள் உதவுங்கள்

வணக்கம் தோழிகளே... என் அம்மா‍‍‍‍‍விற்க்கு திடீர் திடீர்னு கால் கை முட்டி பகுதிகள் வீங்ஙி போகின்றது.. வலியும் இருக்கு.. உட்கார‌ வேலை செய்ய‌ மிகவும் சிரமப்படுகிறார். மருதுவரிடம் கான்பித்ததற்க்கு,வாதம் போல‌ உள்ளது என்று ஊசி போடுகின்றனர். 2 நாள் கழித்து மருபடியும் வந்துவிடுகிரது.55 வயதுதான் ஆகின்றது.. இதற்க்கு என்ன‌ வழி உள்ளது.. என்ன‌ செய்தால் இதற்க்கு நல்ல‌ தீர்வு கிடைக்கும்.. உதவி செய்யுங்கள்...

//55 வயதுதான் ஆகின்றது..// இதை விடக் குறைந்த வயதில் கூட வரும். குழந்தைகளுக்கும் வரலாம்.

எடை - சரியாக வைத்திருப்பது நல்லது.
உணவு - அவரது மருத்துவரிடமே கேட்கலாம். ஊரில் பழப்புளி ஆகாது; எலுமிச்சம்புளி சேருங்கள் என்பார்கள். இங்கு சிட்ரஸ் வகைகளைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். இன்னமும் சில உணவுகளைப் பற்றிச் சொல்லுவார்கள். இதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
எக்சர்சைஸ் - அளவோடு இருக்கட்டும். ஆனால் கட்டாயம் வேண்டும்.

//2 நாள் கழித்து மருபடியும் வந்துவிடுகிரது.// மறுபடியும் போய்க் காட்ட வேண்டும். அப்போதான் அவர்களுக்குப் புரியும். மருந்து மாற்ற வேண்டுமா, அல்லது வேறு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிப்பார்கள்.

நான் ஆரம்பத்திற்கு பனடோல் போடுவேன்; வைடமின் b எடுப்பேன்; ஐஸ்பாக் வைப்பேன்; ஜண்டு பாம் தேய்ப்பேன்; காலையில் படுக்கையை விட்டு இறங்குமுன் க்ரேப் பாண்டேஜ் போடுவேன். கொஞ்சம் காலை நீட்டி வைத்து ஓய்வு கொடுப்பேன். இரண்டு நாளில் சரியாகாவிட்டால் போய்க் காட்டுவேன்.

பிரச்சினைக்குரிய இடத்தைக் குளிர் படாமல் வைத்திருப்பது நல்லது. இப்படி இருக்கும் போது கூடவே காய்ச்சல் இருந்தால் பின்போடாமல் உடனே போய்க் காட்டுங்க.

//என்ன‌ செய்தால் இதற்கு நல்ல‌ தீர்வு கிடைக்கும்.// அது தெரியாது. அப்பப்ப விசிட் பண்ணுகிறார்; போய்விடுகிறார். சில சமயம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 'பிடிவாதம்' என்கிற வார்த்தைக்கு அடிப்படை இந்த நோய்தானோ என்று கூட நினைத்திருக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

உங்க பதிவை மொபைலில் இருந்து பார்த்துட்டு தான் சிஸ்டமே ஆன் பண்ணிருக்கேன் இன்னைக்கு... ஏன்னா இதை பற்றி எனக்கு கொஞ்சம் மேட்டர் தெரியும்னு நினைக்கிறேன்.

//என் அம்மா‍‍‍‍‍விற்க்கு திடீர் திடீர்னு கால் கை முட்டி பகுதிகள் வீங்ஙி போகின்றது.. வலியும் இருக்கு..// - ஆக உங்களுக்கு அது எதனால் என்பது தெரியாது. வாதம் என நீங்களா தான் நினைக்கிறீங்க? இல்ல உங்க மருத்துவர் அப்படி நினைக்கிறார்.

//55 வயதுதான் ஆகின்றது// - அதெல்லாம் மேட்டரே இல்ல... என் தந்தைக்கு கடந்த 10 வருஷமா மூட்டு வலி இருக்குங்க. இப்ப தான் அவருக்கு 60 ஆகுது. மனுஷன் இரண்டு முறை படு மோசமான நிலைக்கு போனார். பெட் விட்டு எழ முடியாத அளவுக்கு. இத்தனைக்கும் அவரெல்லாம் லீவ் நாள் கூட தவறாம ஜிம் போற ஆளு. அவ்வளவு ஆக்டிவா இருக்கிறவரை இத்தனை வருடமா பல மருத்துவர்கள் பார்த்துட்டு “முடக்கு வாதம்” என்று சொல்லி மருந்தா கொடுத்தாங்க. எந்த மருந்திலும் வலி குறைந்ததே தவிற முழுமையா குணமாகல. இப்போ சில மாதம் முன் மீண்டும் படு மோசமா அதிகமாச்சு. இம்முறை மியாட் போனார். அங்க தான் முழுமையான பரிசோதனை பண்ணி அது என்ன வகையான மூட்டு வலி, என்ன டைப் ஆஃப் ஆர்த்தரடீஸ்னு கண்டு பிடிச்சாங்க. இதுவரை எந்த மருத்துவர் இதை பண்ணலன்றது எங்களுக்கு ஆச்சர்யம் தான்.

ஆர்த்தரிட்டீஸ்ல பல வகை இருக்கு... அது என்ன வகை என்று கண்டு பிடிச்சு அதுகு ஏற்ற மருந்தும், அதுக்கு ஏற்ற உணவு முறையும் கடை பிடிச்சா விரைவில் வீக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு வரலாம். அப்பாவுக்கும் உங்க அம்மா போல மூட்டு வீக்கம் தான். இப்போ உணவை அந்த நோய்க்கு ஏற்ற மாதிரி மாற்றி ஓரளவு நடமாடுறார்.

அதனால் என் சஜஷன் இது தாங்க... நல்ல மருத்துவரை பாருங்க. என்ன வகையான மூட்டு வலி இது, எதனால் வருகிறது என்பதை முதலில் கண்டு பிடிச்சு அதுக்கு ஏற்ற வைத்தியம் பாருங்க. இல்லன்னா இது இப்படி வலி குறைவதும், திரும்ப வருவதும் என காலத்துக்கும் கூடவே வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Padhil pottathukku mikka nandri. Netru husband laptop la connect panninathala tamil il type pannen. Innaikku mobile moolamaaga pandren. So mannikkavum.. akka en amma vidamal hospital poittuthaan irukkanga.. amma alavukketra udambuthaan iruppanga. Actually ammakku idharkku mun sariyaga digest aagamal konjam kaaram saaptalum loosemotion aayidum.vayiru fulla punnaga iruppadhai scan moolama kandu pidichu atharkaga treatment eduthanga.doctor curd (thayir) dailyum saappida sonnanga.6 month aanadhu sariyaga.ippo idhu sariyaanathukku apparamthaan intha problem. Pulippu niraya serththu kondathaal ippadi aagittathunu dr sonnanga... ok akka itharkku endha vagayana doctor I paarka vendum.. pls udhavungal..

Rheumatologist paarunga. Enna type of arthritis nu diagnosis romba mukkiyam.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்