ஸ்வீட் டொமேட்டோ

தேதி: September 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

தக்காளி - 4
சீனி - அரை கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி
திராட்சை
கலர் பவுடர் - ஒரு சிட்டிகை


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை உடைத்து வைக்கவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டுக் கிளறவும்.
பிறகு சீனி மற்றும் கலர் பவுடர் போட்டு நன்கு கிளறவும்.
6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பாகு போல வந்ததும் இறக்கிவிடவும்.
டேஸ்டி ஸ்வீட் டொமேட்டோ ரெடி.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டிஷ் சூப்பர் அன்ட் சோ கலர்ஃபுல் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்க ரெசிப்பிஸ் நிறைய நல்லா இருந்திருக்கு மேடம். நிறைய இஸ்லாம் தோழிகள் இதைப் போன்று தக்காளி ரெசிப்பி போட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஒரு முறை செய்து பார்க்கிறேன்.
இது எந்த டிஷ் கூட கம்பைன் பண்ணும், தெரிந்தவங்க பதில் போடுங்க தோழிகளே.

கலர்புல் அன்ட் டேஷ்டி ஈஸி குறிப்பு....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இது அனைத்து வகை பிரியாணி, நெய்சோறு, பகாரா கானா என்கிற தாளிச்சோறு உடன் கம்பைன் பண்ணி சாப்பிடுவார்கள், மேலும் பிரிஞ்சி ரைஸ், குஸ்கா போன்றவற்றிற்கும் கூட கம்பைன் பண்ணி சாப்பிடலாம், சில ஊர்களில் இனிப்பு பச்சடி, தக்காளி பச்சடி என்று அழைப்பார்கள், பொதுவாக இஸ்லாமிய திருமணங்களில் இறைச்சி பிரியாணியுடன் இந்த தக்காளி பச்சடி, வெங்காய தயிர் பச்சடி, கத்தரிக்காய் பச்சடி, தாளிச்சா கம்பைன் செய்வது வழக்கம்.

உங்களின் தெளிவான, விளக்கமான பதிலுக்கு நன்றி. அவசியம் பிரியாணியுடன் செய்து பார்க்கிறேன்.