ஈரல் மிளகு வறுவல்

தேதி: September 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

ஆட்டீரல் - கால் கிலோ
வெங்காயம் - 3
இஞ்சி - கால் அங்குலத் துண்டு
பூண்டு - 2 பற்கள்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

ஆட்டீரலுடன் மல்லித் தூள், சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
பிறகு ஊற வைத்துள்ள ஈரல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, வேக வைத்து இறக்கவும்.
சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா நாக்கில் எச்சில் ஊற வைத்து வீட்டீர்கள் ஊரில் இருந்தவரை அடிக்கடி அம்மா செய்து தருவார்கள் வேலைக்கென்று வெளிநாடு வந்த பிறகு ஈரல் சாப்பிட்டு இரண்டரை வருடமாகிட்டு. ஸ்வீட் டொமேட்டோ பின்னூட்டம் பார்க்கவும், அருமையான ஈரல் ரெஸிபி. நன்றி.

உங்கள் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி _()_

parkum pothe miga arumaya irukku