தேதி: October 2, 2014
ப்ளைவுட்
க்ளூ கன்
பென்சில்
கத்தி
பென்சிலால் ப்ளைவுட்டில் பட்டர்ஃப்ளை வடிவத்தை வரைந்து, அதில் க்ளூ கன்னை வைத்து ஓரங்களை மட்டும் வரைந்து கொள்ளவும். (வரையும் போது இடைவெளிகள் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போல தொடர்ந்து வரையவும்).

ஓரங்களை வரைந்த பிறகு அதன் உள்பகுதியிலும் க்ளூவை நிரப்பவும்.

பட்டர்ஃப்ளை வடிவம் முழுவதும் க்ளூவை நிரப்பிவிட்டு, சிறிது நேரம் காயவிடவும்.

காய்ந்ததும் கத்தியால் சிறிது சிறிதாக ஓரங்களிலிருந்து கீறிவிட்டு பெயர்த்து எடுக்கவும்.

எளிதாகச் செய்யக்கூடிய, க்ளூவில் செய்த அழகான பட்டர்ஃப்ளை தயார்.

Comments
செண்பகா
ஆஹா! அழகு. ஐடியாவும் அருமை. 3D printer வேலை போல வந்திருக்கிறது.
இப்போது கைவசம் இருக்கும் ஸ்டிக்ஸ் போதாது. வாங்கியதும் நிச்சயம் முயற்சி செய்து பார்ப்பேன்.
- இமா க்றிஸ்
SUPERRRR SENBAGA
SUPERRRR SENBAGA
வித்தியாசமான ஐடியா
இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துக்கள்.
செண்பகா - பட்டாம்பூச்சி
செய்தாச்சு. மொத்தமான க்ளூ ஸ்டிக்ல 1/3 எடுத்துது. என் கை உங்க அளவு ஸ்ட்ராங் இல்லை. முழுசா முடிக்கிறதுக்குள்ள கை வலி ஆரம்பிச்சாச்சு. ஆனாலும் இமா இதோட விடப் போறது இல்லை. பிடிச்சு இருக்கு இந்த வேலை. தொடர்ந்து ப்ராக்டிஸ் பண்ணப் போறேன். டிஃபிகல்ட்டி லெவல் ஈஸின்னு சொல்ல முடியல. மீடியம் போடலாம் என்பது என் அபிப்பிராயம்.
இந்த முறை குட்டிக் குட்டியா சில தப்பு பண்ணிட்டேன். ஆர்வக் கோளாறுல நீங்க ப்ளைவுட் என்று சொன்னதைக் கவனிக்காம ஹார்ட்போட்ல செய்தேன். மிக மிக மெல்லிசா ஒரு லேயர் உரிஞ்சு வந்துது. அது ஒரு கலரைக் கொடுத்து இருக்கு. இரவுல செய்ற வேலை இது இல்லை என்றும் புரிஞ்சுது. பூச்சியின் உணர்கொம்பு... மெல்லிசா வைச்சேன். திக்காக போடணும். உடல் வரையும் போதும்... போர்ட்டை நிமிர்த்திட்டேன். கொஞ்சம் வழிஞ்சு கோணலாகிப் போச்சு. ;( திரும்ப ட்ரை பண்ணப் போறேன். இன்று செய்தது நாளை பகல் ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன். இப்போ எடுத்தால் நல்லா வராது.
ரொம்ப என்ஜாய் பண்ணேன். நன்றி செண்பகா.
- இமா க்றிஸ்
Simple and super
Simple and super
Ellam Nanmaikee
butterfly
Super