
ஒரு ஊர்ல நாகலிங்கம் நாகலிங்கம்னு அன்பே உருவான ஒருவர். அவருக்கு பாரிஜாதம் பாரிஜாதம்னு அழகான மனைவி. அவங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.
ஆண்மகவுக்கு மயில்மாணிக்கம்னும், பெண்மகவுக்கு செந்தாமரைனும் அழகான பேர்.
ஒருநாள் செந்தாமரைக்கு பிறந்தநாள் வந்துச்சு. மயில்மாணிக்கம் தன் அக்காவிற்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க விரும்பினான்.
அதற்காக தன் சிறுசேமிப்பு பணத்திலிருந்து அக்கா தாமரைக்கு அழகான கைக்கடிகாரம் வாங்கித்தர எண்ணி, தன் தந்தை நாகலிங்கத்திடம் கூறினான்.
ஆனால் நாகலிங்கமோ அதெல்லாம் வேண்டாம், ஏற்கனவே இருக்கும் கைக்கடிகாரங்கள் போதும். அதுவுமில்லாம இந்த சின்ன வயசில சேமிப்பு பற்றி மட்டுமே எண்ணவேண்டுமே ஒழிய, ஆடம்பர செலவைப்பற்றி எண்ணக்கூடாது என்று எடுத்துக்கூறினார்.
வேண்டுமானால் கைப்பட தயாரித்த வாழ்த்து அட்டைகளோ, பிற கைவினைப்பொருட்களையோ, அம்மா பாரிஜாதம் அடிக்கடி பார்க்கும் வலைத்தளத்திலிருந்து கற்றுக்கொண்டு பரிசளிக்குமாறு கூறினார்.
ஆனால் அந்த நேரத்தில் மயில்மாணிக்கத்தின் பிடிவாதமே வென்றது.
நாகலிங்கமும் மயில்மாணிக்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அவனையும் அழைத்துச்சென்று அழகான கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினார்.
அதை மகள் செந்தாமரையின் பிறந்தநாள் அன்று பரிசளித்தனர்.
அக்கா செந்தாமரைக்கோ கொள்ளை மகிழ்ச்சி. அதை அன்றே பள்ளிக்கு அணிந்து சென்றார்.
அடுத்தடுத்த நாட்களும் அணிந்து சென்றார்.
மொத்தம் நான்கு நாட்கள் கழிந்த நிலையில், அம்மா பாரிஜாதம் , 'எதற்கு இதெல்லாம் போட்டுச்செல்லணும், இன்றிலிருந்து அணிந்து செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் பிடிவாதமாக இன்று மட்டும் அணிந்து செல்கிறேன். பிறகு வாரத்தில் மூன்று நாட்கள் அணிந்து செல்கிறேன் என்று கூறினாள் செந்தாமரை.
அன்று ஆசிரியர் தினம் என்பதால், அதனையே அணிந்துகொண்டு செல்வேன் என சென்ற மகளை கண்டிக்க முடியாமல் திண்டாடினார் அம்மா பாரிஜாதம்.
எது நடந்துவிடும் என நினைத்து அம்மா பாரிஜாதம் அஞ்சினாரோ, அதே போல் கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டது.
ஆசிரியர் தினத்துக்கு கேக் வெட்டி கொண்டாடியதால் கைகளில் அப்பியிருந்த கேக்கை கழுவும் பொழுது கடிகாரத்தை கழட்டி வைத்ததாகவும், பிறகு அங்கேயே விட்டு வந்ததாகவும்.
அரைமணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது காணவில்லை எனவும் கூறி அழுத மகளை தேற்றவும் முடியாமல் இரண்டு போடவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார் அம்மா பாரிஜாதம்.
பாரிஜாதம் மனதில் சிறு வயதில் அழிப்பானை (வாசனை நிரம்பியது, அழகிய வண்ணங்களை உடையது) ஒரு தோழியிடம் கொடுத்துவிட்டு, பிறகு அவர் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டபடியால் அழிப்பானை நினைத்து ஊண், உறக்கமின்றி தவித்த நினைவு மேலோங்கியது.
