ரிச் கேக் (குக்கர் முறை)

தேதி: October 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
முட்டை - 2
வெண்ணெய் - 100 கிராம்
வொய்ட் சாக்லேட் - கால் கப்
க்ரீம் - 1/3 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பொடித்த சீனி - முக்கால் கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
தூள் உப்பு - ஒன்றரை கப் (பேக் செய்ய)


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்துவிடவும். பேக் செய்யப் போகும் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெயை நன்கு தடவி, பாத்திரத்தில் பரவலாக ஒட்டும்படி ஒரு மேசைக்கரண்டி அளவு மைதா மாவைத் தூவிவிடவும்.
குக்கரினுள்ளே உப்பை பரவலாகக் கொட்டி, அதில் சில்வர் அல்லது அலுமினியம் ஸ்டாண்ட்டை வைத்து அடுப்பில் மிதமான தீயில் மூடி வைத்துவிடவும். (கேஸ்கட்டும், வெய்ட்டும் போடாமல் மூடி வைக்கவும்).
க்ரீமை ஒரு கொதி வரும்படி சூடு செய்து அடுப்பை அணைத்துவிட்டு, வொய்ட் சாக்லேட்டைச் சேர்க்கவும். சாக்லேட் உருகியதும் நன்கு கலந்துவிட்டு ஆறவிடவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியைப் போட்டு நன்கு க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடித்துக் கொள்ளவும்.
அத்துடன் முட்டை சேர்த்து நன்கு க்ரீமாக கலந்து வரும் வரை அடித்துக் கொண்டே இருக்கவும்.
பிறகு மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரைச் சலித்துச் சேர்க்கவும். அத்துடன் வெனிலா எசன்ஸ், மற்றும் க்ரீம் சாக்லேட் கலவையைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நன்கு மிருதுவான கலவையாக ஆனதும் பேக் செய்யப் போகும் பாத்திரத்தில் ஊற்றிச் சமப்படுத்திவிடவும்.
இப்போது குக்கர் மூடியைத் திறந்து பார்த்தால் உள்ளே சூடாகியிருக்கும். அதிலுள்ள ஸ்டாண்டின் மேல் மாவுக் கலவையுள்ள பாத்திரத்தை வைத்து முன்பு போலவே குக்கரை மூடி வேகவிடவும். 40 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் கேக் நன்கு உப்பலாக வந்திருக்கும். டூத் பிக் அல்லது மெல்லிய கத்தியை கேக்கினுள்ளே விட்டுப் பார்த்து ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை மெதுவாக வெளியில் எடுக்கவும். (டூத் பிக்கில் லேசாக ஒட்டியிருப்பின் மேலும் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிட்டு, பிறகு வெந்ததைச் சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்).
5 நிமிடங்கள் கழித்து கேக் உள்ள பாத்திரத்தை ஒரு தட்டில் தலைகீழாகக் கவிழ்த்து கேக்கைத் தனியாக எடுக்கவும்.
மிகவும் மிருதுவான, சாப்பிடுவதற்கும் சுவையான ரிச் கேக் தயார். மேலே ஐஸிங் செய்து அலங்கரித்துப் பரிமாறவும். கேக்கை அப்படியே துண்டுகள் போட்டு இளஞ்சூடாகவும் சாப்பிடலாம். இல்லையெனில் நன்கு ஆறவிட்டு துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்.

கேக் மாவு ஊற்றிய பாத்திரத்தை உள்ளே வைத்து குக்கரை மூடியதும் ஆர்வத்தில் அடிக்கடி திறந்து பார்க்கக்கூடாது. கேக் வாசம் வரும். எனவே திறந்து பார்க்கத் தோன்றும். ஆனாலும் 40 நிமிடங்களுக்கு முன்பாக திறக்க வேண்டாம். என்னுடைய செய்முறைப்படி கேக் ரெடியாக 50 முதல் 55 நிமிடங்கள் வரை ஆகும்.

