பேன் தொல்லை

என் பொன்னுக்கு தலைல ரொம்ப பேன் இருக்கு அதை எப்படி போக்குவது எதாவது மருந்து இருந்தால் சொல்லுஙல் please

துளசி இலையை தலையணை மீது போட்டு,அதன் மீது துணி விரித்து படுத்துறங்கினால் பேன்கள் ஓடிவிடும்.

சீத்தாபழ கொட்டையை அரைத்து தலைக்கு தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்கவும் இப்படி செய்தால் பேன்கள் நீங்கிவிடும்.

நம்ம வீட்டுலயும் இதே புலம்பலா இருக்கு. பாப்பா தலை முழுக்க இருக்காம்.

//துளசி இலையை தலையணை மீது போட்டு,அதன் மீது துணி விரித்து படுத்துறங்கினால் பேன்கள் ஓடிவிடும்./

வித்தியாசமான ட்ரீட்மெண்ட்டா இருக்கு. இதுக்கு பதிலா துளசியை நேரடியா தலைக்கு தேச்சி குளிச்சா இன்னும் பெட்டரா இருக்காதா? அதில எதுவும் பிரச்சனை வருமா?

துளசி, சீத்தாப்பழம் ரெண்டுமே வீட்டுக்கொல்லையில இருக்கு. ட்ரை பண்ணிப் பார்த்துட்டு ரிசல்ட் சொல்றேன்.

நாட்டு மருந்து கடையில என்னவோ சின்னச்சின்னதா வாங்கி எண்ணெயில போட்டு வச்சு முன்னாடி ஒருத்தங்க கொடுத்தாங்க. அதில சுத்தமா பேன் போச்சாம். இப்ப அந்த ஆளை பிடிக்க முடியலை. அது என்னன்னும் தெரியலை.. யாருக்காவது ஐடியா இருக்கா?

சின்னவர்கள் என்றால் இது ஒரு பிரச்சினைதான். சேர்ந்து விளையாடும் போது தொற்றிக் கொள்வார்கள்.

//துளசி இலையை தலையணை மீது// சின்னதுல ட்ரை பண்ணி இருக்கிறேன். ஓடினது. ஆனால் கட்டிலில்தான் இருக்கும். வேறு ஆட்களுக்குத் தொற்றலாம்.

//துளசியை நேரடியா தலைக்கு தேச்சி குளிச்சா இன்னும் பெட்டரா இருக்காதா? அதில எதுவும் பிரச்சனை வருமா? // ஏதோ பத்திரிகையில் படித்துவிட்டு ஒரு முறை துளசி இலையையும் வேரையும் சம அளவு எடுத்து அரைத்துத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். வேலை செய்தது. கூடவே செடியும் காலி. :-)

மண்ணெண்ணெய் - வேலை செய்யும். ஆனால் பாதுகாப்பு இல்லை.
சில மருந்துகள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவை நாட்டு மருந்துகள் அல்ல. முக்கியமான பிரச்சினை... எங்கிருந்து / யாரிடமிருந்து தொற்றிற்றோ அவர்களும் சிகிச்சை எடுக்காவிட்டால் மீண்டும் மீண்டும் தொற்றப் போகிறது. வீட்டிலும் ஒவ்வொரு சிகிச்சையின் போதும் படுக்கை தலையணை எல்லாம் சுத்தம் செய்யாவிட்டாலும் பலனிராது.

‍- இமா க்றிஸ்

இது ஒரு பெரிய‌ பிரச்சனையே இல்லயே,

ம்ம் பாபு அண்ணா உங்க‌ வீட்லேயுமா?

\\\மண்ணெண்ணெய் - வேலை செய்யும். ஆனால் பாதுகாப்பு இல்லை\\\ கண்டிப்பா ரொம்ப‌ கெடுதலும் கூட‌,

வேப்ப இலையை அரைச்சு 15 நிமிடம் ஊறவச்சு கழுவினா பேன்கள் செத்துபோய்டும், மாதத்தில் 2 தடவை செய்தாலே போதும்,

வேற‌ எதுவும் இன்பெக்ஸஷன் இருந்தாலும் சரி ஆகிடும்......
ரொம்ப‌ நல்லது முடி உதிர்தலும் குறையும், எந்த‌ பக்க‌ விளைவுகளும் கிடையாது......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி சொன்ன‌ மாதிரி வேப்பிலை ட்ரீட்மெண்ட் நல்ல‌ பலனளிக்கும்.
அப்புறம் துளசி இலையை மெல்லிய‌ துணியில் தலையணை மாதிரி செய்து அதை தலைக்கு வைத்து நாலைந்து நாள்கள் படுக்கலாம். நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்
போயே போச்சு

\\ சீத்தாபழ கொட்டையை அரைத்து தலைக்கு தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்கவும் இப்படி செய்தால் பேன்கள் நீங்கிவிடும் \\

இதில் கொஞ்ச‌ம் கவனம் தேவை. இது தவறி கண்களில் பட்டுவிட்டால் கண்கள் சிவந்து மிகவும் கஷ்டமாகிவிடும் என்று கேள்வி. அதுவும் சிறு குழந்தைகள் வேறு. மிகுந்த‌ கவனம் தேவை.

வேப்பிலை ட்ரீட்மெண்ட், துளசி ட்ரீட்மெண்ட், துளசியைப்ப் போல‌ மருதாணிப்பூவும் பெஸ்ட். ஆனால், பேன்கள் முழுவதுமாக‌ தீரும் வரை தொடரவேண்டும். இல்லையென்றால், அதன் முட்டைகள் மறுபடியும் பொரிந்து பிரச்னைகள் கன்டினியூ ஆகும்.

சின்ன பிள்ளையில் அம்மா வேப்பிலை & துளசி சேர்த்து அரைச்சு ஊசி ஊற விட்டு தலைக்கு குளிக்க வெச்சதும் தலை ரொம்ப காயும் முன் பேன் சீப்பு போட்டு சீவிடுவாங்க. மயக்கமா இருந்தாலும் வந்து விழுந்துடும். மெடிகர் கூட நல்ல பலன் தரும். பேன் போனாலும் கொஞ்ச நாள் இதை எல்லாம் தொடரணும், யாரிடம் இருந்தும் பேன் தொத்தாம இருக்க இந்த வேப்பிலை வாடை உதவும். பூ வெச்சு பள்ளிக்கு அனுப்பாதீங்க, அதுவே அதிகமா பேன் வர காரணம். இல்லன்னா பெஸ்ட்... என்னை மாதிரி பேன் வர வாய்ப்பில்லாத அளவுக்கு குட்டி முடி ;) பல வருடமாச்சு பேன் எல்லாம் கண்ணில் பார்த்து. பள்ளி காலத்தோட போயே போச்சு... முடியும் பேனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks Kiruthiga mam

சொல்ல‌ மறந்துட்டேன், எங்க‌ அம்மா சொல்வாங்க‌
வேப்பிலை நல்ல‌ குளிர்ச்சினு,

அதனால‌ சின்ன‌ பிள்ளைங்க‌ வேப்பிலை தேய்த்து குளித்ததும்
10 நிமிசம் வெயில் ல‌ காய‌ வைக்க சொல்லனும்,
இல்லைனா சளி பிடிக்கும்....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பேன் தொல்லையால் அவதிப்படும் குழந்தைக்களுக்கு சின்ன வெங்காயம் 2 அல்லது பூண்டை தோலுரித்து தலைமுடிக்குள் வைத்து கொண்டைபோல கட்டி விடுங்கள் சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்,பேன் காணாமல் போகும்.

மேலும் சில பதிவுகள்