பள்ளிக்கு தேவை இல்லாமல் ஆடம்பர பொருட்களை அணிந்துசெல்வது ஆபத்து.
ஆடம்பரம் இன்றியோ, இல்லாதிருந்தாலோ அடுத்தவர் பொருளை மனதாலும் கவர நினைப்பது மாபெரும் குற்றம்.
எடுத்தவர் துப்புரவாளர் சாமந்தி என்று செந்தாமரையின் தோழி ரோஜாவும், இல்லை வேறு வகுப்பு மாணவி என்று இன்னொரு தோழி முல்லையும் கூறினார்களாம். ஆனால் நம் மனம் நோவது என்னமோ நம் குழந்தையின் அஜாக்கிரதையை எண்ணித்தான்.
இதற்குத்தான் அந்தக்கலந்தொட்டே சொல்வார்கள்" தீதும் நன்றும் பிறர் தர வாரா".
மனதினை தேற்ற உள்ளூர சொல்லிக்கொள்வது என்னவென்றால், "ஏதோ கெரவம் இருந்திருக்கும் போல அது இதுல போய்ருச்சு" அடிக்கடி என் பாட்டி சொல்லிக்கொள்ளும் வரிகள் இவை.
நமக்கு இல்லை அந்த வாட்ச், யாருக்கோ வாங்கியது இப்படிலாம் நினைச்சு, ஆறுதல்படுத்தி தேற்றிக்கொள்கிறேன் புண்பட்ட மனதை.
வாங்கிக்கொடுக்கும் போது ஆயிரம் அறிவுரைகள் சொன்ன அப்பா நாகலிங்கமோ, தொலைந்த உடனே மகளை திட்டாமல் சரி விடு, இனிமே இதுமாதிரி கொண்டு போய் தொலைச்சிட்டு அழாதே என்பதாக மட்டுமே இருந்தது.
ஆனால் பாரிஜாதமோ தூக்கத்திலும் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.
உங்ககிட்டயும் ஏதேனும் கதை இருந்தா சொல்லுங்க கேட்கலாம். நிஜமல்ல, கதைதான் கேட்கிறேன் :))
பின்குறிப்பு: இக்கதையில் எத்தனை பூக்களின் பெயர் வந்துள்ளது என்று கூறுங்கள் பார்க்கலாம்.
Comments
கத, நிஜ கத.
கத நல்லா இருக்கு சிஸ்டர். ஆனா உங்களையும் மீறி நிஜம் வந்திடுது. \\நமக்கு இல்லை அந்த வாட்ச், யாருக்கோ வாங்கியது இப்படிலாம் நினைச்சு, ஆறுதல்படுத்தி தேற்றிக்கொள்கிறேன் புண்பட்ட மனதை\\ விடுங்க, விடுங்க விளையாட்டு பிள்ளைங்க அப்படிதான் இருக்கும்.
உன்னை போல் பிறரை நேசி.
க்றிஸ்
க்றிஸ் கடசி வரை பாரிஜாதம்தான் அப்ப்டி நினைச்சுக்குறாங்கனு நீங்க நினைச்சுக்கணும்.
என்னையும் மீறி நிசம் வந்துடுச்சா? நிசமாத்தான் சொல்றீங்களா?:))))
மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
"ஏதோ கெரவம் இருந்திருக்கும் போல அது இதுல போய்ருச்சு"//
போகட்டும் விடுங்க அருள்
மயில்மாணிக்கம்,பாரிஜாதம், நாகலிங்கம், செந்தாமரை, ரோஜா, முல்லை சரியா?
ஆஹா..
மிகச்சரி :)எழுதினப்புறம்தான் இன்னும் கொஞ்சம் க்ரியேட்டிவா திங் பண்ணி இருக்கலாமோனு தோணுச்சு. இன்னும் பூக்களின் பெயர்களை சேர்த்திருக்கலாம். எங்க பதிவு போட்டப்புறம்தான் கற்பனை குதிரைக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்குது.