குக்கரிலேயே பேக் செய்யும் முறையில் உள்ள அனைத்து வகையான கேக்குகளையும் செய்யலாம். பாத்திரம் மட்டும் உயரமானதாக இருப்பது நல்லது. மாவுக் கலவை ஊற்றி வைக்கும் பாத்திரம், நாம் ஊற்றும் மாவின் அளவை விட இரண்டு மடங்கு வெற்றிடமாக இருக்கும்படியான பாத்திரமாக இருக்க வேண்டும். ஏனெனில் நன்கு கேக் உப்பலாகி வரும். பாத்திரம் சிறியதாக இருந்தால் வழிந்து குக்கரின் உள்ளே ஊற்றி தீயும் வாசனை வரும். கேக் ஒன்றுமாகாது. ஆனால், அந்த வாசனையால் கேக் வீணாகிவிட்டதோ என நமக்கு பதட்டமாகி விடும்.

பேக் செய்ய உபயோகப்படுத்திய உப்பை ஆறவிட்டு, ஒரு பையில் கட்டி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது இதே போல் பேக் செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உப்பின் நிறம் மட்டுமே லேசாக மாறியிருக்கும். மற்றபடி கரையாது.

அடுப்பில் தீயின் அளவு ஆரம்பம் முதல் கேக் வெந்து முடியும் வரை ஒரே அளவில் மிதமான சூட்டிலேயே இருப்பது முக்கியம்.

சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் அளவு கண்டன்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கேற்றாற் போல் சீனியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரிச் கேக் சோ டெம்ப்டிங் சுப்பர் ரெசிபி நிச்சயம் நாளைக்கு ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரிச் கேக் சூப்பர்கேக் நான் செஞ்சுபாக்குறேன்.ஆனா என்கிட்ட ஸ்டான்ட் இல்ல ஒரு பிளேட் போட்டு வக்கிலாமா thanks

குறிப்பினை வெளியிட்ட அட்மினுக்கு முதலில் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி கனிமொழி.செய்து பார்த்துவிட்டு வந்து அவசியம் சொல்லுங்க .

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சமீமா.
இதே போல் ஸ்டாண்ட் இல்லன்னாலும் பரவாயில்லை.ரைஸ் குக்கர் ப்ளேட் வேணும்னா வைக்கலாம்.இல்லை உப்பு மேலே பாத்திரத்தை வைத்து பாருங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றிமா நான் நீங்க சொன்னாபோல் செஞ்சுபாத்து சொல்ரேன்.நீங்க துபாயில் இருக்கிங்களா எங்கனு தெரிஞ்சிக்கலாமா நானும் மயிலாடுதுரை பக்கம்தான்

உங்க‌ கேக் சூப்பரோ சூப்பர். அருமையான‌ விளக்கம் குடுத்து இருக்கீங்க‌. செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

Enkku innum simple la pannara mathri oru cake cake soolungama pls.

சமீமா....
2010 உடன் எனது துபாய் வாழ்க்கை முடிந்து விட்டது மா.....
இப்போது சிசிங்கப்பூர் இருந்துக் கொண்டிருக்கின்றேன் தோழி...
மாமியார் வீடு சங்கரன்பந்தல் பக்கம் வேலம்புதுக்குடி என்ற ஊர்.அம்மா வீடு திருவாளப்புத்தூர்

நீங்க எந்த ஊர்?

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சூப்பர். அன்றே மொபைலில் இருந்து பார்த்தேன், ஆங்கில பதிவிட மனமின்றி விட்டுட்டேன். அவசியம் செய்து பார்க்கறேன் அப்சரா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரோ சூப்பர் அப்சரா ரொம்ப ஈசியா செய்ய சொல்லி குடுத்துருக்கீங்க :) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குக்கர் கேக் ரெசிப்பி சூப்பர்..

வாழ்த்துக்கள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அக்கா இந்த செய்முறையில் உப்பு உபயோகிப்பதால் வேகும் போது கேக் உப்பாகி விடாதா?நான் இட்லி குக்கரில் உப்பு கலந்த‌ நீர் உபயோகித்து மறதியாக‌ இடியாப்பம் செய்து விட்டேன். இடியாப்பம் உப்பாகி விணாகி விட்டது.அது போன்று இதில் வாய்ப்புள்ளதா?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

appufar.... நாம் எப்போதும் பயன்படுத்தும் குக்கரிலேயே செய்யலாமா? இதனால் குக்கருக்கு எதுவும் ஆகாதா..? தெளிவுப்படுத்துங்களேன், ப்ளீஸ்....