மிக்க நன்றி நிகி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்,
கதை மணம் வீசி மனம் கவர்ந்துவிட்டது. ரொம்ப அருமையா இருக்கு. பூக்கள் எத்தனை? 7. நிகி சாமந்தி காணாமல் போயிட்டாங்கபோல. அப்ப அவுகதா அந்த கைகடிகாரத்தை எடுத்திருக்கனும்.
சாமந்தி எங்கே
ரொம்ப நல்லா இருந்தது.
அன்புடன்
ஜெயா
ரேணு
ரேணு வாங்க, ஆமால்ல சாமந்தி எங்க? பாத்தீங்களா, சாமந்திய இடையில வரச்சொன்னது நிகிலா கவனிக்கவே இல்ல.
//அப்ப அவுகதா அந்த கைகடிகாரத்தை எடுத்திருக்கனும்.// தெரிலப்பா, நிச்சயமா தெரியாம யார்மேலயும் பழி சொல்லவே முடியாது.
மிக்க நன்றி ரேணு :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஜெயா
ஜெயா சாமந்தி அங்கேதான் இருக்காங்க.. ஹீ ஹீ.. சாமந்திய விட்டுப்போட்டாங்க, இந்த மேலே இருக்கும் ஹீ ஹீ அதைக்கவனிக்காமலே சரினு சொன்னதுக்கு :))
ஜெயா மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சாமந்தி
அட ஆமா விட்டுப் போச்சு.
பாவம் அவங்களை விட்ருவோம். இல்லாத பழியை சொல்லிறக் கூடாதில்லியா?
Arul
Sari vidunga arul.. Pavam senthamarai, parijathathai parkum bothu Amma sonnatha ketrukkalamenu oru guilt feeling irukkum :(
Kalai
அருள்
சம்பவம் சொன்ன விதம் அருமை. அதெப்படி அருள் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் பெயர்கள் யோசிக்க தோணுது :) பாரிஜாதம், மயில் மாணிக்கம் இதுவும் பூவின் பெயர்கள் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
\\ஆனால் பாரிஜாதமோ தூக்கத்திலும் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்//
இது அகில உலக மங்கையருக்கே உரிய குணமோ என்று நினைத்துக் கொண்டேன் :-)
arul
Watch azagu :( naanum feel panraen andha watch kanama pochenu.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருள் அக்கா,
கதை சொன்ன விதம் அருமை,
எப்படி இப்படி சோகத்திலேயும் காமெடி பண்றீங்க.......
பாப்பாவே ரொம்ப பீலிங்க ல இருக்கும் அதை திட்டி கஸ்டபடுத்தாததுக்கு தான்க்ஸ்,
என்ன பாசமலர் பாசத்தோட வாங்கி கொடுத்தது,
காணா போனதுனால எவ்ளோ வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது உடன்பிறப்பை .......
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
kalai
கலை மிக்க நன்றி :)
//Pavam senthamarai, parijathathai parkum bothu Amma sonnatha ketrukkalamenu oru guilt feeling irukkum :(// வராமல் இருக்கத்தானே பாட்டி சொன்ன விசயம்லாம் சொல்றது. சின்ன வயசில பெரும்பாலும் எல்லாரும் எதிர்நோக்குற ஒரு விசயம்தானே கலை. பொருட்கள் வேணா வேறாக இருக்கலாம். அதிலிருந்து ஒரு கற்பிதம் கண்டிப்பா கிடைக்கும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாணி
வாணி// பாரிஜாதம், மயில் மாணிக்கம் இதுவும் பூவின் பெயர்கள் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.// மயில்மாணிக்கம் விதை முளைக்கபோட்டிருக்கேன். பாரிஜாதம் நானும் பார்த்ததில்லை :))))
//இது அகில உலக மங்கையருக்கே உரிய குணமோ என்று நினைத்துக் கொண்டேன் :-)// சின்ன கண்ணாடி பொருள் உடைந்தாலும் கூட அந்த நிமிசம் மனம் வருந்தாமல் இருக்காது.
மிக்க நன்றி வாணி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனி
வனி இங்கே பள்ளியில் காணாம போன பொருட்கள் கிடைத்ததும் உண்டு :)) மிக்க நன்றி வனி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சுபி
சுபி பாராட்டுக்கு மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாட்ச் வாட்சிங் ;)
அருள்... நான் சொல்ல நினைச்சது எல்லாம் ஏற்கனவே மற்றவங்க கமண்ட்டா போட்டாச்சு. உண்மை, பூக்கள் etc. :-)
முதல் முதல் கைல மணிக்கூடு கட்டினது 70ல். அது முதல் இது அத்தியாவசியமான விஷயமாவே இருந்து இருக்கு எனக்கு. இங்க வந்த பின்னால ஒன்று தொலைஞ்சு போச்சு. எங்கயோ சேஞ்சிங் ரூம்ல அளவு சரியில்லாமல் திருப்பிக் கொடுத்த துணியோட என்னை அறியாமல் போயிருக்கணும். ;(
தொலைஞ்சதைப் பற்றி யோசிக்காதீங்க. இது தங்கம் இல்ல. ஓடினாத்தான் பெறுமதி. கட்டாம இருந்தாலும் கூட பாட்டரி இறங்கும். பிறகு மாத்த நினைச்சா... இங்க தனி பாட்டரி விக்குற விலைக்கு புது வாட்ச் வாங்கலாம். நான் பத்திரமா வைச்சு இருந்தது எல்லாம் ஒரு நல்ல நாள் என்று எடுக்கும் போது ஓடாமலேதான் இருந்து இருக்கு. டம்மி வாட்ச் - கட்ட முடியாது இல்ல! ;( யூஸ் பண்ணி பிறகு தொலைக்கிறது பெட்டரா, யூஸ் பண்ணாமலே... வீணாகுறது பெட்டரா!
எல்லா வாட்சையும் விடுமுறைக்கு இலங்கைக்குப் போனப்ப கொண்டு போய் பாட்டரி மாற்றி வந்தேன். இப்போ மாற்றி மாற்றிக் கட்டுறேன். உடைஞ்சாலும், தொலைஞ்சாலும், 'பாவிச்சு ரசிச்சேன்,' என்கிற சந்தோஷம் நிச்சயம் மீதி இருக்கும். ஆசையா வாங்கிக் கொடுத்தவங்க மனசும் சந்தோஷப்படணும் இல்ல! வாட்ச் பண்ணிட்டே இருந்தாலும் இருப்பாங்க. :-)
- இமா க்றிஸ்
அருள் அக்காங்,
கதையில் வரும் பெயர்கள் ரொம்ப நல்லாயிருக்குங்க..
சிறுவயதில் தொலைத்த பொருட்கள் குறைவுதான் என்றாலும்
நிறைய நாட்கள் வருந்தியிருக்கிறேன் நானும் :-(
நல்ல பதிவுங்..
நட்புடன்
குணா
செல்வி
// பாரிஜாதம் நானும் பார்த்ததில்லை :)))) // நீங்க பாத்திருப்பீங்க. பவழ மல்லி என்று சொல்லப்படும் மலர்தான் பாரிஜாதம். பூக்கள் வெள்ளை நிறமுடனும், காம்பு ஆரஜஞ்சு நிறமுடனும் இருக்கும். இரவில் பூத்து காலையில் உதிர்ந்துவிடும். மிகுந்த மணமுடையது.
அன்புடன்
ஜெயா
தொலைந்ததும் கிடைத்ததும்
அன்பு அருள்,
//இதற்குத்தான் அந்தக்கலந்தொட்டே சொல்வார்கள்" தீதும் நன்றும் பிறர் தர வாரா".
மனதினை தேற்ற உள்ளூர சொல்லிக்கொள்வது என்னவென்றால், "ஏதோ கெரவம் இருந்திருக்கும் போல அது இதுல போய்ருச்சு" அடிக்கடி என் பாட்டி சொல்லிக்கொள்ளும் வரிகள் இவை.//
ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க.