கவிதா.

anbe sivam

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ப்ரேமா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நிச்சயமாக உப்பை உபயோகித்து செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது....
பயமோ... கவலையோ.... நிச்சயம் வேண்டாம்.
எந்த ஒரு சமையலையும் நான் இரண்டு மூன்று முறை செய்து பார்த்த பின்னரே...வெளியிடுவேன்.
நிச்சயம் நான் சொல்லியிருக்கும் இம்முறையில் செய்தீர்களேயானால் சக்ஸஸ் தான் மா....
அதற்கு நான் 100% சொல்கிறேன்.
ஊரில் இருக்கும் எனது குடும்பத்தினருக்காக நான் இம்முறையை செய்து அவர்களுக்கும் சொல்லி கொடுத்து அவர்களும் செய்துபார்த்து விட்டார்கள்.நீங்களும் நம்பிக்கையோடு முயன்று பாருங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கவிதா....
நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் பெரிய குக்கரையே தாராளமாக உபயோகப்படுத்தலாம்.ஒரு பாதிப்பும் ஏற்படாது..பயமே வேண்டாம்.
அதற்குதான் குறிப்பாக கீழே சில டிப்ஸ்களை கூறியுள்ளேன்.அதில் ஒன்றுதான் ஆரம்பம் முதல் முடிவு வரை மிதமான தீயிலேயே குக்கரை வைத்திருப்பது முக்கியம்.அப்படியிருக்க ஒரு பாதிப்பும் குக்கருக்கு ஆகாது....
முயன்று பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் தோழி ...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எப்படி இந்த பதிவ மிஸ் பண்ணினேன். ரொம்ப நல்லா இருக்கு. குக்கர்ல செய்றதா இருந்தாலும், பேருக்கு ஏத்த மாதிரியே, பாக்க ரிச்சா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். உங்களோட பதிவுக்கு நன்றி அப்சரா.

உன்னை போல் பிறரை நேசி.

appufar...
தெளிவுப்படுத்தியதற்கு நன்றி தோழி...என் இரண்டாவது மகளுக்கு இந்த‌ மாதம் 24 ஆம் தேதி 2 ஆவது பிறந்தநாள் வருகி
றது. இந்த‌ கேக் ஐ முயற்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். செய்து பார்த்து விட்டு கண்டிப்பாக‌ பின்னூட்டம் அளிக்கிறேன்...சரியா?

கவிதா.

anbe sivam

சூப்பர் பா.என்னிடம் மைக்ரோஓவன் இல்லை.குக்கரில் செய்துவிட்டு எப்ப்படி இருந்தது என்று சொல்கிறேன் டா

முட்டை போடாம‌ கேக் செய்ய‌ முடியுமா??

நிச்சயமாக முட்டை இல்லாமல் செய்யலாம்.அரை டின் கண்டன்ஸ்ட் மில்க் அதற்கு பதிலாக ஊற்ற வேண்டும்.சீனியை அதற்கு தகுந்தார் போல் குறைத்துக் கொள்ளவும்.நிச்சயம் நன்றாக இருக்கும்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என்னுடைய கேக்கு மேல் பகுதி கெட்டியாக இருஇந்தது .நடு பகுதி வேகாமல் அப்படியே இருந்தது.1 மனீ நேரம் வைத்தும் அப்ப்டியே இருந்தது.Bலென்டெர் இல்லாததால் கையில் மிக்ஷ் செய்தென்.கேக்கும் ஜவ்வு போல் இருந்தது
மைதா 250 கிராம் போட்டேன். கீரிம் இல்லாததால் codensed மில்க் 1/4 cஉப் சேஇர்தென்
என்ன தவறு என்று சொல்லுங்கள் please.

ரிச் கேக் பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி. நான் முதல் முறையாக கேக் செய்ய போகிறேன். கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள் இருந்தால் சொல்லுங்கள்.ஐசிங் செய்வது எப்படி என்று எனக்கு தெரியாது சொல்லுங்கள்

LOVE IS LIFE