எத்தனையோ பொருட்கள் தொலைஞ்சு போயிருக்கு. தெரிந்தே மத்தவங்க எடுத்துகிட்டதைப் பார்த்திருக்கேன். இதில் ஒரு விஷயம் என்னன்னா, இல்லாதவங்க எடுத்துக்கிட்டா பரவாயில்ல, வேணும்னே நம்மைக் கடுப்படிக்கறதுக்காக, எடுத்துக்கிட்டவங்களும் உண்டு. திருப்பிக் கேட்கத் தயங்கி, அப்படியே விட்டுடுவேன். அதையெல்லாம் நினைக்கிறப்ப, எனக்கே என் மேல கோவமா வருது:(
நல்ல கதை, நல்லா எழுதியிருக்கீங்க.
மலர்களின் பெயர் வச்சிருக்கறது நல்லா இருக்கு.
பல பல வருஷங்களுக்கு முன்னாடி, குரும்பூர் குப்புசாமி அப்படின்னு ஒரு எழுத்தாளர் 'ராணி' பத்திரிக்கையில் தொடர்கதைகள் எழுதுவார்.
கதாபாத்திரங்களுக்கு, மலர்விழி, கயல்விழி, தேன்மொழி, இந்த மாதிரிதான் பெயர் வச்சிருப்பார். அந்த நினைவு வந்தது.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா...
;)) நானும் விழுந்து விழுந்து படிச்சிருக்கேன். மறந்து போச்சு எல்லாம். திடீர்னு நினைப்பு வராமல் வருது... அந்த... ஒருத்தர் தலையை இன்னொருத்தர் கழுத்துல ஒட்டுற எழுத்தாளர் யார்! இவர்தானா சீதா!!
- இமா க்றிஸ்
அவரேதான் இவரு இவரேதான் அவரு
அன்பு இமா,
ஆஹா, என்னை மாதிரியே நீங்களும் அந்தக் கதையை ஞாபகம் வச்சிருக்கீங்களே.
எக்ஸாட்லி, நானும் அந்த தலையை மாத்தி ஒட்டுற கதையைத்தான் இப்ப நினைச்சுட்டு இருந்தேன்.:) அந்தக் கதைய எழுதினது குரும்பூர் குப்புசாமிதான்.
அந்தக் கதை செம ஹிட் அப்ப.
குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன், ரமணி சந்திரன் எல்லாம் 'ராணி' பத்திரிக்கையின் ஆஸ்தான எழுத்தாளர்கள்.
இன்னும் சொல்லப் போனா, ரமணி சந்திரனை விட மத்த ரெண்டு பேரும்தான் பிரபலம் அப்ப,
அன்புடன்
சீதாலஷ்மி
அருள்
அருள் அழகான கதை கதாபாத்திரங்களுக்கு மலர்களின் பெயர் வைத்திருப்பது மிக அருமை :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
இமா
இமா, //மணிக்கூடு // அழகான தமிழ்வார்த்தை, இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். மணிக்கூண்டுதான் தெரியும். அறிமுகத்திற்கு மிக்க நன்றி :)
//தொலைஞ்சதைப் பற்றி யோசிக்காதீங்க. இது தங்கம் இல்ல. ஓடினாத்தான் பெறுமதி.// சிலசமயம் சும்மா இருக்கமுடில, தங்கத்திற்கும் இதே நிலமை வந்துடுமோனு ஒரு பயம்கவ்விய சிறு கோபம் அவ்வளவுதான் (எல்லா அம்மாக்கும் வருவதுதானே) சிலது கதைக்காக மிகையூட்டப்பட்டு சம்பந்தபட்டவர்களிடம் :)) அனுமதி பெற்ற பின்பே வந்த பதிவுதான் இது இமா :))
தோழிகளும் , நீங்களும் கூறுவது புரிந்துகொண்டேன். இங்கு வந்த பின்னூட்டங்களும் படிக்கவைத்தேன் :)) ஒரே மகிழ்ச்சி, இத்தன பேர் சப்போட் பண்ணா பின்ன சும்மா இருக்குமா:))
//;( யூஸ் பண்ணி பிறகு தொலைக்கிறது பெட்டரா, யூஸ் பண்ணாமலே... வீணாகுறது பெட்டரா! // யூஸ் பண்ணி தொலைக்கிறதுதான் சாலச்சிறந்துங் டீச்சர் :)
//ஒரு நல்ல நாள் என்று எடுக்கும் போது ஓடாமலேதான் இருந்து இருக்கு.// சரியா எக்ஸாம் ஹால்ல நின்னுடும், நான் அனுபவிச்சிருக்கேன் .
நீங்க சொல்ற வாட்ச் நானும் பார்த்தனே, என்கிட்ட அதே மாதிரி கோல்டன் கலர்ல இருக்கே.. கல்லுவெச்சிருக்குமாக்கும்.
மிக்க நன்றி இமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
குணா
பாராட்டிற்கும், பதிவிற்கும் மிக்க நன்றி குணாதம்பிங் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
jeya
ஜெயா பவழ மல்லி பார்த்திருக்கேன், ஆனா பாரிஜாதம் வேறாமே.. இங்க ஒரு அம்மா சொன்னாங்க. பாரிஜாதம்னு பூ இல்லேனு சொன்னதுக்கு இருக்குனும் சொன்னாங்க. நீங்க சொல்லியிருக்கும் இந்த விசயத்தை சொல்லவும். பூ இருக்கு கொண்டுவாறேனு சொன்னாங்க. ஆனா இன்னும் கொண்டுவரல. அப்படி கிடைச்சா போட்டோ போடுறேன். நாகலிஙகப்பூவும் அவங்க வீட்டு பக்கத்தில பூக்கும் கொண்டுவரேனு சொல்லி இருக்காங்க.
பவழமல்லி பக்கத்து வீட்ல வெளில வெச்சிருக்காங்க ஒரு குட்டி மரமா நிக்குது. இரவு நேரத்தில நீங்க சொன்னது போல மிகுந்த மணம் வீசும்.
மிக்க நன்றிங்க ஜெயா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சீதாமேடம்
சீதா மேடம், பொருள் தொலைந்து போனால் அப்படி சொல்வாங்க. அதுவே மறுபடி கிடைச்சிட்டா, போன கெரவம் திரும்பி வந்துடுச்சானு கேட்டோம்னு வெய்ங்க, என்னதான் இருந்தாலும் நாம கஷ்டப்பட்டு வாங்கின பொருள் எங்க போனாலும் கைக்கு வந்துடுச்சு பார்த்தியானு சொல்லி சந்தோசப்படுவாங்க. எண்ணங்களை திசைதிருப்பும் முயற்சிய அப்பலாம் நல்லாவே கையாண்டு இருக்காங்க.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுங்கிறது போன்றவைலாம் அப்படி வந்ததுதானு நினைக்க தோன்றுகிறது.
//நல்ல கதை, நல்லா எழுதியிருக்கீங்க.// மிக மிக நன்றி :) உற்சாகமூட்டும் வார்த்தைகள்.
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க சீதாமேடம்.:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
குறும்பூ
இரண்டு பேரும் நல்லாவே அலசி இருக்கீங்க. படிக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. குரும்பூரார் கதைகளை நானும் தேடிப்பி(ப)டிக்கிறேன்.
ராணில குரங்குகுசலா மிகவும் பிடிக்கும். குசலாவின் கொண்டை அழகு இன்னுமே கண்ணில் நிற்கிறது. குரும்பூர் குப்புசாமி ராணிமுத்துவிலும் எழுதுவார்தானே. ஆனா கதை ஞாபகம் இல்லை.
பெயர் போன எழுத்தாளரின் எழுத்துடன் ஒப்பிட்டு சொல்லி இருக்கீங்க, குறும்புக்கு சொல்லலீங்களே!! (ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பத்தான் நெனப்பூனு நீங்க சொல்றதும் கேட்குது)
தோழிகள் இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஸ்வா
ஸ்வா வாங்கோ!! வாங்கோ!! நீண்ட நாள் கழிச்சு உங்க பதிவு பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு :) மிக்க நன்றி சுவா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.